Published:Updated:

நாணயம் பிட்ஸ்...

பிட்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ்...

பிட்ஸ்...

விப்ரோ பைபேக்... பங்குகளை விற்ற அசீம் பிரேம்ஜி!

நாணயம் பிட்ஸ்...

இந்தியாவின் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனம் விப்ரோ, சமீபத்தில் தனது பங்குகளைத் திரும்ப வாங்கியது (buyback). இந்த பைபேக்கில் விப்ரோவின் முதலீட்டாளர்களைவிட அசீம் பிரேம்ஜியின் பார்ட்னர் நிறுவனங்கள் பல மில்லியன் பங்குகளை விற்றிருக்கிறது. பிரேம்ஜி தனக்குச் சொந்தமான 12.2 மில்லியன் பங்குகளை விற்றிருக்கிறார். இதன்மூலம் கிடைக்கும் பணத்தை பிரேம்ஜி பல்வேறு நலத்திட்டங் களுக்குச் செலவு செய்ய வாய்ப்புண்டு என்கிறார்கள்!

#அசீம் பிரேம்ஜி ஆல்வேஸ் கிரேட்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
நாணயம் பிட்ஸ்...

2019-ல் அதிக லாபம் தந்த கார்!

கார் விற்பனை நம் நாட்டில் மிகவும் மந்தமாக இருக்கும் நிலையிலும், உலக அளவில் அதிகமாக விற்பனையாகி, அதிக லாபம் தந்த கார் எது தெரியுமா? டெஸ்லாவோ அல்லது ஃபெராரியோ அல்ல. போர்ஸ்சே 911 கார்தான். போர்ஸ்சே நிறுவனம் விற்பனை செய்யும் கார்களில் 30% கார்கள் இந்த 911 மாடல் கார்கள்தான். 992 என்கிற புதிய மாடல் கார் அறிமுகப் படுத்தப்பட்ட பின்னும் கடந்த ஆண்டில் 35,573 கார்கள் விற்பனையாகிப் பட்டையைக் கிளப்பி வருகிறது 911 மாடல் கார்!

#போர்ஸ்சே 911, நம்ம ஊர் ஆல்டோ மாதிரி...!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாணயம் பிட்ஸ்...

பல்கலைக்கழகம்... பின்தங்கும் இந்தியா!

‘டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ நிறுவனம், உலகம் முழுக்க 92 நாடுகளிலிருந்து 1,600-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 300 இடங்களில் நம் நாட்டைச் சேர்ந்த எந்தப் பல்கலைக்கழகமும் இல்லை. பெங்களூரைச் சேர்ந்த இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் 350 இடங்களில் இருக்கிறது. இந்தூர், மும்பை, டெல்லி, கரக்பூர் பல்கலைக்கழகங்கள் முதல் 500 இடங்களில் உள்ளன. முதல் 500 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழமும் இல்லை!

#இது பெருமைக்குரிய விஷயமில்லையே..!

நாணயம் பிட்ஸ்...

அதிகரிக்கும் நஷ்டம்... அசராத விஜய்சேகர் சர்மா!

பே டிஎம் நிறுவனத்தின் நஷ்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2018-19-ல் இதன் நஷ்டம் 163% அதிகரித்து, ரூ.4,217 கோடியாக இருக்கிறது. இந்த நஷ்டத்தைக் கண்டு விஜய்சேகர் சர்மா அசரவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனம் ரூ.14,000 கோடியைப் புதிதாக முதலீடு செய்திருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.21,000 கோடியைப் புதிதாக முதலீடு செய்யப்போவதாகவும் அறிவித்திருக்கிறது.

#விஜய் தைரியமான பிசினஸ்மேன்தான்!

நாணயம் பிட்ஸ்...

இந்தியர்கள் அதிகம் கவலைப்படும் விஷயம்!

நம் நாட்டவர்கள் எதைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள் என்பதை ‘இப்சோஸ்’ மார்க்கெட் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. வேலைவாய்ப்பின்மைதான் தங்களை மிகவும் கவலைக்கு உள்ளாக்குவதாக 46% பேர் சொல்லியிருக்கிறார்கள். கடந்த மே மாதத்தில் 42 சதவிகிதமாக இருந்த இது, கடந்த ஜூன் ஜூலையில் 46 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. ஆனால் ஆச்சர்யமான விஷயம், நிதி மற்றும் அரசியல் ஊழல்கள் குறித்த கவலை குறைந்திருக்கிறதாம்!

#மக்களின் கவலையைப் போக்க அரசாங்கம் என்ன செய்யப் போகிறது?

நாணயம் பிட்ஸ்...

ஃப்ளிப்கார்ட், அமேசான்... தீபாவளிப் போட்டி!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்போவது யார் என்கிற மோதலில் இறங்கியிருக்கின்றன ஃப்ளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள். ஃப்ளிப்கார்ட் நிறுவனம் செப்டம்பர் மாதம் 29-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை ‘பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையை நடத்தவிருக்கிறது. அமேசான் நிறுவனமோ தீபாவளிக்குக் கொஞ்சம் முன்னதாக அதாவது, அக்டோபர் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மெகா விற்பனையை நடத்தவிருக்கிறது.

#வாடிக்கையாளர்களுக்குக் கொண்டாட்டம்தான்!