மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்மையில் விடுமுறை பயணச் சலுகை திட்டம் (LTC cash voucher scheme) ஒன்றை அறிவித்தார். இதைப் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளாமலே, வரிச் சலுகை பெற முடியும் என அவர் தெரிவித்தார். இது குறித்து விரிவாக விளக்கிச் சொல்லும்படி சென்னையின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான கே.ஆர்.சத்தியநாராயணனிடம் கேட்டோம்.

“எல்.டி.சி சலுகை என்பது நான்கு ஆண்டுகளைக் கொண்ட கால வரம்பாகும். அதாவது, இந்த நான்கு ஆண்டுக்குள் இரண்டு முறை ஒருவர் சுற்றுலா பயணம் செல்வதன்மூலம் அவர் பெற்ற விடுமுறை பயணத் தொகையைச் செலவிட்டு, அதற்கான பயண ஆதாரத்தைக் கொடுத்தால் இந்தத் தொகைக்கு வரி பிடிப்பது தவிர்க்கப்படும். 2018 ஜனவரி 1 முதல் 2021 டிசம்பர் 31 வரையிலான நான்கு ஆண்டுகளில் கடைசி நிதியாண்டான 2020-ல் சுற்றுலா பயணம் மேற்கொண்டு எல்.டி.சி வரிச் சலுகை பெற்றுக்கொள்ளலாம் எனத் திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு ஊழியர், இந்தச் சலுகையைப் பெற முடியும். ஒருவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 10 நாள் சம்பளம் எல்.டி.சி ஆக தரப்படும். இந்தப் பணத்தைக் கொண்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயணம் மேற்கொண்டு அதற்கான பயணச் செலவு ஆதாரத்தைக் கொடுத்தால், அந்தத் தொகைக்கு வரி பிடிக்க மாட்டார்கள்.

அரசு ஊழியரின் பதவிக்கேற்ப விமானத்தில் பிசினஸ் கிளாஸ் (ரூ.36,000), எகனாமி கிளாஸ் (ரூ.20,000), ரயில் (ரூ.6,000) ஆகியவற்றின் இந்தப் பயணத்தை மேற்கொள்ளலாம். உதாரணமாக, ஒருவருக்கு எல்.டி.ஏ ரூ.39,000 கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர் குடும்பத்தில் நான்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விமானத்தில் எக்னாமிக் கிளாஸில் பயணம் மேற்கொள்கிறார்கள். இதற்கான பயணச் செலவு ரூ.80,000. (இந்தப் பயணச் செலவும் எல்.டி.ஏ-வுடன் சேர்ந்தது. இதற்கும் வரிச் சலுகை உண்டு) இதன் மூன்று மடங்கு ரூ.2,40,000 மற்றும் எல்.டி.ஏ ரூ.39,000 ஆக மொத்தம் ரூ.2,79,000-க்கு இப்போது பொருள்கள் வாங்கினால் அல்லது ஏதாவது சேவையைப் பயன்படுத்தினால், வரி கட்ட வேண்டியிருக்காது.

எல்.டி.ஏ 100% ரூ. 39,000 மற்றும் போக்குவரத்து செலவில் 50% அதாவது, ரூ. 40,000ஆக மொத்தம் ரூ.79,000 முன்பணமாகக் கிடைக்கும். மீதியுள்ள ரூ.2 லட்சத்தைக் கையிலிருந்து செலவு செய்தால், மீதியுள்ள ரூ.40,000 கிடைக்கும்.

கூடவே இதற்கு நான்கு நிபந்தனைகள் விதித்திருக்கிறது மத்திய அரசாங்கம். 1. வாங்குகிற அல்லது பெறுகிற சேவைக்கு ஜி.எஸ்.டி வரி 12% மற்றும் மேல் இருக்க வேண்டும். (தங்கநகை வாங்க முடியாது. காரணம், அதற்கு ஜி.எஸ்.டி 3% மட்டுமே).

2. வாங்கும் பொருள், சேவைக்கு (டேர்ம் இன்ஷூரன்ஸ், யூலிப் பாலிசி பிரீமியம் போன்றவை) டிஜிட்டல் முறையில்தான் பணம் செலுத்த வேண்டும். 3. இந்தச் சலுகை 31-3-2021 வரைதான். 4. ஜி.எஸ்.டி செலுத்தியதற்கான இன்வாய்ஸ் மற்றும் பொருள்கள் வாங்கிய தற்கான ரசீதை இணைத்துக் கொடுக்கவேண்டும்.

ஒருவர் ரூ.2,79,000 செலவு செய்ய வேண்டிய நிலையில், ரூ.2,00,000 மட்டுமே செலவு செய்திருக்கிறார் என்றால், அவருக்கு ரூ.39,000–ல் ரூ.27,960 மட்டுமே கிடைக்கும். அதாவது, ரூ.2,40,000–ல் ரூ.57,340 மட்டுமே கிடைக்கும். ஆக, எல்.டி.சி வரிச் சலுகை ரூ.85,300 மட்டுமே கிடைக்கும். ரூ.2,79,000 அந்த ஊழியருக்கு அளிக்கப்பட்டிருந்தால், ரூ.85,300 மட்டும் கழிக்கப்பட்டு மீதியுள்ள தொகை அடுத்து வரும் மாதங்களில் சம்பளத்தில் பிடிக்கப்படும்.

எனவே, என்ன பொருள் வாங்கப்போகிறீர்கள், எவ்வளவு செலவிடப் போகிறீர்கள், அதிகபட்சம் எவ்வளவு தொகை செலவிட வேண்டும் என்பதையெல்லாம் சரியாகக் கணக்கிட்டு, அதன் பிறகு, செயல்படுவது நல்லது.’’