Published:Updated:

சேவையை நினைவுகூரும் சிலை!

பிபின் ராவத்
பிரீமியம் ஸ்டோரி
பிபின் ராவத்

பிபின் ராவத்தின் சிலை தயாராக இருக்கிறது. விரைவில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் வைத்து பூஜை செய்ய விருக்கிறோம்.

சேவையை நினைவுகூரும் சிலை!

பிபின் ராவத்தின் சிலை தயாராக இருக்கிறது. விரைவில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் வைத்து பூஜை செய்ய விருக்கிறோம்.

Published:Updated:
பிபின் ராவத்
பிரீமியம் ஸ்டோரி
பிபின் ராவத்

பொதுவாக கடவுள் சிலைகளை மட்டும்தான் ஐம்பொன்னில் வடிப்பது வழக்கம். ஆனால், அண்மையில் மறைந்த ராணுவ முப்படைத் தளபதி பிபின் ராவத்துக்கு ஐம்பொன்னில் சிலை வடித்து, அவருக்கு மரியாதை செய்திருக்கிறார்கள், முன்னாள் ராணுவத்தினர் சிலர்.

இந்திய ராணுவ வீரர்களின் சமூக நல அமைப்பின் தலைவர் பாபு, “பிபின் ராவத்தின் சிலை தயாராக இருக்கிறது. விரைவில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் வைத்து பூஜை செய்ய விருக்கிறோம். பிறகு, டெல்லிக்கு எடுத்துச் செல்ல விருக்கிறோம். போகும் வழியில் உள்ள ராணுவ முகாம்களில் சிலைக்கு மரியாதை செய்து, நிறைவாக பிரதமர் மோடியிடம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துவருகிறோம். இதற்கான அனுமதியை இந்திய ராணுவத்திடமும், மத்திய அரசிடமும் கேட்டிருக்கிறோம். விரைவில் டெல்லியில் சிலை நிறுவப்படும்” என்றார்.

சேவையை நினைவுகூரும் சிலை!
சேவையை நினைவுகூரும் சிலை!

பிபின் ராவத்துக்குச் சிலை வடிக்கும் பணி, கும்ப கோணத்திலுள்ள ராமசாமி ஸ்தபதி சிற்பக் கூடத்துக்கு வழங்கப் பட்டுள்ளது. சபரி மலை ஐயப்பன் சிலை, நெய்வேலியில் உள்ள மிக உயரமான நடராஜர் சிலை, தஞ்சை ராஜராஜன் சிலை உள்ளிட்ட பல சிலைகள் இச்சிற்பக்கூடத்தில் உருவானவைதான். இந்நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஸ்தபதி ராம்குமாரிடம் பேசினேன்.

“பிபின் ராவத் இறந்த சில நாள்களில் முன்னாள் ராணுவத்தினர் அமைப்பைச் சேர்ந்த பாபு, என்னைச் சந்தித்து, பிபின் ராவத்துக்கு 3 அடி உயரம், 150 கிலோ எடையுள்ள, மார்பளவு ஐம்பொன் சிலையை வடித்துத் தரவேண்டுமெனக் கேட்டார். செம்பு, வெள்ளீயம், துத்தநாகம், வெள்ளி, தங்கம் ஆகியவை சேர்க்கப்பட்ட பஞ்சலோகம் தான் ஐம்பொன். இச்சிலை வடிப்பதற்காக நான் ஒரு ரூபாய்கூட கட்டணம் பெறவில்லை. முப்படைகளின் தலைமைப் பொறுப்பு வகித்த தேசப்பற்று மிக்க ஒரு மாமனிதருக்குச் சிலை வடிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism