Published:Updated:

நாணயம் பிட்ஸ்...

பிட்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ்...

பிட்ஸ்...

நாணயம் பிட்ஸ்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உலகின் மதிக்கத்தக்க பத்து நிறுவனங்கள்!

உலக அளவில் மிகவும் மதிக்கத்தக்க நிறுவனங்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்ட விசா நிறுவனம். இரண்டாவது, கார் தயாரிப்பு நிறுவன மான ஃபெராரிக்குக் கிடைத்திருக்கிறது. மூன்றாவது இடம், நமது நாட்டைச் சேர்ந்த இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்குக் கிடைத்திருப்பதில் நாம் அனைவருமே பெருமைகொள்ளலாம். நெட்ஃப்ளிக்ஸ், பேபால், மைக்ரோசாஃப்ட், வால்ட் டிஸ்னி, டொயோட்டா மோட்டார், மாஸ்டர் கார்ட், காஸ்ட்கோ ஹோல்சேல் ஆகிய நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருக்கின்றன.

நாணயம் பிட்ஸ்...

# 10 இடங்களில் டி.சி.எஸ் இடம்பெறுவது எப்போது?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐ.பி.ஓ தோல்வி... பதவி விலகிய நியுமென்!

விவொர்க் - உலக அளவில் மிக வேகமாக வளர்ந்துவந்த ஸ்டார்ட்அப் நிறுவனம். அலுவலக இடத்தைப் பகிரும் சேவையைத் தந்துவரும் இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ நியுமென் (Neumann) வலுக்கட்டாயமாகப் பதவி விலகும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.

நாணயம் பிட்ஸ்...

இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ சமீபத்தில் வரவிருந்தது. ஆனால், இந்த நிறுவனத்தின் மதிப்பு முன்பு 47 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டது, தற்போது வெறும் 15 பில்லியன் டாலராகக் குறைத்து மதிப்பிடப்பட்டிருக் கிறது. தவிர, இந்த நிறுவனத்தைச் சரியாக நிர்வாகம் செய்ய வில்லை. எனவே, அவர் பதவி விலகுவதே சரி என இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் சாஃப்ட்பேங்க் நிறுவனத்தின் நிறுவனர் மசயோசி சன் உள்படப் பலரும் வற்புறுத்த, வேறு வழியில்லாமல் சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் நியுமென்!

# ஊபரில் கலாநிக்... விவொர்க்கில் நியுமென்!

ஜி.எஸ்.டி ரீஃபண்ட் 90% தந்தாச்சு... மத்திய அமைச்சர் அதிரடி!

சரக்கு மற்றும் பொருள்களை வாங்கும்போது, கட்டிய ஜி.எஸ்.டி வரியானது மத்திய அரசாங்கத்திடமிருந்து திரும்பக் கிடைப்பதில் மிகுந்த காலதாமதம் ஆகிறது எனச் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சமீபகாலமாகப் புகார் சொல்லிவந்தன.

நாணயம் பிட்ஸ்...

இந்த வரியானது உடனடியாகத் திரும்ப அளிக்கப்படும் என சில வாரங்களுக்குமுன் அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ‘‘கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவரப்படி, ரூ.10,785 கோடி ஜி.எஸ்.டி திரும்பத் தரவேண்டியிருந்தது. இதில் ரூ.9,681 கோடியை உடனே திரும்பத் தந்துவிட்டோம். மீதமுள்ள பணத்தை டெக்னிக்கல் காரணங்களுக்காகவே நிறுத்தி வைத்திருக் கிறோம்’’ என்று சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்.

# சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பிரச்னை தீர்ந்ததா?

ஊபர் கலாநிக்... இந்தியாவில் முதல் முதலீடு!

ஊபர் நிறுவனத்தின் இணை நிறுவனரான ட்ராவிஸ் கலாநிக், இந்தியாவில் முதன்முதலாக தொழில் முதலீடு செய்திருக்கிறார். ஊபர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டபின், வேகமாக வளரும் எந்தத் தொழிலில் முதலீடு செய்யலாம் என்று கவனித்து வந்தார் கலாநிக்.

நாணயம் பிட்ஸ்...

அவர் கண்ணில்பட்டது இந்தியாவின் ரிபெல் ஃபுட் என்கிற க்ளவுட் கிச்சன் நிறுவனம். ஒரே இடத்தில் உணவுகளைச் சமைத்து எல்லா இடங்களுக்கும் கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் க்ளவுட் கிச்சன். இந்த பிசினஸ் மாடல் உலகில் வேறு எங்கும் இல்லை என்பதால், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார் கலாநிக். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ரிபெல் ஃபுட் நிறுவனத்துக்கு 22 நகரங்களில் 250 க்ளவுட் கிச்சன்கள் இருக்கின்றன!

# அடுத்து ஜாக் மாவும் இதில் முதலீடு செய்வாரா?

மீண்டும் சி.இ.ஓ ஆனார் சச்சின் பன்சால்!

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை பின்னி பன்சாலுடன் தொடங்கி, அந்த நிறுவனத்தைப் பெரிதாக வளர்த்தெடுக்க உதவியவர் சச்சின் பன்சால். ஆனால், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்குவதற்குமுன்பே அந்த நிறுவனத்திலிருந்து விலகினார் சச்சின் பன்சால்.

நாணயம் பிட்ஸ்...

இப்போது பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட சைத்தன்யா ரூரல் இன்டர்மீடியேஷன் டெவலப்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் வங்கிசாரா நிதி நிறுவனத்தில் 739 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறார். இந்த முதலீட்டின்மூலம் இந்த நிறுவனத்தின் பெரும்பங்கு முதலீடு சச்சின் பன்சால் வசமானதால், அவர் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக ஆகியிருக்கிறார்.

# அடுத்த ரவுண்டு வர சச்சின் தயார்!

ஆஃப்லைனில் கலக்கும் ஐ.டி ஃப்ரெஷ்...!

ரயில் டிக்கெட் முதல் மருந்து மாத்திரைகள் வரை பலரும் ஆன்லைனிலேயே வாங்கும் இந்தக் காலத்தில், ‘‘எனக்கு வெறும் 4% மட்டுமே ஆன்லைன்மூலம் வருகிறது’’ என்று சொல்கிறார் ஐ.டி ஃப்ரெஷ் ஃபுட் நிறுவனத்தின் சி.இ.ஓ முஸ்தபா. இட்லி, தோசை மாவு உள்பட பலவகையான உணவுகளுக்கான மாவினை இந்தியா முழுக்க 35 நகரங்களில் 30 ஆயிரம் கடைகளில் விற்பனை செய்து வருகிறது ஐ.டி ஃப்ரெஷ் ஃபுட்.

நாணயம் பிட்ஸ்...

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பிக் பாஸ்கெட்மூலம் ஆன்லைனில் விற்பனைக்குக் கிடைத்தாலும் மாதமொன்றுக்கு ரூ.50 லட்சத்துக்கு மட்டுமே ஆன்லைன்மூலம் விற்பனை ஆகிறதாம். இது அந்த நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் வெறும் 4% மட்டுமே!

# கலக்குங்க முஸ்தபா கலக்குங்க..!