Published:Updated:

போனில் வரும் அழையா விருந்தாளிகள்!

Beware of Telecallers
பிரீமியம் ஸ்டோரி
Beware of Telecallers

டெலிகாலர்கள் ஜாக்கிரதை!

போனில் வரும் அழையா விருந்தாளிகள்!

டெலிகாலர்கள் ஜாக்கிரதை!

Published:Updated:
Beware of Telecallers
பிரீமியம் ஸ்டோரி
Beware of Telecallers

ன்றைக்கு போன் மூலம் அழையா விருந்தாளிகளாக வந்து அடிக்கடி தொல்லை தருபவர்களாக இருக்கிறார்கள் டெலிகாலர்கள். ‘‘சார், உங்களுக்கு 10 லட்ச ரூபாய் பர்சனல் லோன் தரத் தயார். `ஓகே’ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. உங்க அக்கவுன்ட்ல பணம் வந்துடும்’’ என்று ஆசை வார்த்தை காட்டுபவர்கள் ஒரு வகை. ‘‘இதுவரைக்கும் நீங்க எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியும் எடுக்கலைன்னா, நாங்க சொல்ற இந்த பாலிசியில பணத்தைப் போடுங்க. உங்களுக்கு டபுளா, ட்ரிபிளா பணம் கிடைக்கும்’’ என்று தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளிவிடுவதுபோலப் பேசுபவர்கள் இன்னொரு வகை. ‘‘சார், உங்க சிபில் ஸ்கோர் சூப்பரா இருக்கு. உங்களுக்கு பிளாட்டினம் கிரெடிட் கார்டு தரத் தயாரா இருக்கோம்... வாங்கிக்கிறீங்களா?’’ என்று கேட்கும் கர்ணப்பிரபுகள் மற்றொரு வகை என டெலிகாலர்களின் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகமாகவே இருக்கிறது.

Beware of Telecallers
Beware of Telecallers

பயன் தராத திட்டங்கள்

இந்த நிலையில் ஒரு முன்னணி வங்கியின் பெயரைச் சொல்லி, அந்த வங்கியிலிருந்து பேசும் டெலிமார்க்கெட்டிங் செய்பவரின் உரையாடல் ஒன்று சமீபத்தில் ஆன்லைனில் பிரபலமானது. அந்த ஆடியோவில் டெலிகாலர் ஒருவர், வாடிக்கையாளர் ஒருவருக்கு புதிய பென்ஷன் பிளான் ஒன்று வந்திருப்பதாகச் சொல்லி அதை விளக்குகிறார். அதாவது, அந்தத் திட்டத்தில் இணையும் பயனாளர் ஓராண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 10 ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டும். அந்தத் தொகைக்கு 10.5% வட்டி கிடைக்கும் என்று சொல்கிறார். 11-ம் ஆண்டு வெயிட்டிங் பீரியட். 12-ம் ஆண்டிலிருந்து அந்தப் பயனாளர் வருடத்துக்கு ரூ.1.05 லட்சம் வீதம் 25 வருடங்களுக்குப் பணம் பெறுவார். 25 வருடங்கள் முடிந்ததும் பயனாளர் செலுத்திய ரூ.10 லட்சமும் திருப்பிக் கொடுக்கப்படும் என்கிறார் அந்த டெலிகாலர்.

இதையெல்லாம் பொறுமையாகக் கேட்கும் அந்த வாடிக்கையாளர் டெலிமார்க்கெட்டிங் செய்யும் பெண்ணிடம், ‘‘ரூ.1 லட்சத்துக்கு 10.5% வட்டி என்றால், 12-ம் வருடம் ரூ.1,10,500 எனக்கு வர வேண்டும். ஆனால், ரூ.1,05,000-தான் தரப்படும் என்கிறீர்கள். அதோடு, இப்போது 1 லட்ச ரூபாய்க்கு இருக்கும் மதிப்பு 37 வருடங்களுக்குப் பிறகு வெகுவாகக் குறைந்திருக்கும். அப்படி இருக்கும்போது இந்தத் திட்டம் எந்த வகையில் எனக்குப் பயனுள்ளதாக இருக்கும்?’’ என்று கேட்கிறார். அவர் கேட்கும் கேள்விகள் எதற்கும் அந்த டெலிகாலரிடம் பதில் இல்லை.

இப்படி கிரெடிட் கார்டு, பர்சனல் லோன், இன்ஷூரன்ஸ் எனப் பல விஷயங்களுக்காக டெலிகாலர்களிடமிருந்து நமக்கு அழைப்புகள் வந்தபடியே இருக்கின்றன. இப்படி வரும் அழைப்புகளை அரைகுறையாகப் புரிந்துகொண்டு, அதில் சிக்கி, பின்னர் வருத்தப்படுபவர்கள் நிறைய பேர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தீர விசாரியுங்கள்!

டெலிகாலர்கள் மூலம் வரும் டெலிமார்க்கெட்டிங் போன் கால்கள் அனைத்தையும் உண்மை என்று நம்பத் தேவையில்லை. அதே நேரம், அவை அனைத்துமே நம்மை ஏமாற்றுவதற்காகத்தான் செய்யப்படுபவை என்று நிராகரிக்கவும் தேவையில்லை. தீர விசாரித்து முடிவெடுப்பதே நல்லது. டெலிமார்க்கெட்டிங் செய்யும் டெலிகாலர்கள் என்னென்ன மாதிரியான சூட்சுமங்களைக் கையாள்கிறார்கள், அவர்கள் வலையில் சிக்காமல் நமக்கு வேண்டிய தகவல்களை மட்டும் பெறுவது எப்படி, தேவையில்லாத திட்டங்களை நிராகரிப்பது எப்படி என்பது குறித்து பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

Beware of Telecallers
Beware of Telecallers

அவசரகதியில் முடிவெடுக்காதீர்கள்!

“முதலில் டெலிகாலர்கள் நமக்கு போன் செய்து ஏதாவது ஒரு திட்டம் பற்றிச் சொல்லும்போது, அவர்கள் கூறும் திட்டம் உங்களுக்கு ஏற்புடையதா என்று பார்க்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு ஏற்றதாக, தேவையானதாகத் தெரிந்தாலும்கூட உடனே அவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு எப்போது நேரம் இருக்கிறதோ அந்த நேரத்தைக் கூறி, அவர்களை மீண்டும் அழைக்கச் சொல்லலாம். நீங்கள் நிதானமாகக் கேட்கும் மனநிலையில் இருக்கும்போது மட்டுமே அவர்களிடம் பேசுவது நல்லது.

‘ஆம்’ என்று சொல்வதற்கு முன்...

அடுத்த முக்கியமான விஷயம், டெலிகாலர்கள் சொல்லும் திட்டத்தை ஏற்று, நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வதற்கு முன் பல முறை யோசியுங்கள். காரணம், நீங்கள் பேசும் அழைப்பு பதிவுசெய்யப்படும். பிறகு, அவர்கள் சொன்ன திட்டத்தை நீங்கள் ஏற்க விரும்பவில்லை என்று ரத்து செய்ய முடியாது. ‘‘நீங்கள் ஏற்கெனவே ‘ஆம்’ சொல்லியிருக்கிறீர்கள். எனவேதான் உங்களுக்கு இந்தச் சேவையைத் தந்தோம்’’ என்று நமக்கு பிரயோஜனம் இல்லாத திட்டத்தை தலையில் கட்டிவிடுவார்கள். எச்சரிக்கை அவசியம்.

டெலிகாலர்கள் மூலம் வரும் டெலிமார்க்கெட்டிங் போன் கால்கள் அனைத்தையும் உண்மை என்று நம்பத் தேவையில்லை.

பாதகங்களை ஆராயுங்கள்!

டெலிகாலர்கள் பேசும்போது அவர்கள் கூறும் திட்டங்களின் சாதகங்களைப் பற்றித்தான் பேசுவார்கள்; பாதகங்களைப் பற்றி வாய் திறக்கவே மாட்டார்கள். ஆனால், நீங்கள் கேட்கும் திட்டங்களைப் பற்றிய முழுமையான கையேடு அவர்களிடம் இருக்கும். அதை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பச் சொல்லி, அதை முழுமையாகப் படித்து சாதக, பாதகங்களை அறிந்த பிறகு மின்னஞ்சல் மூலமே அவர்களுக்கு உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்” என்றார் நாகப்பன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேரில் வாருங்கள்!

வ.நாகப்பன் சொல்வதுபோல, டெலிகாலர்கள் சொல்லும் திட்டம் தொடர்பான கையேடுகளைப் படித்த பிறகு உங்களுக்குச் சந்தேகங்கள் ஏதும் இருந்தால் அவர்களை நேரில் வரவழைத்து விளக்கம் தரச் சொல்லலாம். இப்படிச் செய்வதன் மூலம் பெரும்பாலான தவறான உள்நோக்கம்கொண்ட, மோசடியான அழைப்புகளைக் கண்டறிந்துவிடலாம். இப்படி நேரில் வரும்போது நமக்குத் தேவையான தகவல்களை முழுமையாகப் பெற்றுக்கொள்ளலாம்.

போனில் வரும் அழையா விருந்தாளிகள்!

எண்ணைப் பரவவிடாதீர்கள்!

டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் லட்சக்கணக்கில் தொலைபேசி எண்களைப் பணம் தந்து வாங்குகின்றன. நாமும் ஷாப்பிங் மால்கள் உட்பட பல இடங்களில் செல்போன் நம்பரை வஞ்சனை இல்லாமல் தருகிறோம். அது டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களிடம் சிக்கி, நமக்குத் தேவையில்லாத அழைப்புகள்வரக் காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே, உங்கள் தொலைபேசி எண்ணை முடிந்தவரை பரவாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆப் மூலம் கண்டுபிடியுங்கள்!

டெலிமார்கெட்டிங் அழைப்புகளைக் கண்டறிவதற்கான செயலிகள் பல இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் வரும்போதே கண்டறிந்து தவிர்த்துவிடலாம். ‘ட்ரூகாலர்’ போன்ற செயலிகள் டெலிமார்கெட்டிங் போன்கால்களையும் ‘ஸ்பேம்’ என வகைப்படுத்தி நமக்குத் தெரிவிக்கும். சில மொபைல்களில் இந்த வசதி இன்-பில்ட்டாகவே இருக்கும். `இந்தியாவில் வரும் ‘ஸ்பேம்’ அழைப்புகளில் 17% டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள்தான்’ என்கிறது 2019-ம் ஆண்டுக்கான ‘ட்ரூகாலர்’ நிறுவனத்தின் அறிக்கை.

எந்த முதலீடாக இருந்தாலும், எந்த வகையான மார்க்கெட்டிங்காக இருந்தாலும் அவர்கள் சொல்வதை முழுமையாகக் கேட்டு, சந்தேகங்கள் இருந்தால் முகவர்களை அழைத்துப் பேசி, யோசித்து முடிவெடுப்பதே நல்லது.

கோபப்படத் தேவையில்லை!

டெலிமார்க்கெட்டிங் அழைப்பு வரும்போது பலரும் கோபத்துடனேயே எதிர்கொள்கிறார்கள். ‘எனக்கு போன் செய்ய வேண்டாம் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்’, ‘உங்கள் கம்பெனியின் தலைவரிடம் புகார் செய்துவிடுவேன்’, ‘ட்ராயில் புகார் தருவேன்’ என்றெல்லாம் பொரிந்து தள்ளுகிறார்கள்.

டெலிகாலர்கள் சம்பளத்துக்காக வேலை பார்க்கும் சாதாரண நபர்கள். அவர்களுக்கு என்ன பணி தரப்படுகிறோ அதைத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் நாம் கோபப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்கள் நம்மிடம் எடுத்துச் சொல்லும் திட்டத்தால் நமக்கு எந்த நன்மையும் இல்லையெனில் அதை விளக்கமாக எடுத்துச் சொல்லி அழைப்பைத் துண்டித்துவிடலாம். ஏற்கெனவே சொன்ன விஷயத்தையே திரும்பச் சொல்கிறார்கள் என்றால், `இதை ஏற்கெனவே சொல்லிவிட்டீர்கள். எனவே, வேண்டாம்’ என்று போனை வைத்துவிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism