Published:Updated:

பிறந்தநாளை சிறந்தநாளாக்க... செலவில்லாத செலிபிரேஷன் டிப்ஸ்

செலிபிரேஷன் டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
செலிபிரேஷன் டிப்ஸ்

டேபிள்மீது டெகரேஷன் செய்து கேக் வெட்டுவது வழக்கமான ஒன்று. அதற்குப் பதிலாக டென்ட் தயார் செய்து அலங்கரிக்கலாம்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குழந்தைகளைக் குதூகலப்படுத்துபவை. லாக்டௌன் நாள்களில் கொண்டாட்டங்கள் காணாமல் போயிருக்கின்றன. ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க நினைக்கும் பெற்றோருக்கு லோ பட்ஜெட்டில் பிறந்தநாள் டெகரேஷன் டிப்ஸ் கொடுக்கிறார் சென்னையைச் சேர்ந்த கிராஃப்ட் பயிற்சியாளர் கீர்த்திகா.

துப்பட்டாவில் டென்ட் கட்டலாம்!

டேபிள்மீது டெகரேஷன் செய்து கேக் வெட்டுவது வழக்கமான ஒன்று. அதற்குப் பதிலாக டென்ட் தயார் செய்து அலங்கரிக்கலாம். வெள்ளை நிற துப்பட்டாக்களில் மூன்று எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை ஒரு வளையலில் சேர்த்து முடிச்சிட்டுக் கொள்ளுங்கள். துப்பட்டா தரையில் படும் உயரத் தில் வளையலை ஆணியில் தொங்கவிடுங்கள். தரையில் நான்கு தலையணைகளை அடுக்கவும். தலையணைகளின்மீது வேட்டி அல்லது வெள்ளை நிற துணியை விரித்துக்கொள்ளவும். வளையலில் மாட்டியிருக்கும் துப்பட்டாவை தலையணையுடன் சேர்த்து பின் செய்யவும். பொம்மைகள் மற்றும் லைட்டுகளால் அழகுபடுத்தினால் அசத்தல் டென்ட் ரெடி.

பிறந்தநாளை சிறந்தநாளாக்க... செலவில்லாத செலிபிரேஷன் டிப்ஸ்

மின்னும் பல்புகள்... மிளிரும் பலூன்கள்...

உங்கள் குழந்தைக்குப் பிடித்த நிறங்களில் பலூன்களை வாங்கி, காற்று நிரப்பி சுவர்கள், ஜன்னல்களில் மாட்டலாம். பலூனின் மேல் பகுதி யில் டபுள் டேப் ஒட்டி வீட்டின் சீலிங்கில் ஒட்டலாம். பலூனில் கிஃப்ட் ரிப்பன்களைக் கட்டி, குழந்தை களின் போட்டோக்களைத் தொங்கவிடலாம்.

வீட்டில் அலங்கார பல்புகள் இருந்தால் அதில் பலூன்களைத் தொங்கவிடலாம். லைட்டின் வெளிச்சத்தில் பலூன்கள் கலர்ஃபுல்லாக மின்னும்.

கீர்த்திகா
கீர்த்திகா

காய்ந்த இலைகள், கைகளின் பிரதிகள்...

வால் ஹேங்கிங் அல்லது பேனர்களுக்கு பதிலாக, சார்ட் பேப்பர்களில் குழந்தைகளின் பெயர்களைக்கொண்ட பேனர்களை வீட்டிலேயே தயார் செய்யலாம். க்ளிட்டர் பேப்பர்களை ஸ்டார் அல்லது ஹார்ட்டின் வடிவத்தில் வெட்டி டபுள் டேப் பயன்படுத்தி ஆங்காங்கே ஒட்டலாம்.

ரோலிங் பேப்பர்கள் வாங்கி, தோரணங்கள் கட்டித் தொங்கவிடலாம். ரோலிங் பேப்பர்கள் வாங்க முடியாதவர்கள் காய்ந்த இலைகளைச் சேகரித்து, அவற்றில் குழந்தையை பெயின்ட் செய்யச் சொல்லி, தோரணங்களாகக் கட்டலாம்.

குழந்தைகளின் கைகளில் வெவ்வேறு நிறங் களில் பெயின்ட்டைத் தடவி, சார்ட் பேப்பரில் அச்சு வைக்கச் சொல்லி சுவரில் மாட்டலாம்.

பாதுகாப்பு முக்கியம்!

சந்தோஷத்தைவிட பாதுகாப்புதான் முக்கியம் என்பதால் கொண்டாட்டத்தில் அனைவருடனும் ஆன்லைன் மூலமாக இணையலாம். நெருங்கிய நபர்கள்கூட குழந்தையைத் தூக்குவதை, கேக் ஊட்டுவதை, முத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். எச்சில் மூலம் நோய் பரவும் வாய்ப்பு இருப்பதால் அம்மா, அப்பா உட்பட மற்றவர்களுக்கு வாயில் வைத்து ஊட்டிய கேக்கைக் குழந்தை களுக்குக் கொடுக்க வேண்டாம்.

பிறந்தநாளை சிறந்தநாளாக்க... செலவில்லாத செலிபிரேஷன் டிப்ஸ்

மனிதநேயம் கற்றுக்கொடுங்கள்!

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மறக்காமல் இவற்றையும் சேர்க்கத் தவறாதீர்கள்... ஆதரவற்றவர் களுக்கு ஒரு நாள் உணவு வழங்கலாம் அல்லது மரக்கன்றுகளை நடலாம். நம் தெருக்களைச் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மாஸ்க், சானிட்டைசர் போன்ற அத்தியாவசிய பொருள்களை வாங்கிக்கொடுக்கலாம். இதுபோன்ற நல்ல விஷயங் களைக் குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தும்போது, அவர்கள் பொறுப்புணர்வுடனும் மனித நேயத்துடனும் வளர்வார்கள்.