Published:Updated:

விண்வெளிக்குச் சென்ற தமிழ்!

ஐந்து நாள்கள் நடந்த இந்த நிகழ்வில் நடந்த சுவாரஸ்ய தருணங்கள் இதோ...

பிரீமியம் ஸ்டோரி

மிழுக்கென பிரத்யேகமாக BS Value என்கிற ஓடிடி ஆப்பை வடிவமைத்துள்ள பிளாக் ஷீப் குழுவினர், அதை விண்வெளியில் லான்ச் செய்தனர். ‘விண்வெளியில் வைத்து வெளியிடப்பட்ட முதல் செயலி’ என்ற பெருமிதத்தோடு வெளியானது BS Value செயலி. இந்த நிகழ்வை `விண்ணுக்கும் மண்ணுக்கும்’ என்கிற பெயரில் ஐந்து நாள்கள், அதாவது 110 மணி நேரம் இடைவிடாது டாக் ஷோ நடத்தி கொண்டாடியிருக்கிறார்கள். இந்த 110 மணி நேர டாக் மாரத்தானையும் இந்தியன் புக்ஸ் ஆப் ரெக்கார்டு, ஏசியன் புக்ஸ் ஆப் ரெக்கார்டுக்கும் அனுப்பியிருக்கிறார்கள். இந்த இரு சாதனைகள் தவிர்த்து, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ என்கிற பெயருக்கு ஏற்ற மாதிரி, சென்னை ஒரகடம் அருகில் 20 ஏக்கர் நிலம் வாங்கி அங்கு 1,10,000 மரங்களை நட்டு `பிளாக் ஷீப் காடு’ ஒன்றை உருவாக்கும் முயற்சியையும் தொடங்கியிருக்கிறார்கள். ஐந்து நாள்கள் நடந்த இந்த நிகழ்வில் நடந்த சுவாரஸ்ய தருணங்கள் இதோ...

விண்வெளிக்குச் சென்ற தமிழ்!

 லண்டனில் இருந்த பிளாக் ஷீப் சந்தாதாரர்கள் இருவர் முன்னிலையில்தான் இந்த விண்வெளி லான்ச் நடைபெற்றது. சிறிய அளவில் செய்யப்பட்ட செயற்கைக்கோள், ராட்சச பலூன் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. அது பூமியில் இருந்து 4 மணி நேரம் பயணம் செய்து விண்வெளியை அடைந்தபின்பு, அந்தச் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருந்த திரையில், BS Value ஆப்பின் லோகோவைத் திரையிட்டனர். செயற்கைக்கோள் தயாராகி, அது விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முழு நிகழ்வுகளும் வீடியோவாகத் திரையிடப்பட்டது.

விண்வெளிக்குச் சென்ற தமிழ்!

 BS Value ஆப்பில் இதுவரை பிளாக் ஷீப் யூடியூப் சேனலில் வெளியான ஸ்பெஷல் வீடியோக்கள், தமிழில் வெளியாகி ஹிட்டான 100 படங்கள், குறும்படங்கள், பிரபலமான யூடியூப் செலிபிரிட்டிகளின் வீலாக் வீடியோ என பல வீடியோக்கள் இருந்தன. இதுபோக பிளாக் ஷீப் டீம் எடுத்திருந்த ஐந்து புது வெப் சீரிஸும் ஒவ்வொன்றாக வெளியானது. முதலில் ஹர்பஜன் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த, ‘திருவள்ளுவர் கன்சல்டன்ஸி சர்வீஸஸ்’ சீரிஸ் வெளியானது. அதன் பின்னர், காமெடி நடிகர் செந்தில் நடித்திருந்த ‘ஆயிரம் ஜன்னல் வீடு’ சீரிஸும், பிளாக் ஷீப் குழுவினர் நடித்த `கல்லூரி வாசல்’, ’படிக்காதவன்’, `யாவரும் நலம்’ என்ற மூன்று சீரிஸும் அடுத்தடுத்து வெளியாகின.

விண்வெளிக்குச் சென்ற தமிழ்!

 `விண்ணுக்கும் மண்ணுக்கும்’ நிகழ்வின் முதல் நாளில் சிறப்பு விருந்தினராக வந்த சிவகார்த்திகேயன், செயலியை விண்வெளியில் லான்ச் செய்ததோடு பிளாக் ஷீப் காட்டில் 200 மரங்களை வாங்கிக்கொண்டார்.

 நிகழ்வின் இரண்டாம் நாளுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். பிளாக் ஷீப் குழுவினரைப் பாராட்டியதோடு, தனது ஸ்டைலில் இரண்டு எம்.ஜி.ஆர் பாடல்களையும் பாடினார்.

விண்வெளிக்குச் சென்ற தமிழ்!

 பிளாக் ஷீப் டீமின் `ஆயிரம் ஜன்னல் வீடு’ வெப் சீரிஸில் நடித்த காமெடி நடிகர் செந்தில், நிகழ்வில் கலந்துகொண்டு பேசியபோது, “இந்த டீமோடு சேர்ந்து வேலை பார்த்ததற்குப் பிறகு, புது எனர்ஜி கிடைச்சிருக்கு” என்றார். செந்தில் நடித்த இந்த சீரிஸை வெளியிட்ட இயக்குநர் சேரன், “குடும்பப் படங்களுக்கும் எனக்கும் பெரிய கனெக்‌ஷன் இருக்கு. இந்த சீரிஸின் அடுத்த பாகம் எடுத்தால், அதை நான்தான் இயக்குவேன்” என்றார்.

 பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் மற்றும் பிரியா பவானி சங்கர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

விண்வெளிக்குச் சென்ற தமிழ்!

 சினிமா, அரசியல், சின்னத்திரை, யூடியூப் என பல மீடியம்களில் பிரபலமாக இருக்கும் பலர் இந்த ஐந்து நாள் நிகழ்வில் கலந்துகொண்டனர். பிளாக் ஷீப் ரசிகர்களும் பல ஊர்களிலிருந்து வந்திருந்தார்கள்.

விண்வெளிக்குச் சென்ற தமிழ்!

 நிகழ்வின் முத்தாய்ப்பாக பிளாக் ஷீப் குழுவினர்கள் பேசும் போது, “இந்த BS Value ஆப் பிளாக் ஷீப் டீமுக்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்டது இல்லை. இது எல்லாத் தமிழ் யூடியூப் சேனல்களுக்கும், தமிழில் படம், வெப் சீரிஸ் எடுக்கணும்னு நினைக்கிற பலருக்கும் பொதுவானதுதான். யார்கிட்ட நல்ல கதை இருந்தாலும் அதை BS Value ஆப்பில் படமாகவோ, வெப் சீரிஸாகவோ எடுக்கலாம். அதற்கு நாங்க உறுதுணையாக இருப்போம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு