Published:Updated:

விஞ்ஞானத்தின் சகாப்தம்! - விக்ரம் சாராபாய்

Vikram Sarabhai
பிரீமியம் ஸ்டோரி
Vikram Sarabhai

சந்திரயான்-2 மூலம் விண்ணில் பறந்து நிலாவில் இறங்கப் போகும் தானியங்கி ரோபோ ஊர்தியின் பெயர் ‘லாண்டர் விக்ரம்.’

விஞ்ஞானத்தின் சகாப்தம்! - விக்ரம் சாராபாய்

சந்திரயான்-2 மூலம் விண்ணில் பறந்து நிலாவில் இறங்கப் போகும் தானியங்கி ரோபோ ஊர்தியின் பெயர் ‘லாண்டர் விக்ரம்.’

Published:Updated:
Vikram Sarabhai
பிரீமியம் ஸ்டோரி
Vikram Sarabhai

2020-ம் ஆண்டு செயல்படத் திட்டமிடப்பட்ட இந்தப் பயணம்-2 ஓராண்டு முன்னதாக 2019-லேயே சாத்தியமாக்கப்பட்டதற்கு இஸ்ரோ வெளியில் காட்டிக்கொள்ளாத பிரதான காரணம் ஒன்றே ஒன்றுதான். அது, 2019 விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு என்பது.

அவரைப்பற்றி அறியும்போது இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அந்த மனிதருக்குச் செய்திருப்பது எவ்வளவு அற்புத கெளரவம் என வியந்து, மழை மேகங்களுக்கு நடுவே உள்ள சந்திரயானை மானசிகமாக சல்யூட் அடிக்காமல் இருக்க முடியவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வருடம் 1963. ரஷ்யாவும் அமெரிக்காவும் போட்டிபோட்டுக்கொண்டு விண்வெளியில் ரேஸ் நடத்திக்கொண்டிருந்த பரபரப்பான சூழல்.

அடுத்து இங்கிலாந்தும் பிரான்ஸும் முயற்சி எடுத்துத் தோற்றிருந்த சமயத்தில், விக்ரம் சாராபாய் எனும் அந்த இயற்பியல் விஞ்ஞானி இந்திய தேசிய விண்வெளி ஆய்வுக் கமிட்டியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். திருவனந்தபுரத்திலிருந்து 12 கிலோமீட்டர் தள்ளியிருந்த கடற்கரை ஊரான தும்பை மலர் பூத்துக்குலுங்கும் தும்பாதான், இந்தியாவிலிருந்து புவியின் சுற்றுப்பாதை நோக்கி ராக்கெட்டுகளைச் செலுத்த மிகச் சரியான இடம் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டார் விக்ரம் சாராபாய்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஞ்ஞானத்தின் சகாப்தம்! - விக்ரம் சாராபாய்

குறை – உயர (Low – Altitude) வசதி கொண்ட பூமத்தியரேகையின் காந்தப்புலனமைப்புப்படி ராக்கெட் அனுப்பத் தகுந்த ஆகச் சரியான இடத்தில் ஒரு தேவாலயம் இருப்பதைக் கண்டார். தேவாலயப் பொறுப்பாளரான பிஷப் பீட்டர் பெர்னார்டு பெரேரா என்பவரை நேரில் சந்தித்து, இந்திய விண்வெளிக் கனவுகளைப் பற்றி விளக்கினார் விக்ரம். ஞாயிறு பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வருமாறு அவர்களைப் பேசி அனுப்பிவிடுகிறார் பிஷப்.

பிரார்த்தனைக் கூட்டத்தில் குழுமியிருந்த ஊர் மக்களிடம், இன்றுவரை இந்திய ராக்கெட்டுகள் விண்ணில் பாயும் இடத்தை, மனதார அவர்கள் வழங்குமளவு எழுச்சி உரை நிகழ்த்தினார் விக்ரம் சாராபாய். அப்படி உருவானதுதான் இந்திய விண்வெளி ஆய்வுமையம்.

1963-ல் நவம்பர் 21 அன்று அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த நைக் - அப்பச்சே எனும் ஒலியியல் – ராக்கெட் (Sounding Rocket) தான் இந்தியாவின் முதல் விண்வெளிக் கனவுத்திட்டம். அன்றைய தினம் ராக்கெட்டின் பாகங்களைக் கொண்டுசெல்லவிருந்த லாரி தாமதித்த போது, விக்ரம் சாராபாய் தன் சக விஞ்ஞானிகளோடு சைக்கிள் கேரிய ரிலும், மாட்டு வண்டியிலும் அவற்றைச் சுமந்துசென்று – ராக்கெட் செலுத்தும் மேடையில் பொருத்தினார். அன்றைய கேரள கவர்னர், முதல்வர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் போன்றவர்களை முதல் ராக்கெட் திட்டத்தினைக் காண அழைத்தார். அணுவியல் அறிஞர் டாக்டர் ஹோமிபாபா உட்பட பலர் அங்கிருந்தனர்.

ஏவுதளத்தில் ஏற்றப்பட்டதும் முதலில் எரிபொருள் டாங்கில் கோளாறு ஏற்பட்டது. அது சரி செய்யப்பட்டதும் அடுத்து ரிமோட் (தானியங்கி) ராக்கெட் லாஞ்சரில் கோளாறு. ஒருகட்டத்தில் உடன் இருந்த விஞ்ஞானி டாக்டர் பைரா ஷொட்டி போன்றவர்கள் ராக்கெட் ஏவுவதைத் தள்ளி வைக்கலாமா என ஆலோசனை வழங்கியபோது, ‘மக்கள் வரிப்பணத்தில் உருவான திட்டம்… அதை ஒத்திப்போடும் பேச்சிற்கே இடமில்லை’ எனத் தானே களத்தில் இறங்கி இந்திய ராக்கெட் சரித்திரத்தின் முதல் வெற்றியை அன்றைய தினம் மாலை 6.31 மணிக்குச் சாதித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் விக்ரம் சாராபாய்.

விஞ்ஞானத்தின் சகாப்தம்! - விக்ரம் சாராபாய்

பிறகு சென்னையிலிருந்து 80 கி.மீ தூரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவையும் அவர்தான் கண்டுபிடித்தார். 1967-ல் இந்தியாவிலேயே தயாரான ரோகிணி-75 (75 என்பது அதன் விட்டம் 75 மி மீட்டரைக் குறிக்கும்) வகை ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக அதே தும்பாவிலிருந்து ஏவப்பட்டதும் அவரது நேரடிப் பங்களிப்பே. அடுத்தடுத்து ரோகிணி-100, ரோகிணி-125, ரோகிணி-300, ரோகிணி-560 என அவரது காலம் இந்திய விண்வெளி இயலை உலகத்தரம் வாய்ந்த பொற்காலமாக்கியது.

விக்ரம் சாராபாய் 100 வெற்றி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்திய உலகின் அபூர்வ விண்ணியல் விஞ்ஞானி. இன்று உலக அளவில் நாசா(NASA), மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்(இ.எஸ்.ஏ) ஆகியவற்றை அடுத்து இஸ்ரோ(ISRO)மூன்றாவது பெரிய விண்வெளி ஆய்வு நிறுவனமாக மதிக்கப்படுகிறது. அதன் அஸ்திவாரத்தைச் சாதித்த விக்ரம் சாராபாய் இந்திய விண்வெளியியலின் தந்தை எனப் போற்றப்படுவதில் ஆச்சர்யமில்லை.

1919-ல் குஜராத்தில் ஆகஸ்ட் 12 அன்று, பிரபல ஜவுளி அதிபர் அம்பாலால் சராபாய்க்கு எட்டாவது மகனாகப் பிறந்தார் விக்ரம் சாராபாய். வீட்டிலேயே ஆரம்பக்கல்வி. ஆனால், சிறுவயதிலேயே அவரது அறிவியல் ஆர்வம் சராசரி வால்தனங்களைவிடக் கூடுதலாகப் பெற்றோர்களை அதிரவைத்தது. ஓடும் ரயில் பொம்மை கேட்டவருக்கு வெறும் ரயில் பொம்மை வந்தபோது, அந்த ஏழு வயதில் மின் மோட்டார் பொருத்தி ஓடவைத்த சம்பவம் ஒன்றுபோதும்.

பிற்காலத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வுகளில் இறங்கிய இயற்பியலாளர்கள் மத்தியில் பேசப்படுகிறார். இரண்டாம் உலகயுத்த முடிவில் சி.வி.ராமனின் அழைப்பை ஏற்று இந்தியா திரும்பி அவருக்குக் கீழே இயற்பியல் ஆய்வைத்தொடர்ந்து 1947-ல் தான் உருவாக்கிய முதல் அறிவியல் ஆய்வு நிறுவனமான இந்திய இயற்பியல் துறை ஆய்வகம் (Indian Physical Research Laboratory) எனும் அமைப்பை ஏற்படுத்தினார். இந்திய அறிவியல் ஆய்வுகளுக்காக அகமதாபாத் ஜவுளி ஆய்வுக்கழகம், நேரு அறிவியல் ஆய்வுமையம் உட்பட ஆறு அறிவியல் ஆய்வுமையங்களை உருவாக்கி, தனித்தன்மையோடு வளர்த்தெடுத்தார்.

Vikram Sarabhai family
Vikram Sarabhai family

அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் அரசு செலவில் ஏற்படுத்தும்போது வரிப்பணத்தின் ஒவ்வொரு பைசாவும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கே செல்ல வேண்டும் எனப் பிடிவாதமாகத் தன் திட்டங்களை அவர் வகுத்துக்கொண்டார்.

பிஷப் பீட்டர் பெரெராவிடம் வாக்களித்தபடியே அடுத்த 100 நாள்களில் அங்கிருந்து 10 கி.மீ தள்ளி அதே தேவாலயத்தை அப்பழுக்கின்றி அதே வடிவில் தன் சொந்த வருவாயில் கட்டிக்கொடுத்த மக்கள் விஞ்ஞானி அவர். 1971 டிசம்பர் 31, முதல் இந்தியச் செயற்கைக்கோளை வடிவமைப்பது குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் எட்டுமணி நேரக் கலந்துரையாடலை நிகழ்த்திய இரவில் அதே தும்பாவில் உறக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.

விக்ரம் சாராபாய் கண்டுபிடித்தவற்றிலேயே உயர்வான பொக்கிஷம் எது தெரியுமா? எங்கோ தன் அறிவுத்தாகத்திற்கு அடையாளம் தேடிக்கொண்டிருந்த ஒரு துடிப்பான தமிழக இளைஞனை இந்தியா எனும் மாபெரும் கனவோடு இணைத்த சரித்திரமாய்ப் பொன்னெழுத்தில் மிளிரும் அந்தப் பொக்கிஷத்தின் பெயர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். ஆமாம் கலாம் எனும் ஏவுகணை நாயகரை ‘லாஞ்ச்’ செய்த பெருமைக்குரியவர் விக்ரம் சாராபாய்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism