Published:Updated:

பட்ஜெட், பிளானிங், பாதுகாப்பு - தீபாவளி ஷாப்பிங் ஸ்மார்ட் டிப்ஸ்

திட்டமும் செயலாக்கமும்

பிரீமியம் ஸ்டோரி

தீபாவளி நெருங்குகிறது. கொரோனா சூழலில் பாது காப்பான ஷாப்பிங்குக்கு எல்லாருமே முக்கியத்துவம் கொடுப்போம். பொருளாதார சிக்கல் எழுந்துள்ள இச்சூழலில் உங்களின் ஷாப்பிங் பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்... எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும் எனத் தகவல்களை வழங்குகிறார் நிதி ஆலோசகர் புவனா.

பட்ஜெட், பிளானிங், பாதுகாப்பு - தீபாவளி ஷாப்பிங் ஸ்மார்ட் டிப்ஸ்

திட்டமிடல்

தீபாவளி ஷாப்பிங்குக்காக உங்களின் பட்ஜெட் எவ்வளவு, என்ன பொருள்களையெல்லாம் வாங்கப் போகிறீர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்குவதற்கான செலவு, ஆடைகளுக்கான செலவு, பட்டாசு, உணவுப் பொருள்களுக்கான செலவு என ஒவ்வொன்றுக்குமான தொகையை முதலில் பட்டியலிடுங்கள்.

எல்லா வருடமும் தீபாவளி போனஸ் தொகை அல்லது சேமிப்புத் தொகை முழுவதையும் தீபாவளி ஷாப்பிங்குக்காகச் செலவிடும் வழக்கம் கொண்டிருப்போம். இந்த ஆண்டு நம்முடைய திட்டமிடலை மாற்றியமைப்பது அவசியம். கடந்த வருடம் தீபாவளி ஷாப்பிங்குக்காக நீங்கள் செலவிட்ட தொகையை முதலில் கணக்கிடுங்கள். அந்தத் தொகையில் 50 சதவிகிதத்தைக் குடும்பத்தின் அவசர நிதிக்காக இந்த ஆண்டு ஒதுக்குவது நல்லது. பேன்டெமிக் சூழலில் அடுத்த சில மாதங்களுக்கு வீட்டின் பொருளாதார சிக்கலைச் சரிசெய்ய இந்த பிளானிங் உங்களுக்கு கைகொடுக்கும்.

பட்ஜெட், பிளானிங், பாதுகாப்பு - தீபாவளி ஷாப்பிங் ஸ்மார்ட் டிப்ஸ்

வீட்டில் இருக்கும் அனைவரும் ஒன்றுகூடி இந்த வருடம், ஷாப்பிங் தொகை எவ்வளவு ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தொகை ஒதுக்க இயலும் என்று முடிவுசெய்துவிட்டால், தேவையில்லாத பொருள்களை வாங்கிக் குவிப்பதைத் தவிர்க்கலாம். ஷாப்பிங் ஆன்லைனிலா அல்லது நேரில் சென்று வாங்குவதா என்பதைத் திட்டமிட்டு என்ன பொருளையெல்லாம் வாங்க வேண்டும் என்பதைப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். பட்டியலில் இருக்கும் பொருள் தவிர்த்து வேறு ஏதேனும் பொருள் வாங்குகிறீர்கள் என்றால் அது அவசியம்தானா என்பதைப் பல முறை யோசிப்பது அவசியம்.

பட்ஜெட், பிளானிங், பாதுகாப்பு - தீபாவளி ஷாப்பிங் ஸ்மார்ட் டிப்ஸ்

ஆன்லைன் ஷாப்பிங்

கொரோனாவிலிருந்து தப்பிக்க கூடுமானவரை ஆன்லைன் ஷாப்பிங்கே பாதுகாப்பானது. ஆன்லைன் ஷாப்பிங்கில் நீங்கள் எந்தப் பொருள் வாங்கினாலும் அதற்கு கீழே இருக்கும் ரிவ்யூக்கள் மற்றும் கஸ்டமர்கள் வெளியிட்ட புகைப்படங்களையும் ஒருமுறை பார்த்துவிட்டு அதன்பின் பொருள்களை ஆர்டர் செய்வது நல்லது.

விழாக்காலங்களில் ஆன்லைனில் அதிகப்படியான ஆஃபர்களைப் பெற இயலும். அது உண்மையான ஆஃபர் தானா என்று பார்த்து தேவைப்படும் பொருள்களை வாங்கலாம்.

பட்ஜெட், பிளானிங், பாதுகாப்பு - தீபாவளி ஷாப்பிங் ஸ்மார்ட் டிப்ஸ்

ஆஃபரில் வாங்கும்போது பணத்தைச் சேமிக்க முடியும். ஆனால், ஆஃபரில் கிடைக்கிறது என்பதற்காகத் தேவையில்லாத பொருள்களை வாங்கிக் குவித்துப் பணத்தை விரயமாக்காதீர்கள்.

குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆர்டர் செய்தால் ஆன்லைனில் ஃப்ரீ டெலிவரி சேவையைப் பெற முடியும் என்பதால் வீட்டிலிருப்பவர்கள் அனைவருக்கும் தேவைப்படும் பொருள்களைப் பட்டியலிட்டுக்கொண்டு ஆர்டர் செய்யலாம். பணமும் நேரமும் குறையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தவிர்க்க வேண்டியவை...

வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்கும்போது நீங்கள் வாங்கும் பொருள் சற்று விலை அதிகமாக இருந்தாலும் தரமான பிராண்டடு பொருள்களை வாங்குவது நல்லது. வாரன்ட்டி, கியாரன்ட்டி போன்றவற்றை செக் செய்துகொள்ளவும். முடிந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஷோரூமுக்கே பாதுகாப்புடன் சென்று வாங்கலாம்.

பெரும்பாலானவர்கள் வெளியிலிருந்து பொருள்களை வாங்க விரும்பாததால், நண்பர்களின் வீடுகளுக்கு ஸ்வீட் பாக்ஸ் பகிர்வதை இந்த வருடம் தவிர்த்துவிடலாம் அல்லது நாம் கொடுக்கும் பொருளை வாங்கிக்கொள்வார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஆர்டர் செய்யலாம்.

பட்ஜெட், பிளானிங், பாதுகாப்பு - தீபாவளி ஷாப்பிங் ஸ்மார்ட் டிப்ஸ்

இன்னும் சில மாதங்களுக்கு பெரிய அளவிலான நிகழ்ச்சி களுக்கு நாம் வெளியில் செல்லப்போவதில்லை. எனவே, அதிக விலை கொடுத்து ஆடைகள் வாங்குவதைத் தவிர்த்து குறைந்த பட்ஜெட்டில் பிளான் செய்துகொள்ளலாம். இறுதி நேர ஷாப்பிங்கைத் தவிருங்கள். இதனால் கூட்ட நெரிசலில் சிக்காமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.

என்னதான் பட்ஜெட்டை பக்காவாகத் திட்டமிட்டாலும், ஷாப்பிங் சென்றவுடன் பிளானிங்கெல்லாம் மறந்து கண்டபடி செலவு செய்யும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அப்படிப்பட்டவர்கள் உங்களின் திட்டமிடலுக்கு ஏற்ற தொகையை பணமாகக் கையில் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு பொருளுக்கும் பணத்தைக் கட்டும்போதும், உங்களின் மீதித் தொகை உங்களுக்கு நினைவுக்கு வந்துகொண்டே இருக்கும், திட்டமிடலைத் தாண்டி வேறு பொருள்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.

பட்ஜெட், பிளானிங், பாதுகாப்பு - தீபாவளி ஷாப்பிங் ஸ்மார்ட் டிப்ஸ்

பாதுகாப்பில் கவனம்

விலை மலிவு என்பதற்காக அதிக கூட்டமுள்ள இடங்களில் ஷாப்பிங் செய்யாதீர்கள். குடும்பத்துடன் ஷாப்பிங் செல்ல வேண்டாம். வீட்டில் யாரேனும் ஒருவர் மட்டும் எல்லோருடைய ஆடையின் அளவுகள், தேவைப்படும் பொருள்கள் எல்லாவற்றையும் குறித்துக்கொண்டு ஷாப்பிங் செல்லலாம். இதனால் செலவுகள் குறையும். பாதுகாப்பும்கூட.

எங்கு ஷாப்பிங் சென்றாலும் உங்களின் முதல் செலவு தரமான மாஸ்க் மற்றும் சானிட்டைசருக்கானதாக இருக்கட்டும். உங்களின் கவனம், சமூக இடைவெளி யின் மீதாகவும் இருக்கட்டும்.

பெரும்பாலானவர்கள் வெளியிலிருந்து பொருள்களை வாங்க விரும்பாததால், நண்பர்களின் வீடுகளுக்கு ஸ்வீட் பாக்ஸ் பகிர்வதை இந்த வருடம் தவிர்த்து விடலாம் அல்லது நாம் கொடுக்கும் பொருளை வாங்கிக்கொள்வார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஆர்டர் செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு