Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

மாயவரத்தில் முன்சீப்பாக வேலை செய்த வேதநாயகம் பிள்ளைதான் தமிழின் முதல் நாவலை எழுதினார்.

படிப்பறை

மாயவரத்தில் முன்சீப்பாக வேலை செய்த வேதநாயகம் பிள்ளைதான் தமிழின் முதல் நாவலை எழுதினார்.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை
ன் ஊரிவிருந்து வேரை அறுத்துக்கொண்டு பெரு நகரங்களில் வாழும் எல்லோருக்கும் ஊரைப்பற்றிய பெருமிதங்களும் ஆவலும் நிறைந்தே இருக்கும். உலகின் எந்த மூலைக்குப் போனாலும் சொந்த ஊரே அடையாளமாக ஒட்டிக்கொண்டு உடன்வருகிறது. பதிப்பாளராக, சுங்கத்துறை அதிகாரியாக உலகம் சுற்றிவந்த நடராஜன், தன் ஊரான மாயவரம் பற்றிய நினைவுகளை ஒரு நாவலுக்கேயுரிய தொனியில் எழுதியுள்ளார்.

காவிரித்தீரத்துத் தென்கரை நகரமான மயிலாடுதுறையில் வாழ்ந்த ஞானக்கூத்தன் முதல் முகமறியாத ஆசிரியர்கள் வரை பலரை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் நடராஜன். காவிரி குறித்த சிலாகிப்புகள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கின்றன. காலுக்கும் முகத்துக்கும் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பெண்களால் படித்துறைகள் மஞ்சள் பூசிக்கொள்வதும், பெண்கள் நடந்து செல்லும் பாதைகளில் கூந்தல் சிந்தும் ஈரமும் நடராஜனின் எழுத்துகளில் ரசனையான காட்சியாக விரிகின்றன. முதல் அத்தியாயத்தில் மாயவரத்தைப் பற்றிய சித்திரத்தை வரைந்துவிட்டு, காளியாகுடி காப்பி, பன்னீர்ப் புகையிலை, மூக்குப்பொடி, ஸ்டெப் கட்டிங்குக்குப் பேர்போன செல்வமணி சலூன், சா.கந்தசாமியை ஈர்த்த சாயாவனக் காடு, பிரிட்டிஷ் காலத்தில் தாசில்தாராகப் பணியாற்றிய ராமலிங்கம் பிள்ளையின் தாசில்பண்ணை வீடு என அடுத்தடுத்து அந்நகரத்தின் அடையாளங்களை அறிமுகம் செய்கிறார் நடராஜன். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கும் அவரிடம் தமிழ் கற்க வந்த உ.வே.சாவுக்கும் இடையில் நிகழ்ந்த முதல் சந்திப்பு பற்றிய சிலாகிப்புடன் இருவரின் பங்களிப்பு பற்றியும் எழுதியிருக்கிறார் நடராஜன்.

மாயவரத்தில் முன்சீப்பாக வேலை செய்த வேதநாயகம் பிள்ளைதான் தமிழின் முதல் நாவலை எழுதினார். சுகுண சுந்தரி என்ற நாவலையும் அவர் எழுதியிருக்கிறார். இதன்பிறகுதான் தமிழில் நாவல் இலக்கியம் ஊற்றெடுக்க ஆரம்பித்ததும் கவிதைமொழி உரைநடையாக உருவெடுத்ததும் அதற்குப் பிறகுதான். வேதநாயகம் பெண்கல்வி, சட்டம் பற்றியும்கூட நூல்கள் எழுதியிருக்கிறார் என்பது புதிய செய்தி. பின்னிணைப்பாக நாராயணசாமி நாயுடு, அக்களூர் ரவி, தி.சௌந்தர்ராஜன், கோமல் அன்பரசன் ஆகியோரின் மாயவரம் குறித்த கட்டுரைகளும் நூலில் இணைக்கப்பட்டுள்ளன.

புள்ளிவிவரங்களும் குறிப்புகளும் கொண்ட கையேடாக இல்லாமல் மயிலாடுதுறையின் கதையை நடராஜனின் குரலில் பேசுகிறது இந்த நூல்!

படிப்பறை

மாயவரம்

சில நினைவுகளும்

சில நிகழ்வுகளும்

சந்தியா நடராஜன்

சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-600083

தொடர்புக்கு: 9841191397

பக்கங்கள்: 230

விலை: ரூ.220