Published:Updated:

பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே!

ரஜினி - கமல்
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி - கமல்

நானே திறப்பு விழாவுக்குப் போட்டுக்க சீன டிரஸ் தைக்கப் போய்க்கிட்டு இருக்கேன், இவுங்க வேற!

witter.com/Greesedabba2

ஹோட்டல்ல மாஸ்க்கைக் கழட்டி டிஷ்யூ பேப்பர் மேல வச்சான். சாப்ட்டு முடிஞ்சதும், டிஷ்யூ பேப்பரை எடுத்து வாயைத் துடைச்சான், மாஸ்க்கை எடுத்து மாட்டிட்டு கிளம்பிட்டான். அன்னபூரணி தாயே... இந்த மாக்கானுகளை நீதான் காப்பாத்தணும்!

twitter.com/sultan_Twitz

‘‘யார்ரா நீ, நியூ இயர் விஷ் அனுப்பிட்டு இருக்க..?’’

‘‘பதறாத... நானும் உன் கான்டக்ட் லிஸ்ட்லதான் இருக்கேன். ஏதாவது பெஸ்டிவல் வர்றப்ப மட்டும் வந்து விஷ் பண்ணிட்டுப் போவேன்.’’

twitter.com/thenmozhi_ms

ரவாவுல உப்பு சேர்த்தா உப்புமா, சர்க்கரை சேர்த்தா கேசரி. அதனாலதான் உன் சமையலறையில் நான் உப்பா, சர்க்கரையான்னு பாடுனாங்களோ.

Manju Warrier: வாழ்ந்தா!
Manju Warrier: வாழ்ந்தா!

twitter.com/kadalodi23

‘உதயநிதியை அமைச்சர் ஆக்குறது பத்தில்லாம் பேசக் கூடாது, அது உட்கட்சி விவகாரம்’னு சொல்ற யாருக்கும், எடப்பாடி கால்ல விழுந்து அதிகாரம் வாங்குனது பத்தி நக்கல் அடிக்கத் தகுதி இல்லை. அது அவங்க உட்கட்சி விவகாரம்.

twitter.com/gurunaatha

‘நாயா உழைக்கிறேன்’னு சொல்றாங்க. ஆனா பாருங்க... நாய் உழைக்கிறதே இல்ல!

twitter.com/SakalaVallavan

இப்பெல்லாம் கேமராமேன் கூட இல்லாம வீட்டை விட்டு வெளிய காலே எடுத்து வெக்கறதில்லை முதல்வர் ஸ்டாலின். மோடிதான் இன்ஸ்பிரஷேனோ?!

twitter.com/sathisshzdoc

ஓ.பி.சி இட ஓதுக்கீடு வரக் காரணம் பா.ஜ.க அரசு - அண்ணாமலை

‘‘ஏங்க, இது அவங்க வழக்கு போட்டதனால வந்த தீர்ப்புங்க…’’

‘‘நாங்க தர முடியாதுன்னு சொன்னதனாலதான அவங்க வழக்கே போட்டாங்க!’’

twitter.com/angry_birdu

பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கூடாது என்ற சமூக நீதிச் சிந்தனையில் தொடங்கிய இயக்கம், இன்று பிறப்பின் அடிப்படையில் மட்டுமே அந்த இயக்கத்துக்கான தலைவரைத் தேடிக் கொண்டிருப்பதுதான் வரலாற்றுத் துயரம்.

twitter.com/manipmp

முப்பது வயது வரை புதிய புகைப்படத்தையும், நாற்பது வயதிற்கு மேல் பழைய புகைப்படத்தையும் அதிகம் விரும்புகிறோம்.

twitter.com/Suyanalavaathi

இந்த மாஸ்க் போடாதவங்களகூட மன்னிச்சு விட்டுரலாம். ஆனா, மாஸ்க் போட்டுட்டு இருக்கும்போது தும்மல் வந்தா, மாஸ்க்க கழட்டிட்டு தும்முறாங்களே, அவுங்கள மட்டும் மன்னிக்கவே கூடாது!

twitter.com/mohanramko

சீனா கட்டும் பாலத்தை மோடி திறந்து வைத்துவிடுவாரோ ௭ன நான் அச்சப்படுகிறேன் - ராகுல் காந்தி.

நானே திறப்பு விழாவுக்குப் போட்டுக்க சீன டிரஸ் தைக்கப் போய்க்கிட்டு இருக்கேன், இவுங்க வேற!

Kamal Haasan: நினைத்தாலே இனிக்கும்!
Kamal Haasan: நினைத்தாலே இனிக்கும்!

twitter.com/Kannan_Twitz

அட்வைஸ் பண்ணி யாரையும் திருத்த முடியாது என்பதுதான் உலகத்திலேயே சிறந்த அட்வைஸ்!

twitter.com/RevanTalks

ஒரு கோமாளி அரண்மனைக்குள் நுழைந்தால் அவன் ராஜாவாக மாட்டான். அதற்கு பதிலாக அந்த அரண்மனையையே சர்க்கஸ் கூடாரமாக்கிவிடுவான். அது ஒரு பழைய துருக்கிய பழமொழி. ஆனா எல்லார் மைண்ட்டும் இப்போ எங்க போகுதுன்னு நல்லாவே தெரியுது!

twitter.com/xSPDZvzAbx1SrjC

கோட்சேவின் பெயரையும், மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ்-ஸையும் குறிப்பிட்டுப் பேசுகிறார்கள். ஆனால் கோவைக் காவல்துறை அனுமதிக்க முடியாது என்கிறது. நல்ல வாய்ப்பாக முதல்வர் சென்னையில் இருக்கிறார். கோவையில் இருந்திருந்தால் இந்நேரம் முதல்வர்மீதே வழக்கு பாய்ந்திருக்கும்!

twitter.com/NameisSoni

யோவ்... யாருயா உங்கள அறுபது வயசுல நீட் எழுதி பாஸ் பண்ணச் சொன்னது? வீட்ல போன் பண்ணி... ‘நீயெல்லாம் தண்டமா இருக்கியே’ன்னு கேக்குறாங்க.

twitter.com/shivaas_twitz

சத்தியமூர்த்தி பவன்: ராகுல் ஏதோ ஃபயரா பேசிருக்காராமே?

வாத்தியாரே... பசிக்குது. சாப்ட்டு சாயங்காலமா என்னன்னு பாப்போமா?

facebook.com/buhariRaja

‘‘தம்பி, ஒரு சோடா கொடுப்பா...’’

‘‘என்னா சரக்குண்ணே?’’

வயித்தவலிக்கு வாங்கிட்டுப் போறேண்டா. சோதிக்கறானுங்களே!

twitter.com/Jokerphoenix14

நாங்க ராக்கெட்டு, வெடிகுண்டு, பீரங்கியில இருந்து தப்பிச்சு ஆயிரம் கி.மீ நடந்தே பக்கத்து நாட்டுக்கு எப்படியாது வந்து சேரணும்... நீ நோகாம வந்து ‘ஜெய்மோடி’ன்னு சொல்லச் சொல்லி விளம்பரம் பண்ணுவ...

என்னடா பித்தலாட்டம் இது?

twitter.com/Anvar_officia

‘‘ஏம்பா... நீ இருக்கிற நாட்ல சண்டை நடக்குதாமே, ஊருக்கு வந்துடுப்பா!”

‘‘சண்டை நடக்குறது உக்ரைன்ல. நான் இருக்குறது பக்ரைன்லம்மா... சீரியல மட்டும் பாருன்னு சொன்னா கேக்குறியா?”

twitter.com/Greesedabba2

பா.ம.க நிழல் நிதி அறிக்கையைத் தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

# தமிழக அரசு பி லைக்: படித்தவுடன் கிழித்துவிடவும்.

Karthi: வந்தியத்தேவனின் குதிரை!
Karthi: வந்தியத்தேவனின் குதிரை!

twitter.com/karthik11235

ஏறக்குறைய 90% இந்துக்கள் உள்ள தமிழ்நாட்டுல, பா.ஜ.க ஏன் தோக்குதுன்னு உ.பிகாரனுக்குப் புரியல. எந்த வளர்ச்சியும் குடுக்கலைன்னாலும், உ.பி-ல பா.ஜ.க எப்படி ஜெயிக்குதுன்னு தமிழ்நாட்டுக் காரனுக்குப் புரியல. இந்தியா ஒரே நாடு இல்லைங்கிறது மட்டும் புரியுது.

twitter.com/prabhu65290

‘‘முடி வெட்ட எவ்ளோ ப்ரோ?’’

‘‘500 சார்!’’

‘‘போன தடவை 200 தானே வாங்குனீங்க?’’

‘‘ரஷ்யா - உக்ரைன் போர் நடக்குதில்ல, அதான் ரேட் கூடிடுச்சு...’’

twitter.com/HariprabuGuru

பஞ்சாபில் 20 நாள்களில் ஊழலை ஒழித்து விட்டோம் - அரவிந்த் கெஜ்ரிவால்.

தமிழ் சினிமாவுல எல்லாம் ரெண்டரை மணி நேரத்துல ஒழிச்சிடுவாங்க. போவியா...

twitter.com/Vasanth920

பா.ஜ.க-வில் இருந்து முதல்வரை உருவாக்கவே நான் வந்துள்ளேன்! - அண்ணாமலை.

வாத்தியாரே, நாம கவர்னரைத்தான உருவாக்குவோம்.

twitter.com/sultan_Twitz

7 மாநிலங்கள் பெட்ரோல், டீசல்மீதான வாட் வரியைக் குறைக்காததுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம்! - பிரதமர் மோடி

வழக்கம் போல நீங்கதான் காரணம்னு நெனச்சிட்டோம். யப்பா நேரு, சாரிப்பா..!

twitter.com/Schumy_Official

பள்ளிக்கூடத்திற்கு அருகில் கள்ள மது விற்கப்படுவதாகப் புகார் கொடுத்த மாற்றுத்திறனாளியைக் கட்டி வைத்து அடித்த விராலிமலை போலீஸ்.

மனுஷன்தானா நீங்கல்லாம்... டிஜிபி சாருக்கு சைக்கிள் ஓட்டி வீடியோ போடவே நேரம் பத்தல. இத எங்க கவனிக்கப்போறாரு..?

Manjimamohan & Gauthamramkarthik: வாழ்வாங்கு வாழ்க!
Manjimamohan & Gauthamramkarthik: வாழ்வாங்கு வாழ்க!

twitter.com/CTenkasi

பானிபூரி விக்கிறது அவ்வளவு கேவலமா? - வானதி.

இல்லைங்க, எல்.ஐ.சி-யை விக்கிறதுதான் கேவலம்...

twitter.com/madurai_jinna

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தோள்பட்டை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

# நான் அன்னிக்கே அந்தாளு கிட்ட சொன்னேன், “ஜீப்ப தூக்கி தலக்கி மேல சுத்தாதய்யா, ஓடுற டிரெய்ன நிப்பாட்டாதய்யா, ஹெலிகாப்டர புடிச்சி கிர்க் கிர்க்னு சுத்தி 5 கி.மீ-க்கு அங்கிட்டு வீசாதய்யா”ன்னு... கேட்டாத்தான?!

twitter.com/LAKSHMANAN_KL

இந்த உலகமே இந்தியாவின் பேச்சைக் கேட்கிறது - ராஜ்நாத் சிங்.

சத்தம் போட்டுச் சொல்லாதீங்க... சீனாவுக்குக் கேட்டுடப் போகுது..!

twitter.com/idumbaikarthi

சென்னைக் காவல் நிலையத்தில் இன்னொரு விசாரணைக் கைதி உயிரிழந்திருக்கிறார். ‘ஜெய்பீம்’ பார்த்து, 3 நாள்கள் தூங்கவில்லையென மனமுருகிய ஐயா ஸ்டாலின் அவர்கள் என்ன செய்யப்போகிறார்? வழக்கம்போல, காவல்துறையினர் எழுதிக்கொடுக்கும் திரைக்கதையை வாசித்து, காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றப்போகிறாரா?

twitter.com/HAJAMYDEENNKS

போராடிய ஒரே காரணத்திற்காக புல்டோசரை வைத்து வீடுகளை இடிப்பவர்களைப் பற்றிக் கேள்வி கேட்காமல், அவர்கள் ஏன் போராடினார்கள் எனக் கேள்வி கேட்பதற்குப் பெயர்தான் பாசிசம்!

twitter.com/AravindRajaOff

கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எனக்கு எதிரிகளே இல்லை: ஜெயலலிதா (2014)

# உங்க பொடனிக்குப் பின்னாடிதான் இருக்கோம். ஓவர்... ஓவர்... - சசிகலா, ஓ.பி.எஸ், இ.பி.எஸ்... etc

twitter.com/roadoram

நீங்க ஏன் ‘அதானிபாத்’ன்னு ஒரு திட்டம் போட்டு ராணுவத்தை அதானிக்குக் கொடுக்கக்கூடாது?

twitter.com/RavikumarMGR

2,000 ரூபாய் நோட்டு கையில் கிடைத்தாலே பதற்றமாகி உடனே சில்லறை மாற்றிவிடுகிறார் அப்பா. யாரோ ஒரு வாட்சப் யூனிவர்சிட்டி பேராசிரியர், ‘எந்த நேரத்திலும் 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிச்சுருவாங்க’ன்னு மிரட்டி விட்டுருக்காரு போல!

twitter.com/rmuthukumar

உட்கட்சி விவகாரத்தைப் பொதுக்குழுவில் விவாதிப்பதே அழகு என்கிறார் ஜெயக்குமார். இதை எம்.ஜி.ஆர் கடைப்பிடித்திருந்தால்

அ.தி.மு.க-வே உருவாகியிருக்காது.

twitter.com/BeingSaThug

ஞாயித்துக்கிழமைனா உன் இஷ்டத்துக்கு 10 மணி வரைக்கும் தூங்குவியான்னு கரன்ட புடுங்கி விட்டு எழுப்பி விடுற தாயுள்ளம் இருக்கே... அதுதான் செந்தில் பாலாஜி!

twitter.com/Kozhiyaar

சாகிற நேரத்தில்கூட நாட்டுக்காக ஒருவர் கடமையைச் செய்ய வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில்தான் மருத்துவமனைப் படுக்கைக்கு 5% GST போட்டிருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?!

twitter.com/saravankavi

உணவகங்களும் ரெஸ்டாரண்டுகளும் சேவைக் கட்டணம் வசூலிக்கக்கூடாது - மத்திய நுகர்வோர் அமைச்சகம்.

# நிதியமைச்சகம்: ‘‘அதானே... நாங்க இருக்கும்போது யார்றா அதையெல்லாம் வசூல் பண்ணுறது..?!”

twitter.com/raajaacs

மதில்மேல் நிற்கும் பூனையிடம் இரண்டு திரைக்கதைகள் இருக்கின்றன.

twitter.com/mohanramko

அவரு இவரைக் கட்சியிலிருந்து நீக்கிட்டாரு. இவரு அவரைக் கட்சியிலிருந்து நீக்கிட்டாரு. ரெண்டு பேரையும் சின்னம்மா நீக்கிட்டாங்க. ஆனா சின்னம்மாவைக் கட்சியிலிருந்து ஏற்கெனவே நீக்கிட்டாங்க...

twitter.com/VemaIism

‘‘மாணவி மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடப் போனியே... கிடைச்சுதா?!’’

‘‘கிடைச்சது...’’

‘‘என்னது?!’’

‘‘ரெண்டு பெஞ்சு... நாலு டியூப் லைட்டு!’’

twitter.com/Shanthhi

ஒரு ராசிபலன்ல கிட்டத்தட்ட இப்படிச் சொல்றாங்க: அபாயகரமான இடங்களுக்குச் சென்று செல்ஃபி எடுக்காமலிருப்பது நல்லது...

அடுத்து crypto, nft பத்தியெல்லாம் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்.

Vignesh Shivan: டும் டும் டும்!
Vignesh Shivan: டும் டும் டும்!

twitter.com/FareethS

மீண்டும் அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை - ரஜினி

# ‘மீண்டும்’னா... இதுக்கு முன்னாடி நீங்க அரசியல்ல இருந்தீங்களா?

twitter.com/oorkkavalaan

எல்லா முதல் காதலும் ‘வடக்குப்பட்டி ராமசாமிக்கு’ கவுண்டமணி கொடுத்த பணம் மாதிரிதான், திரும்ப வரவே வராது..!

twitter.com/Nila_twitz

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் இல்லை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

# குஜராத் தேர்தல் கண்ணு முன்னாடி வந்து போகுமா, இல்லையா!

twitter.com/amuduarattai

அரசியல் லாபத்துக்காக மக்களை திசை திருப்பாமல் தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க பாடுபட வேண்டும் - அண்ணாமலை

# நீங்க கண்ணாடியைப் பார்த்துப் பேசிட்டு இருக்கீங்க.

twitter.com/LAKSHMANAN_KL

இந்தியை அப்போதும் எதிர்த்தோம், இப்போதும் எதிர்க்கிறோம், எப்போதும் எதிர்ப்போம்: துரை வைகோ

#வாரிசு அரசியலை உங்க அப்பா எதிர்த்த மாதிரியா வாத்தியாரே?!

twitter.com/itz_radhi3

சிறந்த பொய்கள்...

கடைக்காரர்: ஸ்டாக் இப்போதான்பா முடிஞ்சிது.

டாக்டர்: 10 நிமிஷத்துக்கு முன்னாடி வந்திருந்தா காப்பாத்தியிருக்கலாம்.

அம்மா: உண்மையச் சொல்லு, அடிக்க மாட்டேன்.

டீச்சர்: சத்தம் போட்டா மார்க்ஸ் கம்மி பண்ணுவேன்.

கடைசியா ஒண்ணு... என் கணவர்: இதோ 10 நிமிஷத்துல வீட்ல இருப்பேன்!

twitter.com/vandavaalam_

எது நடந்தாலும் சந்தோஷப்பட்டு ஸ்வீட் சாப்பிட்டுக் கொண்டாடுற அ.தி.மு.க காரங்களுக்கு இருக்குற மாதிரி ஒரு தன்னம்பிக்கையைக் குடு இறைவா!

twitter.com/Vasanth920

சிலர் வாக்கிங் செல்வது ராகுல் காந்தியின் நடைப்பயணம் மாதிரிதான்... எந்தப் பயனும் இல்லை.

Yuvan: இசைக்குடும்பம்!
Yuvan: இசைக்குடும்பம்!

twitter.com/NaveenFilmmaker

ஈரானில் பெண்கள் ஹிஜாபை எரித்துப் போராடுகின்றனர். இந்தியாவில் ஹிஜாப் தடையை எதிர்த்துப் போராடுகின்றனர். இரண்டு போராட்டங்களுக்கும் உள்ள ஒற்றுமை, ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவது. அணிந்தே தீரவேண்டும், அணியவே கூடாது எனும் இரண்டு கட்டுப்பாடுகளும் ஆதிக்கமே. twitter.com/_blankie_

ரீசன்ட்டா வந்த லிரிக்செல்லாம் பாரேன்... மெழுகு டாலு... டிப்பம் டப்பம்... தாய்க்கெழவி... இப்ப ஒண்ணு வந்திருக்கே என்னது அது... பிம்பிளிக்கி பிளாப்பி!

twitter.com/mohanramko

‘‘எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 120% முடிஞ்சிடிச்சின்னு போட்டுக்க...”

‘‘எல்லோரும் சிரிப்பாங்க...”

‘‘அப்ப ஒரு 95%ன்னு போட்டுக்க!”

facebook.com/dvaipayana.krishna

TTF வாசன் இரண்டு நிமிடப் பேச்சில்: 200 கிலோமீட்டர் போவேன்... இப்பதான் 150 கிலோமீட்டர். 22 வயசுதான் ஆகுது... ducati புக் பண்ணப்போறேன். ஷார்ட் பிலிம் வேலை போய்ட்டு இருக்கு... அடுத்து feature filmக்குள்ள enter ஆகிடுவோம். ducati டெலிவரி எடுக்கணும்... K2K போறோம். கன்னியாகுமரி 2 காஷ்மீர். பைக் எடுத்தா 300, 400 கிலோமீட்டருக்கு ஒரு தடவை பெட்ரோல் break மட்டும்தான். காஷ்மீர்லதான் போய்ச் சாப்பிடுவேன்... அடுத்து லடாக், நார்த் ஈஸ்ட்...

Me to myself: லைஃப்ப தொலைச்சிட்டியேடா! twitter.com/teakkadai1

உங்க பருப்பெல்லாம் இங்க வேகாதுங்கிற வழக்கெல்லாம் காலாவதியாகிடுச்சில்ல? அதெல்லாம் ஊற வச்சு நாலு விசில் சேர்த்து வச்சா வெந்துடுங்க...

twitter.com/tamil_15

குழாப்புட்டு வித்துட்டுப் போறான். வீட்ல இருந்து எழுந்து கதவத் திறக்குறதுக்குள்ள ஜொய்ங்குன்னு XL-ல கத்திட்டுப் போறான். வியாபாரம் செய்யணும்னு வர்றானா, இல்லை, வீட்ல டார்ச்சர்னு வண்டில சுத்துறானா?

twitter.com/saravankavi

எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளித்துவிடலாம்! - முதல்வர் ஸ்டாலின்!

சட்டம் ஒழுங்கு, உட்கட்சி விவகாரம் & பா.ஜ.க: ‘‘எங்களைத்தான் சமாளிக்கவே முடியலல்ல...’’

sivakarthikeyan Doss: அடுத்த பாட்டு எப்போ குட்டி..!
sivakarthikeyan Doss: அடுத்த பாட்டு எப்போ குட்டி..!

twitter.com/scbjagadish

‘ஸ்டாலின்தான் வர்றாரு... விடியல் தரப் போறாரு’ன்னு பாட்டு படிச்சிட்டு, கடைசில அவரையே விடிய விடிய தூங்க விடாமப் பண்ணிட்டீங்களேடா!

twitter.com/SHIJA25

ரயில்மீது மோதிய எருமைகளின் அடையாளம் தெரியாத உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு - செய்தி

# இதுவே பசுமாடா இருந்திருக்கணும், இந்நேரம் ரயில் சிறையில இருந்திருக்கும்!

twitter.com/Vkarthik_puthur

நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே தேசியக் கட்சி பா.ஜ.க மட்டுமே: ஜே.பி.நட்டா

# பின்ன... எல்லா கட்சி எம்.எல்.ஏ-க்களையும் விலைக்கு வாங்கினா உங்க கட்சி மட்டும்தான எஞ்சியிருக்கும்!

twitter.com/kirachand4

2024 பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி - எடப்பாடி பழனிசாமி

# அ.தி.மு.க கூட்டணிதான்... அதுல இருக்கிற அ.தி.மு.க எங்களுடையது இல்ல.

facebook.com/NaveenKumarN85

‘அடுத்த முறை மோடி அவ்வளவுதான், இம்முறை மாற்றம் நிச்சயம், இனி இந்தியாவுக்கு விடிவு காலம்தான்’ போன்ற உத்வேகங்கள் பீறிக்கொண்டு எழுகிறதா? எனக்கும் அப்படித்தான் இருந்தது. அப்படி உத்வேகம் பொங்கும்போதெல்லாம் யாரேனும் ஒரு வட இந்திய நண்பனுடன் ஐந்து நிமிடம் உரையாடுங்கள். இயல்புநிலைக்குத் திரும்பிவிடுவீர்கள்.

twitter.com/parveenyunus

கூட்டணி குறித்து விவாதித்தோம். ஆனால் அதை விவரிக்க முடியாது - கமல்

# நீங்க விவரிச்சிட்டாலும் எங்களுக்குப் புரியவா போகுது?

facebook.com/magudeswaran.govindharajan

நீங்கள் எவ்வூரைச் சேர்ந்தவர் என்றாலும் சரி, உங்கள் ஊர்ப் பேருந்து நிலையத்தில் அல்லது நிறுத்தத்தில் எப்போதாவது ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தியிருப்பீர்கள்!

facebook.com/ramanujam.govindan

முன்பெல்லாம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போறாரான்னு தெரியாம குழப்பமா இருக்கும். இப்பல்லாம் கமல்ஹாசன் அரசியல்லேர்ந்து வெளியேறிட்டாரான்னு தெரியாம குழப்பமா இருக்கு.

facebook.com/saravanakarthikeyanc

இதுவரை எந்த யானையிடமும் ஆசீர்வாதம் வாங்காதவர்கள் மட்டுமே லட்சுமி யானையின் மரணத்துக்கு உச் கொட்டுவது அறம்.

twitter.com/Thaadikkaran

வடகொரியாவில் குழந்தைகளுக்குத் துப்பாக்கி, வெடிகுண்டுப் பெயர்களை வைக்க பெற்றோருக்கு உத்தரவு!

# தட் மயில்சாமி மொமென்ட்... பீரங்கி, உள்ளேன் ஐயா... BK 47, உள்ளேன் ஐயா... ராக்கெட் லாஞ்சர், உள்ளேன் ஐயா...

Vetrimaaran: பாயுறதுக்கு ரெடி!
Vetrimaaran: பாயுறதுக்கு ரெடி!

facebook.com/cmayilan

அடிக்கடி ஐ.ஐ.டி-க்காரர்கள் எதையாவது கண்டுபிடித்திருப்பதாகச் செய்தித் தலைப்புகள் குறுக்கிடுகின்றன. என்னவென்று திறந்து பார்த்தால் அவை பைசா பெறாத வஸ்துகளாக இருக்கின்றன. அவையெல்லாம் செய்தி ஆகின்றன என்றால், நியாயப்படி கொசு பேட்டைக் கண்டுபிடித்த மகானுக்கு நோபல் பரிசு கொடுக்கவேண்டும்.

twitter.com/LAKSHMANAN_KL

பா.ஜ.க-வுடனான உறவு முடிந்தது: திருச்சி சூர்யா சிவா

# அந்தப் புனிதமான ‘அக்கா - தம்பி’ உறவாவது தொடரும்ங்களா..?!

twitter.com/kumarfaculty

வரலாறு முக்கியம் என்கிறார்கள். ஆனால் கடைசிப் பரீட்சை அதுதான்! twitter.com/athisha

ஓ.டி.டி-ல மட்டுமே படம் பாக்குற புதிய ரசிகர்கள் குரூப் தமிழ் சினிமாவுல உருவாகியிருக்கு. தியேட்டர்ல சரியா ஓடாத படத்தைப் பார்த்துட்டு, ‘இது நல்லாருக்கே, ஏன் ஓடல’ங்க வேண்டியது. நல்லா ஓடின படத்தைப் பார்த்துட்டு ‘இவ்ளோ கேவலமா இருக்கு, இது எப்படி ஓடுச்சு’ன்னு திட்றது.