Published:Updated:

2K KIDS: தொழில் கதைகள்... தன்னம்பிக்கை விதைகள்!

 ஒலே கிர்க் கிறிஸ்டியன்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒலே கிர்க் கிறிஸ்டியன்சன்

- பாண்டீஸ்வரி.க

எல்லாருமே ஏதோ ஒரு வேலையை, தொழிலைப் பண்ணிட்டுதான் இருக்கோம். இதுல சிலர் மட்டும் வெற்றியாளர்களாக முன்னேறும் சூத்திரம் என்ன? எல்லாரும் பண்ணிட்டு இருக்குற வேலை, தொழிலை அந்தப் பாணியிலிருந்து விலகிக் கொஞ்சம் மாத்தி யோசிச்சு புதுசா பண்ணுறதுதான். அதுக்கு ரெண்டு உதாரணங்களை, குட்டிக் கதைகளா இங்கே பார்ப்போம்!

மாத்தி யோசிப்போம்!

ஒலே கிர்க் கிறிஸ்டியன்சன் என்ற கைவினைக் கலைஞர், டென்மார்க்ல தன் மனைவி, மகன்களுடன் வசித்தார். அவரோட தச்சு வேலைகள் கடை பெரும் நஷ்டத்தில் போனது. சம்பளம் கொடுக்க முடியாததால, பணியாளர்கள் யாரும் கடைக்கு வேலைக்கு வரல. கடையில் இருந்த மர பொருள்கள்ல, தன் மகன்களுக்காக மர பொம்மைகள் செய்து கொடுத்தார் ஒலே. அப்போதான் அவருக்கு, ஏன் மர பொம்மைகள் தொழிலை செய்யக் கூடாதுனு தோணுச்சு. அவர் செஞ்ச பொம்மைகளின் தரமும் தனித்துவமும், அவரை அந்தத் தொழில்ல கரை சேர்த்தது. ஒருகட்டத்தில், ஒரு வியாபார யுக்தியா, தங்களோட நிறுவனத்தின் பெயரை மாற்ற முடிவு பண்ணி, அதுக்கு ‘லெகோ’னு பெயர் வெச்சாங்க ஒலேயும் அவர் மகன்களும். அந்த டேனிஷ் வார்த்தையின் பொருள், ‘நன்றாக விளையாடு.’

2K KIDS: தொழில் கதைகள்... தன்னம்பிக்கை விதைகள்!

தொடர்ந்து, பிளாஸ்டிக் மோல்டிங் இயந்திரம் வாங்கி, விலங்கு பொம்மைகள் செய்தார் ஒலே. ஆனாலும், ஒரு திருப்புமுனை அவங்க தொழிலுக்கு அமையல. அப்போதான், ஒலேயின் மூன்றாவது மகன் கோட்ஃப்ரெட், அந்த சூப்பர் ஐடியாவைக் கொண்டுவந்தார். குழந்தைகளை, அவங்களோட கற்பனையில ஓர் அமைப்பை உருவாக்க, கட்டுமானிக்கக் கூடிய வகையில் விளையாட வைக்கும் லெகோ கட்டுமானத் துண்டுகளை (லெகோ பிரிக்ஸ்) உருவாக்கும் ஐடியாவைச் சொன்னார். உருவாக்கினார். தொழில் ஜெட் வேகம் எடுத்தது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ‘லெகோ’ பிராண்டு தொழில்ல ராஜாதான். எல்லாரும், குழந்தைகள் வெச்சு விளையாடும் பொம்மைகளை உருவாக்கிக்கிட்டிருந் தப்போ, ‘குழந்தைகள் செய்து விளையாடும் பொம்மை’னு மாத்தி யோசிச்சதுதான், லெகோவுக்கு வெற்றியின் திசையை காட்டியது. அதனால, மாத்தி யோசிப்போம்!

விலையைக் குறைத்தால் லாபம் கிடைக்குமா?!

அடுத்தது, ஒரு லோக்கல் கதை. சாதனைங்கிறது சரித்திரத்தில் இடம் பிடிக்கிறது மட்டுமல்ல. நம்மளோட சின்ன மூளையைக்கொண்டு யோசிச்சு, தொழில்ல சின்ன மாற்றத்தை ஏற்படுத்தி, நல்ல லாபம் பார்க்கிறதும் சாதனைதான். ‘சென்னை ஆழ்வார்பேட்டை தெருவுல இளநீர் விக்கிற அண்ணன், ‘சாதாரண இளநீரின் விலை 20 ரூபாய், செவ்விளநீரின் விலை 25 ரூபாய்’னு போர்டு வெச்சிருப்பார். மத்த இடங்களோட ஒப்பிடும்போது விலை ரொம்ப குறைவா இருக்கே, ஒருவேளை பழைய காய்களோனு நினைச்சுப்பேன். சரி குடிச்சுப் பார்ப்போம்னு, ஒருநாள் அந்தக் கடைக்குப் போனேன். சாப் பிட்டுப் பார்த்தா, ஃப்ரெஷ்ஷான காய்தான்.

 ஒலே கிர்க் கிறிஸ்டியன்சன்
ஒலே கிர்க் கிறிஸ்டியன்சன்

‘குறைச்சுக் கொடுக்குறீங்களே, கட்டுப்படி யாகுதா?’னு அந்த இளநீர் கடைக்காரர்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர், ‘16 ரூபாய்க்கு சாதாரண இளநீர் வாங்கி அதை 20 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கு செவ்விள நீர் வாங்கி அதை 25 ரூபாய்க்கும் விற்குறேன். இதே இடத்துலதான் பத்து வருஷத்துக்கும் மேல கடை வெச்சிருக்கேன். ‘இளநீரின் சிறப்புகள்’னு எல்லாம் வாடிக்கையாளர்கள் கிட்ட பேசினப்போ, எதுவும் எடுபடலை. விலையைக் குறைக்கும் முடிவை எடுத்தேன். இதனால லாபம் குறையும்தான். ஆனா, வியாபாரம் அதிகரிக்குது. அதாவது, 100 காய்கள் விற்கும் இடத்துல இப்போ 600 காய்கள் விக்குது. விட்ட லாபத்தை, அதிகரிச்சிருக்கிற விற்பனை யில பிடிச்சுடுறேன்’னு சொன்னார்!’ - இந்தக் கதை, ஆர்.ஜே பாலாஜி ஒரு மேடையில பகிர்ந்தது.

வியாபாரம் அதிகரிச்சா விலையைக் குறைக்கலாம், லாபத்தையும் பார்க்கலாம் என்கிற சின்ன கணக்கை, பெரிய விஷயத்தை அந்த இளநீர் கடைக்காரர் கண்டு பிடிச்சதுதான், அவரோட வெற்றிக்கு காரணம்.

ஆக, தொழிலைக் கத்துக் கிறது மட்டும் போதாது வெற்றிக்கு... அதுல புதுசா, தினுசா நாம என்ன பண்ணப் போறோம் என்பதும் முக்கியம்!