டி.வி.எஸ் வேணு சீனிவாசனுக்கு டெமிங் பிரைஸ் விருது!

பொருள்களைத் தரமாகத் தயாரிக்கும் நிறுவனங்களைப் பெருமைப்படுத்தி, கெளரவிப்பதற்காக டெமிங் பிரைஸ் விருதை ஜப்பானைச் சேர்ந்த ஜப்பானீஸ் யூனியன் ஆஃப் சயின்டிஸ்ட்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் வழங்கிவருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வந்தாலும், இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது முதன்முறையாக டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. முழுமையான தர நிர்வாகத்துக்காக (Total Quality Management) இந்த விருது டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்துக்குத் தரப்பட்டிருக்கிறது. டி.வி.எஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து பிற நிறுவனங்களும் இந்த விருதை வாங்கும் அளவுக்கு உயர வேண்டும்!

# டி.வி.எஸ் நிறுவனத்துக்கு வாழ்த்துகள்!

இன்ஃபோசிஸ் கணக்கு... கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாது!

அண்மையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாக சில விசில்புளோயர்கள் பிரச்னையைக் கிளப்ப, அந்தப் பங்கின் விலை கணிசமாக விழுந்தது. அதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலேகனி உடனடியாகத் தலையிட்டு, இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ‘இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் தொடர்பான நடைமுறை மிக மிக வலுவாக இருக்கிறது. அவற்றைக் கடவுளே நினைத்தாலும்கூட மாற்ற முடியாது. நிறுவனம் தொடர்பான கணக்குகளை மிகச் சரியாகப் பார்த்து பைசல் செய்யும் அளவுக்குப் பல நிபுணர்கள் இருக்கின்றனர். எனவே, யாரும் கவலைப்பட வேண்டாம். என்றாலும், புகார் தொடர்பான விசாரணையை விரைவிலேயே முடித்து வெளியிடுவோம்’ என்று விளக்கம் தந்திருக்கிறார் நந்தன் நிலேகனி.

# பிரச்னை முடிந்தால் நல்லதுதான்!

டாப் 10 ஃபின்டெக் நிறுவனங்கள்... இந்தியாவிலிருந்து எட்டு நிறுவனங்கள்!

ஆடிட்டிங் மற்றும் தொழில் ஆலோசனை தொடர்பான சர்வதேச நிறுவனமான கே.பி.எம்.ஜி, ஹெச்2 வென்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உலக அளவிலுள்ள 100 முக்கியமான ஃபின்டெக் நிறுவனங்களின் (பணப் பரிமாற்றம் மற்றும் நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள்) பட்டியலை வெளியிட்டிருக்கிறது. உலக அளவிலான ஃபின்டெக் நிறுவனங்களில் பேடிஎம் நிறுவனம் ஐந்தாம் இடத்திலும் ஓலா மணி எட்டாம் இடத்திலும் இருக்கின்றன. பாலிசிபஜார் நிறுவனம் 21-ம் இடத்திலும், கடனுதவி நிறுவனமான லெண்டிங்கார்ட் 23-ம் இடத்திலும் இருக்கின்றன. ஃபின்டெக் துறையில் உலக அளவில் முதல் 25 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு நிறுவனங்கள் இடம்பிடித்திருப்பது நமக்குப் பெருமையே!

# நிதித் துறையில் நம்மவர்கள் எப்போதும் கில்லாடிகள்தான்!

வரி செலுத்துவதில் சர்ச்சை... பொது மன்னிப்புக்குத் தயாரில்லை!

வருமான வரி செலுத்துவதில் வருமான வரித் துறைக்கும் தனிநபர்களுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பல ஆயிரம் வழக்குகள் முடிவுக்கு வராமலேயே இருக்கின்றன. இந்த நிலையில் `சப்கா விகாஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. பொது மன்னிப்பின் அடிப்படையில் ஒருவர் தன் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து, வழக்கை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். `இந்தத் திட்டம் இந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்’ என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 17,000 பேர் மட்டுமே விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். `இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.1.5 லட்சம் கோடி கிடைக்கும்’ என மத்திய அரசு எதிர்பார்த்தாலும், அதிகபட்சம் ரூ.35,000 கோடி மட்டுமே கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

# வழக்கு என்று வந்துவிட்டாலே அது முடிவுக்கு வர நீண்ட காலமாகும் என்பது தெரிந்த விஷயம்தானே!

டெல்லி காற்று மாசுபாடு... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தலைநகர் டெல்லி காற்று மாசு காரணமாக கடந்த சில வாரங்களாகவே பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை எதிர்கொண்டுவருகிறது. இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள விவசாயிகள் அறுவடைக்காலம் முடிந்தவுடன், கோதுமை வைக்கோலை எரிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இப்படி எரிப்பதால் பெரும்புகை கிளம்பி சுற்றுச்சூழலுக்குப் பாதகம் ஏற்படுகிறது. வைக்கோலை விரைவில் மக்கச் செய்வதற்காகவே இந்த மாநிலங்களிலுள்ள விவசாயிகள் இப்படிச் செய்கின்றனர். `எரிக்கப்படாத ஒரு குவிண்டால் வைக்கோலுக்கு ரூ.100 வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இப்படிச் செய்வதன் மூலமாவது அறுவடையான பயிர்களை விவசாயிகள் எரிப்பதைத் தடுக்கலாம் என்று நினைக்கிறது உச்ச நீதிமன்றம்!

# காற்று மாசுபடாமல் தடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

முத்ரா கடன்... 28% வேலைவாய்ப்பு உயர்ந்தது!

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முத்ரா கடன் காரணமாக நம் நாட்டில் வேலைவாய்ப்பு 28% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. முத்ரா கடன் திட்டம் வருவதற்கு முன்னதாக 3.90 லட்சம் கோடியாக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, வந்த பிறகு 5 கோடிக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. ரூ.10 லட்சம் முத்ரா கடன் அளிக்கப்பட்டதில் ஏறக்குறைய 1.1 கோடி பேர் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். இந்தக் கடன் ஏறக்குறைய 50 லட்சம் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கியிருக்கிறது. இதில் கடன் வாங்கியவர்களில் 20.6 சதவிகிதத்தினர் மட்டுமே புதிய தொழில் நிறுவனத்தைத் தொடங்க அதைச் செலவு செய்திருக்கிறார்கள். மற்றவர்கள் ஏற்கெனவே செய்துவரும் தொழிலை விரிவுபடுத்தவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

# கடன் தொகை திரும்ப வந்தால் சரிதான்!