Published:Updated:

‘நான் உங்களிடம் ஒன்று சொல்லட்டுமா...’ - பூட்டான் மாணவர்களிடையே மோடி உரை

ராம் பிரசாத்

'ஆராய்ச்சியாளர்களாகவும் பொறியாளர்களாகவும் நீங்கள் இந்தியாவுக்கு விரைவில் வருவீர்கள், நம்புகிறேன்' என பூட்டான் மாணவர்களிடையே மோடி உரையாற்றினார்.

modi
modi

பிரதமர் நரேந்திர மோடி, 2நாள் அரசுமுறைப் பயணமாக பூடான் சென்றுள்ளார். அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றிய மோடி, “ உங்களிடையே உரையாற்றுவது மிக்க மகிழ்ச்சி. இன்று ஞாயிற்றுகிழமை. இந்த நாளிலும் நீ்ங்கள் எனது உரையை கேட்கவேண்டியுள்ளது. பூட்டானை பார்க்க வருபவர்கள், ரம்மியமான சூழல், இயற்கை அழகு மற்றும் இந்த மக்களின் எளிமையைக் கண்டு வியப்படைவார்கள். நான் இப்போது பூட்டானின் எதிர்காலத்துடன் இருக்கிறேன். பூட்டான்-இந்திய மக்களுக்கு இடையே இயற்கையாகவே நல்ல உறவு உள்ளது. பூலோகத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல் பண்பாடு, கலாசாரம், பாரம்பர்யம் இவற்றிற்கும் இடையே ஒற்றுமை காணப்படுகிறது.

modi in bhutan
modi in bhutan

இந்தியாவின் உள்கட்டமைப்பு, கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியா முன்பைவிட வேகமாக வறுமையை ஒழித்துவருகிறது. பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. மிகப்பெரிய சுகாதார அமைப்பு கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. 500 மில்லியன் இந்தியர்களுக்கு, சுகாதார உத்தரவாதத்தை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு, எனது நண்பரும் பூட்டன் பிரதமருமான Lotay Tshering எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகம்குறித்து இணையத்தில் பதிவிட்டது எனது மனத்தைத் தொட்டது. அந்தப் பதிவில், மாணவர்கள் தேர்வை மன அழுத்தமின்றி எவ்வாறு எதிர்க்கொள்ள வேண்டும் என்பது குறித்து அந்த புத்தகம் பேசுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மன அழுத்தமின்றி தேர்வுகளை எவ்வாறு எதிர்க்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரித் தேர்வுகளை மாணவர்கள் அழுத்தத்துடன் எதிர்கொள்கின்றனர். நான் உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா... புத்தரால் ஈர்க்கப்பட்டுதான் நான் அந்த புத்தகத்தை எழுதினேன். பயத்தில் இருந்து மீண்டுவருவது, தனிமையில் இருந்து மீண்டுவருவது, இயற்கையுடன் இணைந்து இருப்பதுகுறித்து என பலவற்றை கூறலாம். நீங்கள், இந்த அருமையான தேசத்தில் பிறந்துள்ளீர்கள். நீங்கள், இயற்கையுடனே இணைந்து வாழும் அற்புதத்தைக் கொண்டுள்ளீர்கள். நான், எனது சிறுவயதில் இதைத் தேடி அலைந்தேன். இது, என்னை இமயமலைக்கு கொண்டுசென்றது. நான் தைரியமாக இருந்தேன். என்னுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பினேன்.

modi in bhutan
modi in bhutan

இந்தியா-பூட்டான் இடையேயான மிகப்பெரிய சக்தியே மக்கள் தான். இந்தியா, நிலவுக்கு சந்திரயான் 2 செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. இது, நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. 2022-ல் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டம் இந்தியாவிடம் உள்ளது.பூட்டானின் சிறிய ரக செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக பூட்டான் விஞ்ஞானிகள் இந்தியா வந்தது மகிழ்ச்சி. ஆராய்ச்சியாளர்களாகவும் பொறியாளர்களாகவும் நீங்கள் இந்தியாவுக்கு விரைவில் வருவீர்கள் என நம்புகிறேன்” என்றார்.