Published:Updated:

கொரோனா பாதிப்பால் மரணம்: 15 மாதங்களாக தகனம் செய்யப்படாத உடல்கள்! - பெங்களூரில் அதிர்ச்சி

கொரோனா மரணம் ( மாதிரிப் படம் )

கோவிட் முதல் அலை ஓய்ந்து, இரண்டாம் அலையையும் கடந்திருக்கும் இந்நேரத்தில், முதல் அலையில் பாதிக்கப்பட்டவரின் உடலே தகனம் செய்யப்படாமல் 15 மாதங்களாக அழுகிக்கிடக்கிறது என்ற அவலச் செய்தி இணையத்தையே உலுக்கியிருக்கிறது.

கொரோனா பாதிப்பால் மரணம்: 15 மாதங்களாக தகனம் செய்யப்படாத உடல்கள்! - பெங்களூரில் அதிர்ச்சி

கோவிட் முதல் அலை ஓய்ந்து, இரண்டாம் அலையையும் கடந்திருக்கும் இந்நேரத்தில், முதல் அலையில் பாதிக்கப்பட்டவரின் உடலே தகனம் செய்யப்படாமல் 15 மாதங்களாக அழுகிக்கிடக்கிறது என்ற அவலச் செய்தி இணையத்தையே உலுக்கியிருக்கிறது.

Published:Updated:
கொரோனா மரணம் ( மாதிரிப் படம் )

பெங்களூரில் வசித்துவந்த துர்கா (40), முனிராஜ் (50) ஆகிய இருவரும் கோவிட் முதல் அலையில் பாதிக்கப்பட்டு, பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஜூலை 2-ம் தேதி இறந்துள்ளனர். கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால், நோயாளிகளின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல், மருத்துவமனை நிர்வாகமே தகனம் செய்துகொண்டிருந்த காலகட்டம் அது. அந்த வகையில் நோயாளிகளின் உறவினர்களுக்குத் தகவல் சொல்லப்பட்டதுடன், உடல்கள் தகனம் செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில், சமீபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அவர்களின் உடல் இன்னும் மருத்துவமனை பிணவறையில்தான் இருக்கிறது என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்திருகிறது. துர்காவுக்கு கொரோனா என்று கண்டறிந்தபோது நிலைமை மோசமாக இருந்ததால் வேறெங்கும் இடம் கிடைக்காமல் கடைசியாக இ.எஸ்.ஐ-யில் அனுமதித்துள்ளனர். அனுமதித்த நான்கு நாள்களில் அவர் இறந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தச் சமயத்தில், மருத்துவமனையே தகன ஏற்பாடுகளைச் செய்யும் என்று உறவினரிடம் தகவல் கூறியுள்ளனர். சில தினங்களில், பெங்களூரு நகராட்சியிலிருந்து (BBMP ) துர்காவின் உடலை தகனம் செய்துவிட்டதாக கூறியுள்ளனர். 15 மாதங்களுக்குப் பிறகு திடீரென அவர் உடல் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறியதும் நம்புவதா, வேண்டாமா என்று குழப்பமான நிலையில் பதறியிருக்கிறார்கள் துர்காவின் குடும்பத்தினர்.

இதே நிலைமைதான் முனிராஜ் தரப்பினருக்கும். இத்தகைய அலட்சியத்தால் இறந்தவரின் குடும்பங்கள் மிகுந்த மனஉளைச்சலில் வருந்துகின்றனர். 2020-ம் ஆண்டு, அந்த மருத்துவமனையின் பழைய பிணவறையில், ஆறு சேமிப்பு ஐஸ் பெட்டிகள் மட்டுமே இருந்ததாகவும், பற்றாக்குறையால், 10 ஐஸ் பெட்டிகள்கொண்ட புதிய பிணவறை டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

பிணவறை
பிணவறை
மாதிரிப் படம்

பழைய பிணவறையைச் சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் ஒருவித துர்நாற்றத்தை உணர்ந்துள்ளனர். அப்போது தேடிப்பார்த்ததில் , ஐஸ் பெட்டியில் பாதி அழுகிய நிலையில் இந்த இருவரின் உடலையும் கண்டறிந்துள்ளனர். கோவிட் மரணங்கள் குறைந்துவிட்டதால், பழைய கிடங்கு பயன்படுத்தப்படாமல் இருந்ததாகவும், அதனால் அங்கு ஐஸ் பெட்டியில் இருந்த இந்த இருவரின் உடல்கள் மீது கவனம் தப்பியது என்றும் மருத்துவனையில் சிலர் கூறியுள்ளனர். மருத்துவமனையின் இந்த அலட்சியப் போக்கு கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறது. பல்வேறு அமைப்பினரும், அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்து போராடிவருகின்றனர்.

ராஜாஜி நகர் எம்.எல்.ஏ சுரேஷ்குமார், இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை கோரி கர்நாடக தொழில்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த அலட்சியத்துக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையும், பிபிஎம்பி-யும்தான் பொறுப்பு என்றும் கூறியிருக்கிறார். "இது மனிதாபிமானமற்ற, பொறுப்பற்ற செயல்" என்று கூறும் சுரேஷ்குமார், இந்த அலட்சியம் குறித்து முறையான விசாரணை கோரி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

- கார்த்திகா ஹரிஹரன்

மாணவப் பத்திரிகையாளர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism