Published:Updated:

வருமான வரிச் சலுகைகளில் மாற்றம் வருமா..?

பட்ஜெட் 2020 எதிர்பார்ப்புகள்
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் 2020 எதிர்பார்ப்புகள்

பட்ஜெட் 2020 எதிர்பார்ப்புகள்!

வருமான வரிச் சலுகைகளில் மாற்றம் வருமா..?

பட்ஜெட் 2020 எதிர்பார்ப்புகள்!

Published:Updated:
பட்ஜெட் 2020 எதிர்பார்ப்புகள்
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் 2020 எதிர்பார்ப்புகள்

ண்மையில் பெருநிறுவனங்களுக்கான வருமான வரி 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. புதிய உற்பத்தி நிறுவனங்கள் அக்டோபர் 1-ம் தேதிக்குப் பிறகு ஆரம்பிக்கப்படும்பட்சத்தில் இந்த வரி 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. இதனாலாவது நிறுவனங்களின் லாபம் அதிகரித்து, அவை வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புமே என்பதற்காக அப்படிச் செய்யப்பட்டது. ஆனால், பொருளாதார மந்தநிலை காரணமாக பொதுமக்களில் பலரும் செலவு செய்வதையே கணிசமாகக் குறைத்திருக்கிறார்கள். இதனால் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழியேற்படவில்லை. பொருளாதாரம் வளர்ச்சிகாண வேண்டுமெனில், விற்பனை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் புதிய பொருள்கள் பெருமளவில் தயாரிக்கப்படும்; பலருக்கு வேலை கிடைக்கும்; மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

வருமான வரிச் சலுகைகளில் மாற்றம்  வருமா..?

தற்போது பொருள்களுக்கான தேவை குறைவாக இருப்பதால், பலரும் வேலையிழக்கும் அபாயநிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு குறைகிறது. தனிநபர்களுக்கான வருமான வரியைக் குறைத்தால், பொதுமக்களின் செலவிடும் திறன் அதிகரிக்கும். இதனால் வருமான வரி அடிப்படை வரம்பை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

``பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் 2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?’’ என்று சென்னையிலிருக்கும் ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமாரிடம் கேட்டோம். அவர், அது குறித்து விரிவாகப் பேசினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடிப்படை வரி வரம்பு அதிகரிப்பு

“2019-20-ம் நிதியாண்டில் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருக்கும் பட்சத்தில், 87ஏ பிரிவின்கீழ் வரித் தள்ளுபடி ரூ.12,500 வழங்கப்பட்டது. அதேநேரத்தில், வருமான வரி அடிப்படை விலக்கு ரூ.2.5 லட்சமாகத்தான் இருக்கிறது. இதை ரூ.5 லட்சமாக அதிகரிக்கும்பட்சத்தில் வரியைச் செலுத்தும் அனைவருக்கும் ரூ.12,500 வருமான வரிச் சலுகை கிடைக்கும். மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரியை 22% ஆகக் குறைத்திருக்கிறது. ஆனால், தனிநபர்களுக்கு 30% வரி என்பது எந்தவிதத்தில் நியாயம்?

பட்ஜெட் 2020 எதிர்பார்ப்புகள்
பட்ஜெட் 2020 எதிர்பார்ப்புகள்

வீட்டுக் கடன்

தற்போது திரும்பச் செலுத்தும் வீட்டுக் கடனில் அசலில் ரூ.1.5 லட்சம் மற்றும் வட்டியில் ரூ.2 லட்சம் நிதியாண்டில் வரிச் சலுகையாக அளிக்கப்படுகிறது. திரும்பச் செலுத்தும் அசலில் கழிக்கப்படும் ரூ.1.5 லட்சம் என்பதில் பி.எஃப்., ஆயுள் காப்பீடு பிரீமியம் தொடங்கி சுமார் 15 வகையான முதலீடுகள் மற்றும் செலவுகள் அடங்கும். அதாவது, பி.எஃப்., ஆயுள் காப்பீட்டுக்கான பிரீமியம், மகன் மற்றும் மகளின் கல்விக் கட்டணம் போன்ற வரிச் சலுகைகளைக் கழித்தால், வீட்டுக் கடன் அசலுக்குக் கிடைக்கும் சலுகை மிகக் குறைவாகவே இருக்கும் அல்லது வரிச் சலுகை இருக்காது. மேலும், நகரங்களில் வீடுகளின் விலை மிக அதிகமாக இருப்பதால், வீட்டுக் கடன் தொகையும் அதிகமாக உள்ளது. அந்த வகையில், வீடு வாங்குபவர் பலன் பெற வேண்டுமெனில், அசலில் ரூ.3 லட்சம், வட்டியில் ரூ. 3 லட்சம் வரிச் சலுகை அளிப்பது அவசியம்.

வீடு வாங்குபவர் பலன் பெற வேண்டுமெனில், அசலில் ரூ.3 லட்சம், வட்டியில் ரூ.3 லட்சம் வரிச் சலுகை அளிப்பது அவசியம்.

80சி வரம்பு அதிகரிப்பு

வருமான வரிப் பிரிவு 80சி-யின்கீழ் முதலீடுகள், செலவுகளையெல்லாம் சேர்த்துத்தான் நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த வரம்பை ரூ.3 லட்சம் அல்லது ரூ.5 லட்சமாக அதிகரித்தால் மக்களின் சேமிப்பு கணிசமாக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அரசுக்கும் முதலீடுகள் மூலம் நீண்டகாலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள கணிசமான தொகை கிடைக்கும். குறிப்பாக, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்துக்கு வழங்குவது போல், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்துக்கு ரூ.25,000 அல்லது ரூ.30,000 தனியே வரிச் சலுகை கொடுக்கலாம். இதனால், இன்னும் அதிகமானவர்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வாய்ப்பு ஏற்படும்.

வருமான வரிச் சலுகைகளில் மாற்றம்  வருமா..?

மூத்த குடிமக்கள் சிகிச்சைச் செலவு

மெடிக்ளெய்ம் பாலிசி இல்லாத மூத்த குடிமக்கள் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது, அதற்கான செலவில் ரூ.50,000 வரை வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. மருத்துவச் செலவு இன்றைக்கு மிகவும் அதிகரித்துவிட்டது. எனவே, மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் முழு மருத்துவச் செலவையும் வருமானத்திலிருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும்.

நீண்டகால மூலதன ஆதாய வரி

வீட்டை விற்றுக் கிடைக்கும் தொகையில் நீண்டகால ஆதாயத்தை மட்டும் கேப்பிட்டல் கெயின் பாண்டுகளில் முதலீடு செய்தால் போதும்; வரிப் பிரிவு 54-ன்கீழ் வரிச் சலுகை கிடைக்கும். மீதித் தொகையை இன்னொரு வீடு வாங்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதேநேரத்தில், நிலத்தை விற்கும்போது கிடைக்கும் முழுத் தொகைக்கு வரி செலுத்தாமலிருக்க, கேப்பிட்டல் கெயின் பாண்டுகளில் முழுத் தொகையையும் முதலீடு செய்ய வேண்டும். இதற்கான வரிப் பிரிவு 54எஃப். நடுத்தர மக்கள் பயன்பெறும்விதமாக நிலத்தை விற்ற தொகைக்கு பிரிவு 54-ன்கீழ் உள்ளதுபோல் வரிச் சலுகை அளிக்கலாம். மேலும், கடன் வாங்கி இடத்தை வாங்கியிருந்தால் அதற்கான வட்டி அல்லது கடன் தொகையைக் கழித்துக்கொள்ள வழிசெய்யலாம். இப்படிச் செய்யும்போது நடுத்தர மக்களும் சொந்த வீடு வாங்க முடியும்.

நிபுணர்களுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு

மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட், ஆடிட்டர் போன்ற நிபுணர்களுக்கு 18% ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. இவை தவிர, அவர்கள் 30% வருமான வரி செலுத்த வேண்டும். இவை இரண்டையும் சேர்த்தால் வருமானத்தில் 48% வரியாகச் செலுத்த வேண்டும். எனவே, ஜி.எஸ்.டி-யை 10% அல்லது 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும்” என்றார்.

இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் நிதியமைச்சர் நிறைவேற்றுவாரா?