Published:Updated:

BEST OF வலைபாயுதே - 2020

சிம்பு
பிரீமியம் ஸ்டோரி
சிம்பு

ஆசைப்பட்டது கிடைக்கலைன்னா அது அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாதுன்னு ஆசைப்படணும்.

BEST OF வலைபாயுதே - 2020

ஆசைப்பட்டது கிடைக்கலைன்னா அது அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாதுன்னு ஆசைப்படணும்.

Published:Updated:
சிம்பு
பிரீமியம் ஸ்டோரி
சிம்பு

twitter.com/ItsJokker

‘கொடுமை’ என்பது யாதெனில்,

‘நாலு இடத்துக்குப் போனா வீட்டைப் பாதுகாக்கும்’ன்னு நாயை வளர்த்து, அதோட பாதுகாப்புக்காக ‘நாம நாலு இடத்துக்கு’ போகாம இருப்பதே..!

twitter.com/RavikumarMGR

எல்லா சாதி மயிரையும் குப்பையில் போட்டார் சலூன் கடைக்காரர்!

twitter.com/sweetsudha1

அப்பாவின் பெயர் கொண்டவர்களை, மனதுக்கு அனிச்சையாய்ப் பிடித்துப் போகிறது!

twitter.com/iKrishS

BJP in 2025: ஒரே நாடு எதுக்கு தேர்தல்?

twitter.com/poopoonga

இந்த ‘வேலியே பயிரை மேயலாமா’ தலைப்பைக் கொஞ்சம் நிப்பாட்டுங்க! வேலிக்குத் தெரியுமா, அதோட வேலை பயிரைக் காப்பாத்துறதுன்னு! இல்ல, பயிருக்குத்தான் தெரியுமா? ‘பாலியல் வன்கொடுமை’ன்னு நேரா சொல்லிப் பழகுங்க.

twitter.com/chithradevi_91

நாலு கோடியே எழுபத்து மூணு லட்சம் ஓட்டுகளாம். என் வயத்தெரிச்சல கிளப்புறதே இந்த பிக்பாஸ் பய வேலையாப்போச்சு.

- டாக்டர் அன்புமணி ராமதாஸ்

Yuvan - பாட்டு படிடி...
Yuvan - பாட்டு படிடி...

twitter.com/isatyagrahaa

தெரிந்தோ தெரியாமலோ ஒரு 9v பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்குப் பதிலாக ஆளும் கட்சியில் சேர்ந்து ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேருந்தைக் கொளுத்தி 3 பெண்களை உயிருடன் எரித்து சிறைக்குச் சென்று நன்னடத்தை மூலம் சில ஆண்டுகளில் வெளியில் வந்துவிடலாம் என்ற அளவுக்கு இறங்கிவிட்டன நமது சட்டங்கள்.

twitter.com/ItsJokker

இப்போலாம் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிட்டு கோச்சுக்கிட்டு வந்தாகூட பெருசா கண்டுக்குறது இல்லை. ஆனா சொந்தக்காரங்க இருக்கிற ‘வாட்ஸப் குரூப்ப’ விட்டு எக்ஸீட் ஆயிட்டோம்னா அது பெரிய பிரச்னையாகிடறது.

twitter.com/ramesh_twetz

திடீர்னு யாராவது கைத்துப்பாக்கிய எடுத்து நெத்திப்பொட்டுல வச்சாகூட ‘டெம்ப்ரேச்சர்’தான் செக் பண்ணுறாங்கன்னு அசால்டா நின்னுட்டு இருப்போம் போல..! # கொரோனாப் பரிதாபம்.

twitter.com/sThivagaran

ஒருவர் உங்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டாரா? அப்படியானால் நிச்சயம் உங்களைப்பற்றி மற்றவர்களிடம் பேச ஆரம்பித்திருப்பார்!

twitter.com/HariprabuGuru

ஆல்கஹாலைத் தொட்டுக்கூடப் பார்த்ததில்லைன்னு இனி யாரும் சொல்ல முடியாது. `சானிட்டைசர்!’

twitter.com/Suyanalavaathi

யூடியூப்ல சமையல் வீடியோ பாத்து ரசம் வைக்கலாம்னு ஆரம்பிச்சா, கடுகை எண்ணெய்ல தாளிக்கவும்னு சொல்லும்போது ரெண்டு Ad போடுறான். ஸ்கிப் பண்ணுறதுக்குள்ள கடுகு கருகிப் போயிருது!

டேய் யூடியூப்...

twitter.com/Vkarthik_puthur

மயிலபுடிச்சு தீனி கொடுத்து போட்டோக்கு போஸு கொடுக்கிற உலகம்!

HumansOfIndia - இந்தியா தாங்க முடியாத கனம்
HumansOfIndia - இந்தியா தாங்க முடியாத கனம்

twitter.com/thoatta

IPLல வச்சு காசு பார்த்து IPLலுக்கே டைட்டில் ஸ்பான்சர் ஆகுறதெல்லாம், உண்டியல உடைச்செடுத்து, கோயிலுக்கு செங்கல் ஸ்பான்சர் செய்யுற மாதிரி.

facebook.com/kartikeyan maddy

சப் டைட்டிலோட பாத்த எல்லாப் படத்துக்கும் என்கிட்ட ஒரு வெர்சன் கதையும் வசனமும் இருக்கு.

twitter.com/Kozhiyaar

“எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கீங்களே!” என்று மகனுக்கு விழும் திட்டு, நமக்கான மறைமுகத் தாக்குதல் என்றறிக!

.twitter.com/GreeseDabba2

கடையில பில்லு கட்ட க்யூல நிக்கும்போது பின்னால நிக்கறவன் ரொம்பப் பக்கமா நிக்கறானேன்னு முன்னால கொஞ்சம் தள்ளி நின்னா அவனும் நகர்ந்து முன்னால வர்றான்...

உங்களை வைச்சுகிட்டு சோசியல் டிஸ்டன்ஸ் என்ன, சோசியல் மீடியால கூட டிஸ்டன்ஸ் மெய்ன்டெய்ன் பண்ண முடியாதுடா அப்ரசன்டுகளா.

facebook.com/gokul prasad

இந்த நூற்றாண்டில் தமிழர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆகச்சிறந்த பின்நவீனத்துவ பிரச்னை - ஸ்டாலின் தளபதியா விஜய் தளபதியா என்பது தான்.

twitter.com/thirumarant

சென்னைல இருந்து போனவங்களாம் அவங்க பரப்பி கவுன்ட் ஏத்தப் போறாங்க... சென்னை கவுன்ட் குறையப் போவுது. அங்க அதிகமானதும் அங்கிருந்து தப்பிச்சி இங்க திரும்ப ஓடி வரப்போறாங்க... இங்க மறுபடியும் அதிகமாகப்போவுது... இப்படியே ஜாலியா வெளாடிக்கிட்டு இருக்கப்போறோம்னு மட்டும் தெரியுது...

Sai Deena - ஒரு நாயகன் உருவாகிறான்
Sai Deena - ஒரு நாயகன் உருவாகிறான்

twitter.com/shivaas_twitz

At office -

மாஸ்க் போட்டுக்கணும், அடிக்கடி கையைக் கழுவணும், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்கணும், அடிக்கடி சானிட்டைசர் யூஸ் பண்ணணும், இருமல் சத்தம் கேட்டா யாருன்னு கவனிக்கணும்... இதுக்கு இடையில வேலையும் செய்யணும்னா எப்படி சார்?

twitter.com/angry_birdu

சாதிப் பெருமையை ஒருத்தர் மனசுல ஏன் ஈஸியா ஊட்ட முடியுதுன்னா, அது மட்டும்தான் தான் எந்த ஒரு சாதனையும் செய்யாம, துரும்பக்கூட கிள்ளிப் போடாம, ப்ரீயா கிடைக்கிற பெருமை.

ஒரு செயலைச் செய்து அதன் மூலமா பெருமையை அடைய முடியாத கையாலாகாதவர்களுக்கு சாதிப்பெருமை தான் ஒரே வழி!

facebook.com/Vinayaga Murugan

மிஷ்கின் அகிராகுரசோவாவின் செவன் சாமுராய் படத்தை ஐந்தாயிரம் முறை பார்த்தாகச் சொல்கிறார். அதுபோல நந்தலாலா படத்தில் இளையராஜா இசையைப் பத்தாயிரம்முறை கேட்டதாகச் சொல்கிறார். ஐம்பதாயிரம் புத்தகங்கள் படித்திருப்பதாகச் சொல்கிறார். பீத்தோவனோட சிம்பனியை ஆயிரம் முறை கேட்டதாகச் சொல்கிறார். இந்த நூறு ஐந்நூறெல்லாம் அவர் பார்த்ததே இல்லை போலிருக்கு. எனக்கென்னவோ அவரிடம் காலையில் என்ன சாப்பிட்டீங்க என்று கேட்டால்கூட ஆயிரம் இட்லி, இரண்டாயிரம் பூரின்னு சொல்வார் போலிருக்கு.

twitter.com/AadhiraiPonni

“கறுப்பா இருந்தாலும் களையான முகம்” - இதுல வெளிப்படையா ஒளிஞ்சிருக்கற இசம் இருக்கே...

twitter.com/Thaadikkaran

‘அம்மாமேல சத்தியமா சொல்லு’ என்பது அந்தக் காலத்து உண்மை கண்டறியும் சோதனை..!

facebook.com/Isai Karukkal

இந்த `ரூமி’ இன்னும் எவ்வளவுதான்டா சொல்லியிருக்கார்.

twitter.com/naaraju

தற்காலிகமாவாச்சும், ‘ஆன்லைன் வசதிகள், அவை பற்றிய அறிவு, ஐடியா உள்ள பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு மட்டும்தான் கல்வி’ன்ற ஒரு நிலைமை வந்துடுச்சுல்ல!

twitter.com/shivaas_twitz

நேபாளத்துக்குத் தக்க பதிலடி கொடுத்துட்டோம்.

எப்படி?

எங்க ஏரியா கூர்க்கா இன்னைக்குக் காசு கேட்டு வந்தார்... காசு கொடுக்கல.

facebook.com/Aadhavan Dheetchanya

புதிய பாராளுமன்றம் கட்ட ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் 14 லட்சம் வெண்டிலேட்டர்களை வாங்கி பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றமுடியும்.

twitter.com/vandavaalam_

வொர்க் ப்ரம் ஹோம் தொடருமேயானால், சைலன்ட் மிக்ஸி சீக்கிரமே கண்டுபிடிக்கப்படும்.

Mohanlal - இது சீசன் - 2
Mohanlal - இது சீசன் - 2

twitter.com/thoatta

Lockdown-ல தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள். 1) மில்க் லெமன் டீ போடுறேன்னு கொதிக்கிற பால்ல லெமன பிழிஞ்சா பால் கெட்டுடும். 2) அஞ்சாறு பாத்திரங்களை விளக்கியவுடன் கழுவிடணும், மொத்தமா வாஷ் பண்ணினா பிசுபிசுக்கும்.

twitter.com/shivaas_twitz

பர்சனல் லோன் விண்ணப்பப் படிவத்துல கையெழுத்து போட வேண்டிய இடத்துல பெருக்கல் குறி போட்டிருப்பது, ‘தப்பான முடிவு எடுக்குற’ என்பதன் குறியீடு.

twitter.com/mohanramko

பிளாட்பாரத்தில் இருந்து எட்டிப் பார்த்தா, ட்ரெயின் சீக்கிரம் வந்துவிடும் என்பது நம்பிக்கை.

twitter.com/mekalapugazh

ஒரு அமைச்சர் சிறுவனை அழைத்துச் செருப்பைக் கழற்றச் சொன்னதெல்லாம்... ஒரு பேசுபொருளாக மாறுவதென்பது வடக்கேயெல்லாம் நடக்கவே வாய்ப்பில்லைதானே! தமிழகம் பெரியார் மண் என்பதற்கு இதுவும்தான் ஒரு காரணம்.

twitter.com/gips_twitz

ஏன் லேட்டுனு மனைவி கேட்கும்போது, கணவனுக்குள் ஒரு சீமான் உருவாகிறான்.

facebook.com/Ilango Krishnan

எல்லாவற்றுக்கும் காரணம் நேருதான் சார். நேரு மட்டும் எல்.ஐ.சி-யைத் தொடங்காம இருந்திருந்தா நாங்க ஏன் விற்கப்போறோம்?

twitter.com/thirumurugan Gandhi

மோடி படித்ததற்கான டிகிரி சான்றிதழை சமர்ப்பிக்கச் சொல்லிய டில்லி உயர்நீதிமன்ற வழக்கை, வழக்கம்போல ஒத்திவைக்கக் கேட்டுக்கொண்டது அரசு. வழக்கறிஞர் இல்லாததால் வாய்தா வாங்கியிருக்கிறார்கள். தன் டிகிரி ஆவணத்தையே காட்ட இயலாத ஒருவர் 5,8ம் வகுப்புக் குழந்தைகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தச் சொல்கிறார்.

twitter.com/hajamydeennks

எந்த வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் முதலில் பரவுவது வாட்ஸப்பில்தான்!

twitter.com/i_soruba

எமோஷனல் பிளாக்மெயிலுக்கு அடுத்தாப்ல மிகப்பெரிய குடும்ப வன்முறை, பாத்திரம் துலக்கிட்ருக்கறப்ப அடுத்தடுத்து அதைக் கொண்டாந்து சிங்க்ல போடறது.

twitter.com/RahimGazzali

டேபிளில் பிரித்து வைத்த ரசப்பொட்டலத்தை நிறுத்துவதும் நாய் வாலை நிமிர்த்துவதும் ஒன்றுதான், நிற்கவே நிற்காது.

twitter.com/Buddhan_

கார்ல போறப்ப கேக்கிறதுக்கு ராஜா பாட்டு ப்ளே லிஸ்ட் ரெடி பண்ணியாச்சு.இனி கார் வாங்க வேண்டியது மட்டுந்தான் பாக்கி.

twitter.com/manipmp

அசைவ விருந்தில் நமக்குத் தெரிந்தவர் பந்தி பரிமாறினால் வரும் சந்தோஷத்துக்கு ஈடு இணை கிடையாது.

twitter.com/swaravaithee

மத்த நாட்டுகாரன்லாம் ரேபிட் டெஸ்ட் கிட்டும், பிபிஇ கிட்டும் வாங்கிட்டு இருந்தப்ப ஒருத்தன் மட்டும் எம்.எல்.ஏக்களை வாங்கிட்டு இருந்தான்.

twitter.com/saravankavi

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்துத் தெளிவான முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்.

குழப்பற முடிவை மட்டும் இவர் அறிவிப்பார்போல...?

Simbu - நான் எப்டி இருக்கேன்?
Simbu - நான் எப்டி இருக்கேன்?
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

twitter.com/sweetsudha1

சமகாலத்துப் பெண்களுக்கு, ஒரு கார்ப்பரேட் கம்பெனி வேலை தரும் தன்னம்பிக்கையை, ஒரு நல்ல கணவனால் தர முடிவதில்லை!

twitter.com/SriviShiva

முதல் 20 நிமிசம் கும்மானிங் மிஸ், ஹேப்பி மார்னிங் மேம்னு சொல்லிட்ருந்தானுக. ஒரு வழியா எல்லாரையும் அமைதிப்படுத்தி “லெட்ஸ் ஸ்டார்ட் தி க்ளாஸ்”னு சொல்லுது மிஸ். மறுபடியும் கும்மானிங் மிஸ்னு ஆரம்பிக்கிறாய்ங்க இந்த ஒன்னாங் கிளாஸ் சுண்டைக்காய்ஸ்

twitter.com/IamUzhavan

பீன்ஸையும் மிளகாயையும் பிரித்தறிய முடியா வண்ணம், இரண்டையும் ஒரே அளவில் வெட்டி சாம்பாரில் போடுவது குடும்ப வன்முறையில் வராதா கனம் நீதிபதி அவர்களே..!

twitter.com/yaar_ni

20 லட்சம் கோடின்னு சொன்ன உடனே பணம்னு நினைச்சியா? இந்தா கொண்டக் கடலை!

twitter.com/sundartsp

நமக்குப் பிடிச்ச பாட்டு சன் லைப்ல வருதா, சன் மியூசிக்ல வருதான்னு பார்த்தே நம்ம வயசைக் கண்டுபிடிச்சிடலாம்.

twitter.com/mekalapugazh

வெங்காயம் கிலோ நூறு ரூபாய்க்கு வாங்கி மக்கள் எளிதில் பழகிவிட்டார்கள்... இந்த ஜோக் எழுத்தாளர்கள்தான் அதிலிருந்து வெளியேறச் சிரமப்படுகிறார்கள்போல.

twitter.com/kumarfaculty

பொதுவில் ஒரு விஷயம் பேசிக்கொண்டு இருக்கும்போது நாம் சொல்வதை அப்படியே அவருடைய கருத்தைப் போலவே திருப்பிச் சொல்லும் ஒரு நண்பர் எல்லோருக்கும் இருப்பார்கள்.

twitter.com/manipmp

ஆசைப்பட்டது கிடைக்கலைன்னா

அது அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாதுன்னு ஆசைப்படணும்.

twitter.com/salemsiva25

மனைவியிடம் பேசிய தற்பெருமைகள் தவறு என்பது குழந்தைகளை நம்மிடத்தில் தனியே விட்டுச்சென்ற போது தெரிந்துவிடும்..!

twitter.com/HariprabuGuru

103 கிலோ தங்கத்தை காணுமுங்கய்யா.

சிபிஐ விசாரணைக்கு வேணும்னா உத்தரவு போடட்டுமா.

அய்யா, காணாமப்போனதே சிபிஐ ஆபீஸ்லதாங்கய்யா.

twitter.com/pachchakkili

மாலையில் அடிவாங்கிய குழந்தை இரவில் உறங்கும்போது தடவிக்கொடுத்து அப்பாக்கள் கேட்கும் மன்னிப்பு குழந்தைகளுக்குத் தெரிந்ததேயில்லை.