Published:Updated:

ஓடவும் முடியாது, நெருங்கவும் முடியாது!

கமல்
பிரீமியம் ஸ்டோரி
கமல்

பிக் பாஸ் - 4

ஓடவும் முடியாது, நெருங்கவும் முடியாது!

பிக் பாஸ் - 4

Published:Updated:
கமல்
பிரீமியம் ஸ்டோரி
கமல்

ல்மான் கான், நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் இந்தி, தெலுங்கு ‘பிக் பாஸ்’க்கான புரமோ வெளியாகிவிட்டது. மலையாளம், கன்னடத்தின் நிலவரங்கள் தெரியவில்லை. தமிழில் பிக்பாஸ் சீசன் 4 இந்தாண்டு இருக்கிறதா என்பது பிக்பாஸ் பிரியர்களின் கேள்வி.

ஓடவும் முடியாது, நெருங்கவும் முடியாது!

‘உண்மையில் மார்ச் மாதத் தொடக்கத்திலேயே இந்த சீசனுக்கான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல்கட்ட வேலைகள் ஆரம்பமாச்சு. ஆனா அடுத்த சில நாள்களிலேயே ஊரடங்கு. ஏப்ரல், மே மாதத்திற்குள் நிலைமை சரியாகிடும்னு நம்பினாங்க. ஆனா கொரோனாப் பரவலின் தீவிரம், ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைப்பதில் சிக்கல்னு நிறைய தடைகளால‌‌, ஷோ நடத்தறதா வேண்டாமாங்கிற குழப்பம் நிலவுச்சு. ஆனா இப்ப குழப்பம் நீங்கி, நடத்தறதுங்கிற முடிவுக்கு வந்துட்டாங்க’ என்கிறது நம்பத்தகுந்த ஒரு சோர்ஸ்.

‘எப்போது தொடங்குவது’, ‘சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டிய சூழலில் ஷூட்டிங் எப்படி இருக்க வேண்டும்’, என்பன போன்ற விஷயங்களைச் சில தினங்களுக்கு முன் விவாதித்த சேனல், அந்த விவர‌ங்களை கமல்ஹாசனிடமும் பகிர்ந்திருக்கிறதாம். பிக் பாஸ் சீசன் 4 தொடர்பாக நமக்குக் கிடைத்த சில தகவல்கள் இவை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கமல்
கமல்
  • செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி டிசம்பர் 30-ல் நிறைவடைவதுபோல் முதலில் திட்டமிட்டிருந்தார்களாம். கமல் தரப்பில் இந்த ஷெட்யூலில் சின்னத் திருத்தம் செய்யச் சொல்ல, 15 நாள் தள்ளிப் போகுமெனத் தெரிகிறது. எனவே அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்கலாம். அக்டோபர் முதல் வாரம் கமல் புரமோ ஷூட் கிளம்புவார் என்கிறார்கள்.

  • பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்களா என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்படலாம். கடைப்பிடிக்காதவர்கள் அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படலாம். கமல் கலந்து கொள்ளும் வார இறுதி எபிசோடுகளில் ஆடியன்ஸ் கூட்டத்தைப் பாதியாகக் குறைக்கவிருக்கிறார்கள். இருப்பவர்களும் சமூக இடைவெளி விட்டே அமர வைக்கப்படுவார்கள்.

  • முந்தைய சீசன்களில் டெக்னிகல் சைடில் பணிபுரிய மும்பையிலிருந்தே அதிகம் பேர் வந்துகொண்டிருந்தனர். இந்த வருடம் ஹைதராபாத்திலிருந்து அதிகம் பேர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இந்தி மற்றும் தமிழ் ஆட்கள் சம அளவில் இருப்பார்களாம்.

  • ஆரவ்-ஓவியா, லாஸ்லியா-கவின் ஜோடி போல் 4வது சீசனுக்கும் ஒரு ஜோடி தயார். நிச்சயம், விஜய் டிவிக்குப் பரிச்சயமான ஜோடிதான். ரீல் ஜோடியா ரியல் ஜோடியா என ஆராய்வதெல்லாம் இனி பிக்பாஸ் ரசிகர்களின் வேலை. இதே ஜோடி கடந்த சீசனிலேயே கலந்துகொள்வதாக இருந்து கடைசி நேரத்தில் அந்த முடிவு கேன்சலானது. ‘கோவிட் கீவிட்னு சிக்கிடாம பத்திரமா இருங்க’ என ஜோடிக்கு எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

  • கலந்துகொள்கிறவர்கள் என ஆளாளுக்கு உத்தேசப் பட்டியல் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். சேனல் முதல் ரவுண்டிலேயே சில பெயர்களை டிக் அடித்துள்ளது. அவர்களில் சிலரிடம் பேசியிருக்கிறார்கள். சிலரிடம் இனிமேல்தான் பேச வேண்டும். ஷில்பா மஞ்சுநாத், பூனம் பஜ்வா, மதுபாலா என நீள்கிறது பட்டியல்.

  • முகின், தர்ஷன், லாஸ்லியா போன்று வெளிநாட்டிலிருந்து கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒருவர்கூட இந்த சீசனில் இல்லை. அதேநேரம் மல்லுவுட் அல்லது டோலிவுட், சாண்டல்வுட் எனப் பக்கத்து மாநிலத்திலிருந்து ஒரு போட்டியாளர் கன்ஃபார்ம் என்கிறார்கள்.

  • போட்டியாளர்களுடன் ஷோ தொடர்பாக ஜூம் மீட்டிங்கிலேயே பேசுவதென முடிவு செய்திருக்கிறார்கள். போட்டியாளர்களுக்கு உடல் மற்றும் மனம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாம். தேவைப்பட்டால் மனநல நிபுணரின் க்ளியரன்ஸ் சர்ட்டிபிகேட்டும் கேட்கப்படலாம்.