Published:Updated:

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்... தமிழகத்தில் தொழில் முதலீடு குவியுமா?

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

தொழில் முதலீடு...

மிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளைக் கொண்டு வருவதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் மேற்கொண்ட பயணம் பெரும் வெற்றி என்றே சொல்லலாம். வெளிநாடுகளில் முதலீட்டாளர்களை நேரடியாகச் சந்தித்து தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்த்துவர வேண்டும், வெளிநாடுகளில் உள்ள நகர உள்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பங்களை நேரில் கண்டறிந்து, அவற்றைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் வெளிநாடு களுக்குச் சென்றுவந்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

நம்பிக்கை தந்த பயணம்

கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி சென்னையிலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட முதல்வர், பிறகு அமெரிக்காவுக்கும் அதன் பிறகு துபாய்க்கும் சென்றுவந்துள்ளார். ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரையிலான இந்த அரசு முறை பயணத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சுகாதாரத்துறை செயலாளர் சி.விஜயபாஸ்கர், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்டவர்கள் முதல்வருடன் சென்றனர். தமிழக முதல்வர் ஒருவர் தொழில் முதலீடு நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் சென்றது தொழில் துறை வட்டாரத்தில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் பயணத்தின்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதன்மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.8,895 கோடி முதலீடு வரும் என்றும் சுமார் 35,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்... தமிழகத்தில் தொழில் முதலீடு குவியுமா?

இதுகுறித்து தமிழகத் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் பேசினோம். “தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதற்குத் தமிழக முதல்வர் எடுத்த சிறப்பான முயற்சி இது. 1992-ல் உலகமய, தாராளமய கொள்கை வந்தபிறகு ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தை வளர்க்க வேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபடு கின்றன. கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்துவருகிறார்கள். அந்த வகையில், தமிழக முதல்வரும் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீட்டாளர்களைச் சந்தித்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்களும் வெளிநாடுவாழ் தமிழர்களும் நம் முதல்வருக்குச் சிறப்பான வரவேற்பை அளித்தார்கள். ‘இத்தனை காலம் ஏன் நீங்கள் வரவில்லை’ என்று அவர்கள் கோபித்துக்கொண்டார்கள்.

லண்டன் டு துபாய்

கடந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக அமெரிக்கா, ஐரோப்பா, துபாய் ஆகிய நாடுகளுக்கு நான் சென்றுவந்தேன். அந்தப் பயணத்தின்போது ஏற்பட்ட தொடர்புகள், தற்போது எங்களுக்குப் பெரும் உதவிகரமாக இருந்தன. இப்போது அங்கு போய், தமிழகத்துக்குத் தொழில் தொடங்க வாருங்கள் என்று முதல்வர் அழைப்பதற்கு அது எளிதாக இருந்தது. தமிழகத்தி லிருந்து அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடு களுக்குப் பல ஆண்டுகளுக்குமுன்பு சென்றவர்கள், இப்போது தொழில்ரீதியாக மிகப் பெரிய இடத்தை அடைந்துள்ளார்கள். குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள். மிகப் பெரிய நிறுவனங்களில் தமிழர்கள் முக்கியப் பொறுப்பு களை வகிக்கிறார்கள். தமிழக முதல்வரே நேரில் வந்து அவர்களைச் சந்தித்ததில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்... தமிழகத்தில் தொழில் முதலீடு குவியுமா?

‘‘தமிழகத்துக்கு வந்து எவ்வளவு முதலீடு வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் இருக்கிறேன். உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருகிறேன்’’ என்று முதல்வர் உத்தரவாதம் அளித்தார். அது அவர்களிடம் மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, தமிழகத்துக்கு நிறைய முதலீடு வருவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றவர், இன்னொரு முக்கியமான தகவலையும் சொன்னார்.

‘‘தமிழகத்தில் தொழில் தொடங்கவிருக்கும் முதலீட்டாளர்களுக்கான வழிகாட்டு மையத்தில் லண்டன் முதலீட்டாளர்களுக்கென ஒரு தனிப் பிரிவும் அமெரிக்காவுக்கென ஒரு தனிப்பிரிவும் ஏற்படுத்தவிருக்கிறோம். அதற்கென தனி அதிகாரி ஒருவரையும் நியமிக்கப்போகிறோம். இதன்மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தொடர்புகொள்ள முடியும். அவர்களுக்கு இருக்கக்கூடிய அழுத்தங் கள் மற்றும் பிரச்னைகளைச் சரிசெய்வதற்குத் தயாராக இருக்கிறோம். மேலும், இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஒவ்வொரு மாதமும் முதல்வர் தலைமையில் கூட்டம் நடைபெறும். இதன்மூலம், தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி தமிழகம் நிச்சயம் முன்னேறும்” என்றார் உற்சாகமாக.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முதலீடு மட்டுமே நோக்கமல்ல...

முதல்வருடன் வெளிநாடு சென்றிருந்த சில அதிகாரிகளுடன் பேசினோம்.

“போட்டிகள் நிறைந்த உலகம் என்று ஆகிவிட்ட பிறகு, தங்கள் மாநிலத்தில் தொழில்வளத்தைப் பெருக்குவதற்குப் பல மாநில முதல்வர்களும் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அப்படி இருக்கும்போது, நாம் அமைதியாக இருக்க முடியாது. முதல்வர் வெளிநாடுகளுக்குப் போன தால், அங்கு பாசிட்டிவ்வான ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.

இது, முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் மட்டுமே கிடையாது. வெளிநாடுகளில் உள்ள நகர உள்கட்டமைப்பு மற்றும் நவீன தொழில் நுட்பங்களை நேரில் கண்டறிந்து அவற்றைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும் என்கிற நோக்கமும் இந்தப் பயணத்துக்கு உண்டு. எங்கள் பயணத்தில் சில சுற்றுலாத் தலங்களைக் கண்டு முதல்வர் மிகவும் ஆச்சர்யப்பட்டார். உதாரண மாக, துபாயில் சில இடங்களைப் பார்த்துவிட்டு, ‘வெறும் கடலும் மணலும் இருக்கும் இந்த இடத்திலேயே இவ்வளவு பிரமாதமாக சுற்றுலாத் தலத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதைவிடச் சிறப்பாகச் செய்யலாமே’ என்று சொன்னார்.

நம் முதல்வர் அடிப்படையில் ஒரு விவசாயி. ஆனாலும், பஃப்பல்லோ பண்ணையைப் பார்த்து விட்டு அசந்துவிட்டார். அப்படியொரு பிரமாண்டமான மாட்டுப்பண்ணை அது. ஒரே பண்ணையில் பல நூறு மாடுகள். ஒவ்வொரு மாடும் பிரமித்துப் போகிற அளவுக்குப் பெரிதாக இருந்தன. ஒவ்வொரு மாடும் 35 லிட்டர் பால் கறக்கிறது. அந்தப் பண்ணையில் ஒரே நேரத்தில் ஒன்றரை லட்சம் லிட்டர் பால் கிடைக்கிறது. அதே மாதிரி ஒரு மாட்டுப்பண்ணையைத் தமிழ் நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் சொன்னார். சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப்பூங்காவில் அத்தகைய தொழில்நுட்பங்களை ஏற்படுத்தத் திட்டம் உள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சியில் உள்ள மாட்டுப் பண்ணையை நவீனமாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது. வெளிநாட்டுப் பயணத்தை முடித்துத் திரும்பியவுடன், உயர் அதிகாரிகள் கள்ளக்குறிச்சிக்குச் சென்று பார்வை யிட்டுள்ளனர்’’ என்று சொன்னார் முதல்வருடன் பயணம் செய்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்... தமிழகத்தில் தொழில் முதலீடு குவியுமா?

‘‘வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. லண்டனில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடுகளைக் கண்டறிந்து, அதைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கு, சர்வதேசத் திறன் மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இங்கு கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை நிறுவுவதற்கு அந்த மருத்துவமனையுடன் ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது.

சஃபோல்க் நகரத்தில் என்ஜென் நிறுவனம், மரபுசாரா எரிசக்தியான சூரிய எரிசக்தி, காற்றாலை எரிசக்தி ஆகியவற்றை மின் கட்டமைப்புடன் இணைக்கும் வழிமுறைகளைப் பார்வையிட்டோம். டெங்கு, மலேரியா போன்ற நோய்களை உண்டாக்கும் கொசுக்களைக் கட்டுப் படுத்துதல், அந்த நோய்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள் தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட் டாளர்கள் கூட்டத்தில் சுமார் ரூ.2,300 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன்மூலம் சுமார் 6,500 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கவும் வெளிநாடு வாழ்தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்கவும் யாதும் ஊரே என்ற புதிய திட்டத்தையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சினிமா நகரம், அறிவியல் நகரம்...

சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள டெஸ்லா நிறுவனத்துக்குச் சென்று, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் அந்த நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மற்றும் பணிகளைப் பார்வை யிட்டோம். அந்த நேரத்தில், இந்தியாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையைத் தமிழத்தில் அமைக்க டெஸ்லா நிறுவனத்திடம் முதல்வர் கோரிக்கை வைத்தார்.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்... தமிழகத்தில் தொழில் முதலீடு குவியுமா?

மேலும், சான் ஃபிரான்சிஸ்கோவில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் ஏற்படுத்தியுள்ள ப்ளூம் எனர்ஜி என்ற நிறுவனத்துக்குச் சென்றோம். அங்கு, மாசில்லா எரிசக்தியை எளிய முறையில் தயாரிப்பது குறித்தும் அந்தத் தொழில்நுட்பங்களை அறிந்து அவற்றைத் தமிழ்நாட்டில் செயல் படுத்துவது குறித்தும் அந்த நிறுவனத்தின் நிர்வாகி களுடன் ஆலோசனைகள் நடத்தினோம்.

அனேஹிம் என்ற இடத்தில் உள்ள சினிமா நகரம், அறிவியல் நகரம் ஆகியவற்றைப் பார்த்து விட்டு, தமிழ்நாட்டிலும் இதுபோல ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் கூறினார். ஒவ்வோர் இடத்துக்குச் செல்லும்போதும், அந்த இடங் களைப் பார்த்து வியந்த முதல்வர், பல ஆண்டுகளுக்குமுன்பே இதையெல்லாம் செய்திருக்க லாம் என்று ஆசையுடன் சொன்னார். இந்தப் பயண மானது, தொழில் வளர்ச்சி குறித்து புதிய சிந்தனை களையும், பரந்துபட்ட பார்வையையும் முதல்வருக்கும் அமைச்சர் களுக்கும் அதிகாரிகளுக்கும் அளித்துள்ளது.

மூன்று மாதங்களில்...

முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணத்தால், ஐ.டி நிறுவனங்கள், லாஜிஸ்டிக் நிறுவனங்கள், மூன்று சக்கர மின்சார வாகன உற்பத்தி நிறுவனம், மின்னணு நிறுவனம், ஃபுட் பிராசஸிங் நிறுவனம், மேன்பவர் ரெக்ரூட்மென்ட் நிறுவனம் எனப் பல்வேறு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்கவுள்ளன. ‘நல்ல தொடக்கமாக எல்லாவற்றையும் நாம் ஆரம்பித்துவைப்போம்’ என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பாக, மூன்று மாதங்களுக்குள் முறைப்படியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். அதன்பிறகு, முதலீட்டாளர்கள் தங்கள் பணிகளை ஆரம்பித்துவிடுவார்கள்” என்றார் முதல்வருடன் அமெரிக்கா மற்றும் துபாய் பயணத்தில் இடம்பெற்றிருந்த இன்னொரு ஐ.ஏ.ஸ் அதிகாரி.

நம் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது, கம்பெனிகள் மூடப்பட்டு, வேலை இழப்புகள் ஏற்படுகின்றன என்றெல்லாம் கவலைக்குரிய செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளுக்கு முதல்வர் சென்றுவருவதன்மூலம் அங்குள்ள லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தைத் தமிழகத்துக்குக் கொண்டுவருவதுடன், புதிய தொழில் முதலீட்டையும் தாராளமாகக் கொண்டு வரலாம்.