Published:Updated:

பணம் கொடுத்தால் பஸ் ஸ்டாண்டைக்கூட பட்டா போடலாம்! - இது கும்பகோணம் கூத்து

கும்பகோணம்
பிரீமியம் ஸ்டோரி
கும்பகோணம்

இவையெல்லாம் இப்போதுதான் என் கவனத்துக்கு வந்திருக்கின்றன. உடனடியாக இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்.

பணம் கொடுத்தால் பஸ் ஸ்டாண்டைக்கூட பட்டா போடலாம்! - இது கும்பகோணம் கூத்து

இவையெல்லாம் இப்போதுதான் என் கவனத்துக்கு வந்திருக்கின்றன. உடனடியாக இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்.

Published:Updated:
கும்பகோணம்
பிரீமியம் ஸ்டோரி
கும்பகோணம்

‘‘கும்பகோணம் நிலவரித் திட்ட தனி தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறப்பதால் பட்டா மாறுதல், பெயர் மாற்றம் போன்றவை பணம் கொடுத்தால் மட்டுமே முடித்துக் கொடுக்கப்படுகின்றன. பணம் இல்லாதவர்கள் பல ஆண்டுகள் அலைந்தாலும் வேலை நடப்பதில்லை” என்ற குற்றச்சாட்டு ஓங்கி ஒலிக்கிறது.

பணம் கொடுத்தால் பஸ் ஸ்டாண்டைக்கூட பட்டா போடலாம்! - இது கும்பகோணம் கூத்து

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் சங்கர், ‘‘நகர நிலவரித் திட்டத்துறையின் மூலம் கும்பகோணம் நகரச் சொத்து விவரங்கள் முழுவதும் நிர்வகிக்கப் படுகின்றன. கடந்த 2008-ம் ஆண்டு வருவாய்த் துறையின் மூலம் புதிதாகப் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்தபோது, பல்வேறு குளறுபடிகளுடன் சொத்து விவரங்களைப் பதிவேற்றம் செய்துவிட்டனர். சில இடங்களில் உரிமையாளர் பெயரைத் தவறாகவும், இன்னும் சில இடங்களில் வாடகைக்குக் குடியிருந்தவர்களையே உரிமையாளர் களாகவும் பதிவு செய்துவிட்டனர். இந்தக் குளறுபடிகளையெல்லாம் மறு களஆய்வு மூலம் விரைவாகச் சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழவே... கும்பகோணத்தில், நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகம் தொடங்கப்பட்டது. ஆனால், இந்த நிலவரித் திட்ட தாசில்தார் அலுவலகமே இப்போது புரோக்கர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது. பணம் கொடுத்தால்தான் எந்தவொரு வேலையும் நடக்கிறது. குளறுபடிகளைச் சரிசெய்து திருத்தம் மேற்கொள்ளவேண்டிய அதிகாரிகளில் சிலரோ, இந்தக் குழப்பங்களைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கத் தொடங்கி விட்டார்கள். பட்டா மாறுதல், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு சொத்தின் மதிப்புக்கு ஏற்றவாறு 6 ஆயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கவேண்டிய அவலம் ஏற்பட்டிருக் கிறது. இப்படி குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை, தனிநபருக்குப் பட்டா மாற்றம் செய்து கொடுத்துவிட்டார்கள். இன்னொரு கோயிலுக்குச் சொந்தமான குளத்தை தொழிலதிபர் ஒருவரின் பெயருக்கு மாற்றம் செய்து கொடுத்திருக்கிறார்கள். பணம் கொடுத்தால் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டைக்கூட பட்டா போட்டுக் கொடுத்துவிடுவார்கள்போல. இது தொடர்பான ஆதாரங்களையெல் லாம் ஆர்.டி.ஐ மூலமாகத் திரட்டி வைத்திருக்கிறேன். இதுவரை இங்கு பணியாற்றிய 13 தாசில்தார்களும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார் கள். இதையெல்லாம் ஆதாரத்துடன் அரசுக்குப் புகாராகவும் அனுப்பியிருக் கிறேன்” என்று படபடத்தார்.

சங்கர்
சங்கர்

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதாவிடம் பேசினோம். ‘‘இவையெல்லாம் இப்போதுதான் என் கவனத்துக்கு வந்திருக்கின்றன. உடனடியாக இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன். நிலவரித் திட்டப் பணிகளுக்கு பொதுமக்கள் யாரும் லஞ்சம் கொடுக்கத் தேவை யில்லை. அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகத் தெரிய வந்தால், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். ஒவ்வொரு புதிய திட்டம் வரும்போதும், அதை எப்படிச் செயல்படுத்துவது என்பதைவிட அதில் எப்படிச் சம்பாதிப்பது என்று சிந்திக்கும் கூட்டம் பெருத்துவிட்டது!