Published:Updated:

`பள்ளிகளைத் திறப்பது காலத்தின் கட்டாயம்’ - உள்ளாட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அண்ணாமலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை
ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை

`மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு சேர்க்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்’ என்று அண்ணாமலை பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார். ஜீப்பில் நின்றபடி கே.டி.சி நகர்ப் பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலையுடன் எம்.ஆர்.காந்தி, சசிகலா புஷ்பா
தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலையுடன் எம்.ஆர்.காந்தி, சசிகலா புஷ்பா

அவருக்கு நையாண்டி மேளம், செண்டை மேளம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன்கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``தற்போது நடக்கவிருக்கும் இந்தத் தேர்தல் பிற தேர்தல்களைவிட வித்தியாசமானது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் நேரடியாக கிராமப்புற மக்களைச் சென்றடைய இந்தத் தேர்தல் உதவும்.

மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும் கிடைக்க வேண்டுமானால் இந்தப் பகுதியில் யூனியன் கவுன்சிலர் பொறுப்புக்குப் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் அதேபோல கூட்டணிக் கட்சியான அதிமுக வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று பேசினார்.

பேட்டியளிக்கும் அண்ணாமலை
பேட்டியளிக்கும் அண்ணாமலை

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியின் பணம், படை பலத்தையெல்லாம் தாண்டி நல்லவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சும், தேர்தலுக்குப் பின்பு ஒரு பேச்சும் என தி.மு.க-வின் நடவடிக்கை இருக்கிறது. அதைப் பொதுமக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்று ஒருவர் முதல்வர் வீட்டு முன்பாகவே தீக்குளித்த சம்பவமும் நடந்திருக்கிறது. நாம்தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சியினர் அதிகாரிகளைக் கட்டாயப்படுத்தி எதிர்க்கட்சியினரின் வேட்புமனுக்களை நிராகரிக்க நிர்ப்பந்தித்த சம்பவங்களும் நடந்தன.

தேர்தல் பிரசாரம்
தேர்தல் பிரசாரம்

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறப்பு என்பது காலத்தின் கட்டாயம். பள்ளி திறப்புக்கு முன்பாக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாணவர்களைக்கொண்டு பள்ளிகளையே திறக்கும்போது கோயிலுக்கு வரும் பெரும்பாலானோர் தடுப்பு ஊசி செலுத்தியிருக்கும் நிலையில் கோயிலைத் திறப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு