Published:Updated:

காடு அழிப்பு... கனிமவளக் கொள்ளை... பழங்குடிகளை விரட்டும் பிரேசில்!

பிரேசில்
பிரீமியம் ஸ்டோரி
பிரேசில்

உலகின் மழைக்காடுகளில் மூன்றில் இரு பங்குள்ள அமேசான் காடுகளை, வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மிக வேகமாக அழிக்கும் செயலை தீவிரமாகச் செயல்படுத்திவருகிறது, அதிபர் போல்சோனோரோ தலைமையிலான பிரேசில் அரசு.

காடு அழிப்பு... கனிமவளக் கொள்ளை... பழங்குடிகளை விரட்டும் பிரேசில்!

உலகின் மழைக்காடுகளில் மூன்றில் இரு பங்குள்ள அமேசான் காடுகளை, வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மிக வேகமாக அழிக்கும் செயலை தீவிரமாகச் செயல்படுத்திவருகிறது, அதிபர் போல்சோனோரோ தலைமையிலான பிரேசில் அரசு.

Published:Updated:
பிரேசில்
பிரீமியம் ஸ்டோரி
பிரேசில்

காடுகள் அழிப்புக்காகச் செய்யக் கூடாத பல செயல்களையும் முன்னெடுத்து வருகிறது. ஒரு போரில் எதிரியை வீழ்த்தவேண்டுமானால், அவன் படைத்தளபதியை வீழ்த்த வேண்டும். இப்போது அதைத்தான் போல்சோனோராவின் அரசும் செய்துவருகிறது.

காடு அழிப்பு... கனிமவளக் கொள்ளை... பழங்குடிகளை விரட்டும் பிரேசில்!

அமேசான் காட்டில் சில இடங்களில் தங்கம், மாங்கனீஸ், இரும்பு மற்றும் தாமிரம் ஆகிய தாதுகள் அதிக அளவில் உள்ளன. அவற்றை எடுக்கும் பணியில் அரசு அனுமதியுடன் சில நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன. வடக்கு பிரேசில், அமாபா மாநிலத்தில் உள்ள அமேசான் காட்டில் உள்ள ஒரு பழங்குடியின கிராமத்தைக் கைப்பற்றுவதற்காக, பழங்குடியினத் தலைவரான எமிரா வாஜாபியைக் கொன்றிருக் கிறார்கள் தங்க சுரங்கப் பணியாளர்கள். பயங்கரமான ஆயுதங்களால் அவரைத் தாக்கி ஆற்றில் வீசியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமாபாவில் ஆறு லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் டஜன்கணக்கான கிராமங்களில், வாஜாபி சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினர் சுமார் 1,200 பேர் வாழ்ந்துவருகிறார்கள். அவ்வப்போது, தாது எடுக்கும் பணியாளர்களுக்கும் இந்தப் பழங்குடியின மக்களுக்கும் இடையே சிறுசிறு மோதல்கள் நிகழும். ஆனால் இந்த முறை, பழங்குடியினத் தலைவர் எமிரா வாஜாபி கொடூரமாகக் கொல்லப் பட்டு, பழங்குடியின கிராமமான விடுடு ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறது. அந்தக் கிராமப் பழங்குடிகள், 40 நிமிடப் பயண தூரத்தில் உள்ள மாரிரி கிராமத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். சுரங்கப் பணியாளர்கள் தரப்பில் இருந்து, ‘திரும்பி வர முயற்சி செய்ய வேண்டாம்’ என அவர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

காடு அழிப்பு... கனிமவளக் கொள்ளை... பழங்குடிகளை விரட்டும் பிரேசில்!

‘வளர்ச்சிப் பாதையில் நாட்டைக் கொண்டுசெல்ல வேண்டும்’ என்பதில் மும்முரமாக இருக்கிறார் ‘வலதுசாரி அதிபர் போல்சோனோரோ. பழங்குடியின மக்கள் வாழும் அந்தக் காட்டுப் பகுதி, பெரிய பரப்பளவைக் கொண்டது. அதனால், ‘வளர்ச்சிக்காகக் காப்புக்காடுகளின் பல பகுதிகளில் சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்படும். பழங்குடியின மக்கள் குடியிருப்புகள், பணக்கார நிலப்பரப்பில் இருக்கின்றன’ எனச் சொல்லி, சுரங்கப் பணிகளுக்கு சமீபத்தில் அனுமதி கொடுத்தார் போல்சோனோரா. சட்டவிரோதமான சுரங்கத்தையும் பழங்குடியின இருப்புகளின் மீது படையெடுப்பையும் அரசு ஊக்குவிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

உள்நாட்டு உரிமைகள் காக்கும் நிறுவனமான பனாய், ‘கடுமையான ஆயுதம் ஏந்திய 10 முதல் 15 சுரங்கப் பணியாளர்கள் குழு, வாஜாபி பழங்குடிகள் வாழும் விடுடு கிராமத்தைத் தாக்கி அழிக்கும் செயலில் இறங்கியிருக்கிறது’ என்று குற்றம்சாட்டியிருக்கிறது. இந்தச் சம்பவம், பிரேசில் முழுக்க உள்ள பூர்வீக தேசங்களில் மோசமான சூழலை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சம்பவம் நடந்த பகுதிக்கு வந்த பிரேசில் மத்திய காவல்துறை, ‘விசாரிக்கிறோம்’ என்று வழக்கம்போல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறது. பிரேசிலின் பழங்குடியின மக்கள் நீண்டகாலமாக சுரங்கத் தொழிலாளர்கள், பண்ணையாளர்கள் ஆகியோரின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறார்கள். ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் இது மிகவும் மோசமான படையெடுப்பாகக் கருதப்படுகிறது.

வாஜாபி பழங்குடியினத்தின் மற்றொரு தலைவரான ஜவருவா (Jawaruwa), ‘சுரங்கத் தொழிலாளர்கள், ஆயுதம் தாங்குகிறார்கள். எங்களைக் காக்க, அரசு தன் படையினரை அனுப்பியிருக்க வேண்டும். நாங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறோம்’ என்று அறிக்கைவிடுத்திருக்கிறார். ‘‘ஏற்கெனவே காடுகள் அழிப்பு நடந்துகொண்டிருக்கும் வேளையில், தங்க சுரங்கப் பணியாளர்களால் பழங்குடியின மக்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் தவறான ஒன்று’’ என, சூழலியலாளர்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.

காடு அழிப்பு... கனிமவளக் கொள்ளை... பழங்குடிகளை விரட்டும் பிரேசில்!

இந்த விவகாரம்குறித்து பழங்குடியினர் பாதுகாப்புச் செயற்பாட்டாளர் தனராஜிடம் பேசினோம். “இங்கே நடப்பது ஒன்றுதான். ஒரு மெல்லிய கோடு... ஒரு பக்கம் காடுகளை தெய்வமாகப் பார்க்கும் பழங்குடிகள். மறுபக்கம் காடுகளைப் பணமாகவும் வளர்ச்சியாகவும் பார்க்கும் பணம் குடிகள். இப்போது பிரேசிலில் நடந்திருப்பது, அப்பட்டமான அத்துமீறல். ஆப்பிரிக்க நாடுகளில் சுரங்கத் தொழில் சட்டவிரோதமாக நடந்துவருகிறது. அவற்றை அரசாங்கமும் கண்டுகொள்வதில்லை. அப்படி வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை அவர்களிடமிருந்து வாங்கிக்கொள்கிறது.

இப்படி கனிமங்கள் எடுக்கும் தனியார் நிறுவனங்கள், வெளிநாடுகளில் அதிகம் உள்ளன. இவர்கள் தங்களுக்கென தனியாக ஒரு ராணுவத்தையே கைவசம் வைத்திருப்பார்கள். அதை வைத்து, தங்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்வார்கள். இப்போது பிரேசிலிலும் அதுதான் நடந்திருக்கிறது.

உலகமயமாக்கல் கொள்கையால் காடுகள் அழிக்கப்பட்டதுதான் மிச்சம். அரசாங்கங்கள் அமையாததற்கு முன்னர், ஓர் இடத்தில் இருக்கும் நிலமும் நீரும் பூர்வகுடிகளுக்கே சொந்தமாக இருந்தன. அப்போது எதுவும் மாசுபடாமல் சுத்தமாகத்தான் இருந்தது. இப்போது பூர்வகுடிகள் விரட்டப்பட்டு, நிலமும் நீரும் ஆக்கிரமிக்கப்பட்டு விஷமாகியுள்ளன. இனிவரும் காலங்களிலும் பிரேசிலில் நடக்கப்போவதும் இதுதான்’’ என்றார்.

பிரேசில் பிடியிலிருந்து பழங்குடிகளையும் காடுகளையும் காப்பாற்றப்போவது யார்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism