Karikalan R

ஸ்டாலின் Vs ஜெ.கு

எங்கள் வகுப்புப் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் `நிக் நேம்’ வைத்துக்கொள்வதுண்டு. எனக்கும் ஏதாவது வைத்திருப்பார்கள். இப்படித்தான் ஸ்டாலின் ‘ஜோக்கர்’ என்கிறார். பதிலுக்கு அமைச்சர் ஜெயக்குமார், ‘சீனி சக்கர சித்தப்பா’ என்கிறார். `ஜோக்கர், சிரிக்கவைப்பான்; சிந்திக்கவைப்பான்’ என்கிறார் ஜெயக்குமார். அடிக்கடி காமெடி செய்து சிரிக்கவைக்கிறார்தான். சிந்திக்கவைத்தாரா? அத்துடன் நிற்கவில்லை. ‘கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு, குடல் வற்றிச் செத்ததாம்!’ - இந்தப் பழமொழியை துண்டுச்சீட்டு இல்லாமல் சொல்வாரா ஸ்டாலின்? சவால்விடுகிறார்.

முக்கியமான ஆளுமைகள் பலருக்கு இந்த மறதி இருந்திருக்கிறது. ரொனால்டு ரீகன், நடிகர்கள் எடி ஆல்பர்ட், ராபின் வில்லியம்ஸ், பாடகர் பெரிகோமோ, கிதாரிஸ்ட் மால்கம் யங், எழுத்தாளர் இ.பி.வொய்ட், ஆக்டிவிஸ்ட்டான ரோஸா பார்க்ஸ், ஓவியர் நார்மென் ராக்வெல் என, பலர் இந்த மறதியால் அவதிப்பட்டிருக்கின்றனர். ஆனாலும், தங்கள் துறையில் சாதிக்க இந்த மறதி இவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை. அரசியல்வாதிகள் துண்டுச்சீட்டு வைத்துப் பேசுவதில் தவறில்லை. பழமொழிகளை மறந்துவிடுவதும் தவறில்லை. இதில் பழிக்க ஒன்றுமில்லை.

தொகுதியை மறப்பது, கொடுத்த வாக்குறுதிகளை மறப்பது, மக்களை மறப்பது... இவையே அரசியல்வாதிகளுக்கு மோசமான மறதிகள்!

Vijayasankar Ramachandran

எச்சரிக்கை!

பல தமிழக கிராமங்களில் சங் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. கோயில் திருவிழா நடத்துவது என்ற பெயரில் இளைஞர்களையும் பெண்களையும் காவி வலைக்குள் கொண்டுவந்துவிட்டனர். நகரங்களிலும் இலவச டியூஷன், விளையாட்டுப் பயிற்சி முகாம்கள், வாரம் ஒருமுறை தேசியக்கொடி ஏற்றி தேசியகீதம் பாடுவது எனப் பல வகைகளில் மக்களைத் திரட்டிவருகிறார்கள். `குழந்தைகளுக்குப் படிப்பும் கட்டுப்பாடும் நல்லதுதானே!’ என்று பெற்றோரும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கின்றனர். அரசியல் கட்சிகளும் வெகுஜன இயக்கங்களும் இப்போது ஸ்தல அளவில் தலையிடவில்லையெனில், பிறகு எப்போதுமே முடியாது. மக்களை ஒன்றுபடுத்தும் விழாக்களை நடத்துவது உடனடித் தேவை. தேர்தல் விளம்பரத்துக்கு முன்கூட்டியே சுவர்களைப் பிடிப்பதைவிட, மக்களின் சிந்தனையில் பிரிவினைக் கருத்துகள் இடம்பிடிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.