கொரோனா பாதிப்பு சீனாவை ஒதுக்கும் பயணிகள்!

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாகப் பெருகிவரும் நிலையில், சீனாவுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது; அதோடு, அதன் பக்கத்து நாடுகளுக்குச் செல்வதையும் விமானப் பயணிகள் விரும்பவில்லை. இதனால் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பரபரப்பு குறைந்து காணப்படுகிறது. சிங்கப்பூர் மட்டுமல்ல... மலேசியா, தாய்லாந்து நாடுகளில் இருக்கும் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறதாம். அமெரிக்கா செல்லும் விமானங்கள் துபாய், தோஹா, குவைத் ஆகிய நாடுகளின் வழியாக அமெரிக்காவுக்குச் செல்வதால், இந்த விமான நிறுவனங்களில் பயணிகளின் எண்ணிக்கை 5% முதல் 20% வரை உயர்ந்திருக்கிறதாம்.

#கொரோனா கொடூரம்!

டேர்ன் ஓவர் ரூ.6,000 கோடி... நஷ்டம் ரூ.5,000 கோடியா?

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்மீது தனது கோபத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார். ‘‘வெளிநாட்டு நேரடி நிதி மூலம் செயல்பட்டுவரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த நிறுவனங்கள் இப்போது செயல்பட்டுவரும்விதம் நல்லவிதமாக இல்லை. இந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ரூ.6,000 கோடிக்கு டேர்ன் ஓவர் செய்கின்றன. ஆனால், ரூ.5,000 கோடிக்கு நஷ்டம் காண்பிப்பது எந்த வகையில் நியாயம்..?” என்று கேட்டிருக்கிறார் பியூஷ் கோயல். அமேசான் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தது ``நம் நாட்டுக்கு செய்யும் பெரிய உதவியல்ல’’ என்று பியூஷ் கோயல் சமீபத்தில் சொன்னது நினைவிருக்கலாம்!

#உள்ளூர் வர்த்தக நிறுவனங்களுக்கே சப்போர்ட்!

முதலாண்டு பிரீமியம்: எல்.ஐ.சி-யின் சாதனை!

முதலாம் ஆண்டு பிரீமியத்தை ஈட்டுவதில் எல்.ஐ.சி நிறுவனம் 44.8% அளவுக்கு உயர்ந்து, எல்லா இன்ஷுரன்ஸ் நிறுவனங்களையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. தனியார் நிறுவனங்கள் இந்த பிரிமீயத்தை ஈட்டுவதில் 11.5% மட்டுமே ஏற்றம்கண்டிருக்கின்றன. கடந்த ஏப்ரல் - ஜனவரி வரையிலான 10 மாதங்களில் முதலாம் ஆண்டு பிரீமியம் ஈட்டுவதில் எல்.ஐ.சி 43% அளவுக்கு உயர, தனியார் நிறுவனங்கள் 20% அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கின்றன. முதன்முதலாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்கள் எல்.ஐ.சி நிறுவனத்தையே நாடி வருவதால், அந்த நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு கடந்த ஆண்டு 66 சதவிகிதத்திலிருந்து 70 சதவிதமாக உயர்ந்துள்ளது.

#தொடரட்டும் எல்.ஐ.சி-யின் வெற்றிச் சாதனை..!

$165 மில்லியன்...

ஜெஃப் பெசோஸ் வாங்கிய வார்னர் எஸ்டேட்!

அமேசான் நிறுவனத்தின் அதிபர் ஜெஃப் பேசோஸ் ஒரு சாதனையைச் செய்து எல்லோரையும் பேசவைத்துவிட்டார். லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்திலிருக்கும் ஒரு எஸ்டேட்டை 165 மில்லியன் டாலருக்கு வாங்கியிருக்கிறார். `வார்னர் எஸ்டேட்’ என்று சொல்லப்படும் இந்த எஸ்டேட்டை பிரபல மீடியா அதிபர் டேவிட் கெஃபெனிடமிருந்து வாங்கியிருக்கிறார். 3.6 ஹெக்டேர் பரப்பளவுகொண்ட இந்த எஸ்டேட்டை இவ்வளவு விலை தந்து வாங்க யாருமே முன்வராதபோது, பெசோஸ் எப்படி வாங்கினார் என்று எல்லோரும் வியக்கிறார்கள். பெசோஸின் மொத்த சொத்து மதிப்பு 131.9 பில்லியன் டாலர். அதில் 165 மில்லியன் டாலர் என்பது சுண்டைக்காய் மாதிரி!

#பணம் படைத்தவர்களுக்கு இதெல்லாம் சகஜமப்பா!

முதலாம் ஆண்டு பிரீமியத்தை ஈட்டுவதில் எல்.ஐ.சி நிறுவனம் 44.8% அளவுக்கு உயர்ந்துள்ளது!

மூர்த்தியின் மருமகன் இங்கிலாந்து நிதியமைச்சர்!

இங்கிலாந்தின் நிதியமைச்சராக ஆகியிருக்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக். இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது அமைச்சரவையில் மாற்றங்களைக் கொண்டுவந்தார். அந்த மாற்றங்களில் ரிஷி சுனக்குக்கு நிதியமைச்சர் பதவிக்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 39 வயதான சுனக், யார்க்ஷயரிலுள்ள ரிச்மாண்ட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். நாராயணமூர்த்தியின் மகளான அக்ஷதாவைத் திருமணம் செய்திருக்கும் சுனக், கடந்த 2015-ம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முதன்முறையாக இடம்பெற்றார். கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினரான சுனக், `ஜரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலக வேண்டும்’ எனச் செயல்பட்டுவரும் போரீஸ் ஜான்சனின் தீவிரமான ஆலோசகர்.

#ஆளட்டும் இந்தியர்

அதிகரிக்கும் சினிமா பிசினஸ்!

ஆன்லைன் வசதி வந்த பிறகு சினிமா தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக நாம் நினைத்தால், அது தவறு. கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருக்கும் அனைத்துத் திரையரங்கள் மூலம் ரூ.10,948 கோடி வசூலாகியிருப்பதாகச் சொல்கிறது ஆர்மெக்ஸ் மீடியாஸ் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட். 2019-லம் ஆண்டு மொத்தம் 1.03 பில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இது 2018-ம் ஆண்டைவிட 11.6% அதிகம். 2018-ம் ஆண்டு திரையரங்குகள் மூலம் கிடைத்த வருமானம் ரூ.9,810 கோடி. வசூலான மொத்த தொகையில் இந்திப் படங்கள் மூலம் 44%, ஹாலிவுட் படங்கள் மூலம் 15%, தமிழ், தெலுங்கு படங்கள் மூலம் தலா 13% வருமானம் கிடைத்திருக்கிறது.

#இந்தியாவில் என்றும் ஜொலிப்பது சினிமா பிசினஸ்தான்!