Published:Updated:

பழங்குடிகளுக்கும் பரதம்!

பரதம்!
பிரீமியம் ஸ்டோரி
பரதம்!

மகள் ஸ்ருதியும் பரதக் கலைஞர். அமெரிக்காவில் சட்டம் படிச்சா. படிப்பு முடிஞ்சதும் ரெண்டு பேரும் இந்தியா வந்துட்டோம்.

பழங்குடிகளுக்கும் பரதம்!

மகள் ஸ்ருதியும் பரதக் கலைஞர். அமெரிக்காவில் சட்டம் படிச்சா. படிப்பு முடிஞ்சதும் ரெண்டு பேரும் இந்தியா வந்துட்டோம்.

Published:Updated:
பரதம்!
பிரீமியம் ஸ்டோரி
பரதம்!

“பரத நாட்டியம் குறிப்பிட்ட சமூகத்தோட கலைங்கிற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கு. அது உண்மையில்லை. உழைப்பும் ஆர்வமும் இருக்கிற எல்லாருக்கும் அது வரும். அந்த வாய்ப்புகள் நம் கிராமத்துல இருக்கிற ஒரு பழங்குடிப் பிள்ளைக்கும் கிடைக்கணும்...”

கனிவு ததும்பப் பேசுகிறார் கௌசல்யா. பத்ம சித்ரா விஸ்வேஸ்வரனின் மாணவி. அமெரிக்காவில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் தியேட்டர் அண்ட் டான்ஸ் துறையில் வருகைதரு பேராசிரியர். உலகெங்கும் பறந்துசென்று பரதம் பரப்பும் கௌசல்யா, இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு தமிழகத்தின் இருளர் குழந்தைகளுக்கு பரதம் பயிற்றுவித்துக்கொண்டிருக்கிறார்.

“எத்திராஜ்ல டிகிரி முடிச்சுட்டு வைஷ்ணவத்துல மாஸ்டர் முடிச்சேன். நிறைய நாட்டிய நாடகங்கள் செஞ்சிருக்கேன். இந்தியா முழுவதும் பல மேடைகள்ல ஆடியிருக்கேன். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சுனர்த்தகா நடனப் பள்ளியை ஆரம்பிச்சேன். அதன்மூலம் இங்கே 30 அரங்கேற்றங்களுக்கு மேல பண்ணிட்டேன்.

பழங்குடிகளுக்கும் பரதம்!

முதல்முறையா நான் அமெரிக்கா போனது, ஃபெட்னா அமைப்போட விழாவுக்கு. அங்குள்ள தமிழ்க்குழந்தைகளை வச்சு ‘ஒன்பாண் சுவை’ங்கிற நவரசங்களை வெளிப்படுத்துற மாதிரி ஒரு நாட்டிய நாடகம் நடத்தினோம். அது அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகளைப் பெற்றுத் தந்துச்சு.

வழக்கமா அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள்ல வேலைக்குப் போகணும்னா தனித்தனியா தேர்வுகள் எழுதணும். ஆனா, என்னை இன்டர்வியூகூட பண்ணாம பிரிட்ஜ்வாட்டர் ஸ்டேட் யுனிவர்சிடிக்குக் கூப்பிட்டாங்க. நான் போறதுக்கு முன்னாடி உலக நடனக் கலைப் பிரிவுல பரதம் இல்லை. இங்கிருந்து அணிகலன்கள், ஆடைகள் எல்லாத்தையும் எடுத்துட்டுப் போனேன். பதினைந்து ஆண்டுகள் அங்கே வேலை செஞ்சேன். வைஷ்ணவம் முடிச்சிருந்ததால இந்தியத் தத்துவம் பற்றிய வகுப்புகளும் எடுத்தேன்.

பழங்குடிகளுக்கும் பரதம்!

அதுமட்டுமல்லாம, அமெரிக்க அரசு வழங்குற ‘புல்பிரைட் ஃபெல்லோஷிப்’பும் எனக்குக் கிடைச்சுச்சு. வாஷிங்டன்ல இருக்கிற கென்னடி சென்டர்ல புகழ்பெற்ற கலைஞர்கள் திறந்தவெளியில தங்களோட கலைகளை நிகழ்த்துவாங்க. அது எனக்கு மிகப்பெரும் திறப்பா இருந்துச்சு. இன்னும் நிறைய செய்யணும்ங்கிற எண்ணம் அங்கேதான் தொடங்குச்சு.

மகள் ஸ்ருதியும் பரதக் கலைஞர். அமெரிக்காவில் சட்டம் படிச்சா. படிப்பு முடிஞ்சதும் ரெண்டு பேரும் இந்தியா வந்துட்டோம். உலகத்துல வேற வேற கலாசாரத்துல வாழ்ற பெண்களுக்கே இந்தக் கலையைப் பயிற்றுவிக்க முடியும்போது, நம்ம ஊர்ல பிள்ளைகளுக்குக் கத்துக்கொடுக்க முடியாதான்னு தோணுச்சு. நகரத்துல வாழ்ற பிள்ளைகளுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்குது. கிராமப்புறங்கள்ல, அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்குத்தான் பெரிய வாய்ப்புகள் கிடைக்குறதில்லை. அவங்களை இலக்கு வச்சு ஏதாவது செய்யணும்னு முடிவு செஞ்சோம். அந்தச் சூழல்ல தான் எதேச்சையா ஒரு கடையில நீதிபதி சந்துரு சாரைச் சந்திச்சேன். அவர் காட்டின வழிதான் இது...” என்கிறார் கௌசல்யா.

நீதிபதி சந்துருவிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்ட கௌசல்யா, தன் நோக்கத்தைச் சொல்லி ஆலோசனை கேட்டுள்ளார். அவர் பேராசிரியர் கல்யாணியைப் பற்றிச்சொல்லி, “அவர் யாரை அடையாளம் காட்டுகிறாரோ அவர்களுக்கெல்லாம் பரதம் பயிற்றுவியுங்கள்” என்று கூறியுள்ளார்.

“நானும் ஸ்ருதியும் நேரா திண்டிவனம் போய் கல்யாணி அய்யாவைப் பார்த்தோம். அஞ்சு நிமிட உரையாடல்லயே எங்கள் நோக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டு எங்களை இருளர் மக்கள் வாழும் பகுதிகளுக்கு அழைச்சுட்டுப்போனார். அங்கிருந்த பெண்கள்கிட்ட பேசி பரதம் கத்துக்கொடுக்க ஆரம்பிச்சோம்” என்கிறார்.

பழங்குடிகளுக்கும் பரதம்!

கௌசல்யாவின் மகள் ஸ்ருதி ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருக்கிறார். சனி, ஞாயிறுகளில் இருவரும் திண்டிவனம் சென்று பயிற்சியளிக்கிறார்கள்.

“முதல்ல திண்டிவனம் தாய்த்தமிழ்ப் பள்ளியில ஒரு அறிமுக வகுப்பு நடத்தினோம். மாணவிகள் மட்டுமல்லாம நிறைய பெற்றோரும் வந்திருந்தாங்க. ‘நாங்கெல்லாம் பரதம் கத்துக்க முடியுமா’ன்னு அந்தப் பிள்ளைங்க ஆச்சர்யத்தோடு கேட்டாங்க. ‘ஆர்வம் இருந்தாப் போதும்... நிச்சயம் கத்துக்கலாம்’ன்னு சொன்னோம். ‘எங்ககிட்ட இதுக்கான ஆடைகளெல்லாம் இல்லையே’ன்னு சொன்னாங்க. ‘அதுக்குத்தான் நாங்க இருக்கோம்... நீங்க வாரந்தோறும் தவறாம வந்தாப்போதும்’ன்னு சொன்னோம். ஆசை ஆசையா வந்து சேர்ந்திருக்காங்க. ரெண்டு மூணு இடமா பிரிச்சு நடத்தலாம்னு திட்டமிட்டிருக்கோம். இந்தப்பகுதியில இருந்து குறைஞ்சது அஞ்சு பிள்ளைகளையாவது அரங்கேற்றம் பண்ண வைக்கணும்ங்கிறது எங்க திட்டம்” என்கிறார் ஸ்ருதி.

அவரது புன்னகையில் ஒளியாய் மிளிர்கிறது கலை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism