Published:Updated:

‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு..?’ - கோவையைக் கலங்கடித்த இரவலர்கள்!

கோவை
பிரீமியம் ஸ்டோரி
கோவை

சாலையில் சுற்றித் திரியும் ஆதரவற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதுடன், பிச்சை எடுப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில்தான் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.

வெட்டுக்கிளி படையெடுப்புபோல, சில மாதங்களாக கோவையை முற்றுகையிட்டிருக்கிறார்கள் இரவலர்கள். வீட்டிலிருந்து புறப்பட்டால், தெருமுனை, பஸ் ஸ்டாண்ட், சிக்னல், கோயில், பார்க் என்று திரும்பிய திசையெல்லாம் அவர்கள்தான். கையில் குழந்தை, காலில் கட்டு, ஸ்டிக்கர், பொம்மை விற்பனை, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நிதி கேட்பது என்று டிசைன் டிசைனான டெக்னிக்குகளில் கையேந்துபவர்களின் தொல்லைகளால் விழிபிதுங்கியிருக்கின்றனர் கோவை மக்கள்!

‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ என்று மக்கள் புலம்பத் தொடங்கியதும், காவல்துறை களமிறங்கியது. இரண்டு மாதங்களில் சுமார் 200 இரவலர்களை மீட்டிருக்கிறது. “இவர்களில் பெரும்பாலானவர்கள் பீகார், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கோவை, திருப்பூர், ஈரோடு, பழநி ஆகிய பகுதிகளில்தான் பணப்புழக்கம் அதிகம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு இங்கே படையெடுத்திருக்கிறார்கள்” என்கிறார்கள் போலீஸார்.

‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு..?’ - கோவையைக் கலங்கடித்த இரவலர்கள்!
‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு..?’ - கோவையைக் கலங்கடித்த இரவலர்கள்!
‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு..?’ - கோவையைக் கலங்கடித்த இரவலர்கள்!
‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு..?’ - கோவையைக் கலங்கடித்த இரவலர்கள்!

இது குறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “பிச்சைக்காரர்களுக்கு என்று தனி நெட்வொர்க் இயங்குகிறது. கோவை துடியலூர் பகுதியில் பிச்சைக்காரர்கள் தங்குவதற்கென்றே மிகப்பெரிய கட்டடத்தை வாடகைக்கு எடுத்திருந்தது ஒரு டீம். லோக்கலில் குழந்தையை வாடகைக்கு எடுத்து பெண்களுடன் பிச்சையெடுக்க அனுப்புகிறார்கள் சில புரோக்கர்கள். வருமானத்தில் 20-30 சதவிகிதம் கமிஷன்தான் பிச்சையெடுப்ப வர்களுக்கு வரும். மீதித் தொகையெல்லாம் அந்த நெட்வொர்க்குக்கே போய்விடும்.

போலீஸ் நடவடிக்கையால் உஷாராகிவிட்டது இந்தக் கும்பல். ஊரிலிருந்து கிளம்பும்போதே கையில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை வைத்துக்கொள்கிறார்கள். பிச்சை எடுப்பது போல செல்லாமல், பலூன் விற்பது, கார் கண்ணாடிகளைக் கழுவது என வியாபாரிகள் போர்வையில் வந்து காசு கேட்டு தொல்லை செய்கிறார்கள். இதையும் மீறி நாங்கள் அவர்களைப் பிடித்தாலும், சம்பந்தப்பட்டவர்களின் வழக்கறிஞர் அல்லது உறவினர் என்று சொல்லி யாராவது ஒருவர் உடனடியாக அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். இன்னும் சிலர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நிதி திரட்டுகிறோம் என்ற பெயரிலும் கிளம்பியுள்ளனர். டுபாக்கூர் இல்லங்கள்தான் பணம் சம்பாதிப்பதற்காக, பெண்களை வைத்து வசூல் வேட்டையாடுகிறார்கள். இவர்களையும், ‘எங்கள் அறக்கட்டளை ஊழியர்’ என்று சொல்லி விடுவிக்க வக்கீல்கள் வருகிறார்கள். இன்னும் சிலர் அரசியல் புள்ளிகளின் உதவியை நாடி எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்’’ என்கின்றனர்.

‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு..?’ - கோவையைக் கலங்கடித்த இரவலர்கள்!
‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு..?’ - கோவையைக் கலங்கடித்த இரவலர்கள்!
‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு..?’ - கோவையைக் கலங்கடித்த இரவலர்கள்!
‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு..?’ - கோவையைக் கலங்கடித்த இரவலர்கள்!

இதற்கிடையே, “பிச்சைக்காரர்களையும் மனநோயாளி களையும் மீட்கிறோம் என்ற பெயரில், கிறிஸ்தவ மிஷனரிகளின் உதவியுடன் பொதுமக்களையும் பிடித்துச் சென்று மொட்டை யடித்து மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறார்கள் காவல்துறை யினர்” என்று எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க-வினர்.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் பேசியபோது, “சாலையில் சுற்றித் திரியும் ஆதரவற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதுடன், பிச்சை எடுப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில்தான் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறோம். தவறான நபர்களை பிடித்தது முதல் மொட்டை அடித்தது என அந்த குறிப்பிட்ட என்.ஜி.ஓ பல்வேறு தவறுகளில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்து, அந்த என்.ஜி.ஓ தொடர்புடைய 6 பேரை கைது செய்துவிட்டோம். மேலும், இதுகுறித்து கலெக்டர் ஒருதனி விசராணைக் குழு அமைத்து விசாரித்துவருகிறார்’ என்றார்.