Published:Updated:

சிறப்பான செயல்பாடு... வாராக்கடனைக் குறைத்த பொதுத்துறை வங்கிகள்!

வங்கி
பிரீமியம் ஸ்டோரி
வங்கி

வங்கி

சிறப்பான செயல்பாடு... வாராக்கடனைக் குறைத்த பொதுத்துறை வங்கிகள்!

வங்கி

Published:Updated:
வங்கி
பிரீமியம் ஸ்டோரி
வங்கி

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இந்த ஆண்டின் முதலாம் அரையாண்டில், இதுவரை வெளியான பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் ரூ.1,771 கோடி. கடந்த ஆண்டின் முதலாம் அரையாண்டில் இதே வங்கிகள் சுமார் ரூ.25,416 கோடி நஷ்டத்தைச் சந்தித்தன.

அதுமட்டுமல்ல, பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் சுமார் 9.84 சதவிகிதமாகச் சரிவடைந்திருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.7.29 லட்சம் கோடியிலிருந்து, இந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.6.57 லட்சம் கோடியாகக் குறைந்திருக்கிறது. மேலும், பொதுத்துறை வங்கிகளின் நிகர வாராக்கடன் 24.21% குறைந்திருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.3.46 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன், இந்த ஆண்டு ரூ.2.62 லட்சம் கோடியாகக் குறைந்திருக்கிறது.

டாக்டர் எஸ்.பத்மாவதி, 
சீனியர் எகனாமிஸ்ட், ஐ.ஓ.பி.
டாக்டர் எஸ்.பத்மாவதி, சீனியர் எகனாமிஸ்ட், ஐ.ஓ.பி.

இதனால் வாராக்கடனுக்கும், அதற்காக வங்கிகள் ஒதுக்கும் தொகைக்குமான விகிதாசாரம் (Provision Coverage Ratio) சுமார் 70% முதல் 80% வரை உள்ளது. அதாவது, 100 ரூபாய் வாராக்கடனுக்கு, வங்கிகள் தங்கள் லாபத்திலிருந்து சுமார் 70 - 80 ரூபாய் வரை ஒதுக்கிவைத்திருக்கின்றன.

தற்போது அரசும் ரிசர்வ் வங்கியும் பலவகையான நிதிச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்திவருகின்றன. அரசின் தொடர் முயற்சியாலும், வங்கிகளின் சிறப்பான செயல்பாடுகளாலும் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் வருங்காலத்தில் கணிசமாகக் குறைந்து, எல்லா பொதுத்துறை வங்கிகளும் லாபப் பாதைக்குத் திரும்பும் என்று எதிர்பார்ப்போம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!