பொருளாதாரம்

ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவாக, கடந்த காலாண்டின் (ஏப்ரல் - ஜூன் 2019) பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாகக் குறைந்த தாகத் தகவல் வெளியாவதற்குச் சில மணித்துளிகள் முன்னதாக, இந்தியாவின் 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து நான்கு வங்கிகளாக மாற்றும் மெகா மெர்ஜர் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். நிதி அமைச்சரின் தற்போதைய இந்த அறிவிப்பால், பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12-ஆகக் குறையும்.

வருகிற 2024-க்குள் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியா உயரவேண்டும் என்றால், அதிகமாகக் கடன் உதவி வழங்கப்பட வேண்டியிருக்கும். அதற்குத் துணிச்சலுடன் முடிவெடுக்கக்கூடிய வலுவான வங்கிகள் தேவைப்படுவதால் வங்கிகள் ஒன்றிணைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தனியார் வங்கியின் (கோட்டக் மஹிந்திரா வங்கி) தலைவரான, உதய் கோட்டக், வங்கிகளின் இணைப்பு முடிவை வரவேற்றுள்ள அதே வேளையில், வங்கி ஊழியர் சங்கத்தினர் அரசின் முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அரசின் எதிர்பார்ப்பை மெய்யாக்கும் வகையில், வங்கிகளின் இணைப்பு பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திடுமா என்று பார்ப்போம்.

வங்கி இணைப்பின் சாதகங்கள்

ஏற்கெனவே சொன்னபடி, பெரிய வங்கிகள் அதிகப்படியான கடன் கொடுக்கக்கூடிய திறன் கொண்டவையாகவும், பெருவாரியான கிளைகள் கொண்டிருப்பதன்மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் அதிகப்படியான வீச்சுடையவையாகவும் இருக்கும். பெரிய வங்கியாக இருப்பது கடன் வழங்கத் தேவையான நிதியைத் திரட்டுவதில் உறுதுணையாக இருப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களை எளிதில் நடைமுறைப் படுத்தவும் உதவிகரமாக இருக்கும். மேலும், வங்கிகளின் ஒன்றிணைப்பு காலப்போக்கில் நடைமுறைச் செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன் செலவினங்களையும் மட்டுப்படுத்தும். ஒரே மென்பொருளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் வங்கிகளை இணைப்பது தொழில்நுட்பரீதியாக விரைவான வளர்ச்சிக்கு வித்திடும். மிக முக்கியமாக, வங்கி இணைப்பு நடக்காமல் போனால், அதிக வாராக்கடன் சுமைகொண்ட சிறிய வங்கிகள் தப்பிப் பிழைப்பதே கடினமாகிவிடும். அரசின் ஆசிர்வாதத்துடன் இந்த இணைப்பு நடப்பதால், அரசுத் தரப்பிலிருந்து மூலதன நிதி உதவியும் தாராளமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பெரிய கடன்களை வழங்கி, பணக்காரர்களை உருவாக்கும் வலுவான வங்கிகளைவிட அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதை உறுதி செய்யும் வங்கிகளே பொருளாதார மறுமலர்ச்சிக்கான அவசியத் தேவை!

பங்குச் சந்தை தரும் பாடங்கள்

மேற்சொன்னபடி, பொதுத்துறை வங்கிகளின் ஒன்றிணைப்பு நீண்டகால ரீதியாக சில நன்மைகளை அளிக்கக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டதாக இருந்தாலும், குறுகியகால நோக்கில் கடும் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே, வாராக்கடன், மூலதனப் பற்றாக்குறை, பொருளாதார மந்தநிலை எனப் பல சிரமங்களைப் பொதுத்துறை வங்கிகள் சந்தித்து வரும் தற்போதைய சூழ்நிலையில், இந்த இணைப்பும் சேர்ந்தால் கடினமானதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நடைமுறையில், வெவ்வேறு வங்கிப் பணிகளில் உள்ள கலாசார ரீதியான வேறுபாடுகள் இணைப்பைக் கடினமாக்குகிறது என்பதுடன் இணைப்பின்போதும் இணைப்பிற்குப்பின்னரும் வங்கிகளுக்குள்ளே நடைபெறும் அமைப்புரீதியான மாற்றங்கள் வாடிக்கையாளர்களின் சேவையையும் பெருமளவு பாதிக்கின்றன.

இந்த விவகாரத்தில், மத்திய அரசின் முடிவுக்கு கார்ப்பரேட் தரப்பிலிருந்து பெருவாரியான ஆதரவு கிடைத்திருந்தாலும், பங்குச் சந்தையின் பார்வை என்னவோ வேறு மாதிரியாகத்தான் உள்ளது. உதாரணமாக, மென்பொருள் மற்றும் உள்கட்டமைப்பு ரீதியாகவும், அதிமுக்கியமாக பணியிடக் கலாசார ரீதியாகவும் பல ஒற்றுமைகள் நிறைந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் இணைப்புதான் வரலாற்றின் மிக வெற்றிகரமான வங்கி இணைப்பு முயற்சியாகப் பலராலும் உதாரணப்படுத்தப்படுகிறது.

ஆனால், அதிகாரபூர்வமான இணைப்பு தினமான 01.04.2017 முதல் தற்போது வரை பங்கு சந்தையில், ஸ்டேட் வங்கி பங்கின் வருவாய் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. மற்றொரு வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவின் பங்குகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இதே காலகட்டத்தில், தனியார் வங்கிகளான ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் கோட்டக் வங்கி ஆகியவை பங்குச் சந்தையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வழங்கியுள்ளன.

தற்போதைய இணைப்பு அறிவிப்புக்குப் பிந்தைய பங்குச் சந்தையின் உடனடிச் செயல்பாடுகள்கூட பொதுத்துறை வங்கிகளுக்குச் சாதகமாக அமையவில்லை. உதாரணமாக, இணைப்பு அறிவிக்கப்பட்டுள்ள 10 வங்கிகளில், ஒப்பீட்டுரீதியாக மேம்பட்ட செயல்பாடுகள் கொண்டதாகக் கருதப்படும் இந்தியன் வங்கியின் பங்குதான் அதிகப்படியான வீழ்ச்சியையும் சந்தித்தது. வலுவற்ற இரண்டு மூன்று வங்கிகள் இணைவதால் மட்டுமே வலுவான வங்கி உருவாகி விடுமா என்கிற கேள்வியை பங்குச் சந்தைகள் எழுப்ப விரும்பும் முக்கியக் கேள்வி.

வங்கி இணைப்பின்போது, பொதுத் துறை வங்கிகள் உள்கட்டமைப்பைச் சீரமைக்க அதிக கவனத்தையும் ஆற்றலையும் செலவிடுவதனால் உருவாகும் வெற்றிடத்தைத் தனியார் வங்கிகள் தமக்கும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, அமைப்புரீதியான மாற்றங்களின்போது சிக்கல்களை சந்திக்கும் சிறந்த வாடிக்கையாளர் களைத் தனியார் வங்கிகள் எளிதாக கையகப் படுத்திவிடுகின்றன. தற்போது, உதய் கோட்டக் அவர்கள் பொதுத் துறை வங்கிகளின் இணைப்பை வெளிப்படையாக ஆதரித்திருப்பதை சுட்டிக் காட்டும் வங்கி ஊழியர்கள், ஒன்றிணைப்பின் பலன் உண்மையில் யாருக்குக் கிடைக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

வலிமையான வங்கிகளின் தேவை

இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு அடிப்படைக் கட்டுமானங்களின் வளர்ச்சி மிக அவசியம். அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்க நீண்டகால நோக்கில் ஏராளமான நிதி தேவைப்படுகிறது. இன்றைய நிதிப் பற்றாக்குறை சூழ்நிலையில், அடிப்படைக் கட்டுமானத் துறையில் அரசினாலோ, அரசு சார்ந்த நிறுவனங் களாலோ அதிகப்படியான முதலீடுகளைச் செய்ய முடியாது. சிறிய லாபத்திற்குக்கூட நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய கட்டாயமுள்ள அடிப்படைக் கட்டுமானத்துறையில் முதலீடு செய்ய தனியார் துறையினர் முன்வருவார்களா என்பதே சந்தேகமாக உள்ள தற்போதைய சூழலில், ஒருவேளை அவர்கள் முன்வந்தாலும், தேவையான கடன் உதவியை யார் செய்வார்கள் என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறிதான்.

இந்தியாவிலுள்ள மிகப் பெரிய தனியார் வங்கிகள் அதிக ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை என்பதுடன், வாராக்கடன் பிரச்னையில் தத்தளித்துவரும் பொதுத்துறை வங்கிகள் ரீடெயில் துறையில் உருவாக்கும் வெற்றிடத்தைப் பயன்படுத்தி குறுகியகால நோக்கில் அதிக லாபம் பெறவே முயற்சி செய்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில்தான், நாட்டின் நீண்டகால நலன் கருதி வலுவான பொதுத்துறை வங்கிகளை உருவாக்கத் தேவையான மிக முக்கியமான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. தொடர்ச்சியாக, மூலதன அறிவிப்பை வெளியிட்டதும் மிகவும் வரவேற்கத்தக்கது.

ஆனால், அரசின் பொறுப்பு இத்துடன் முடிந்துவிடவில்லை. மொத்த வாராக்கடனில் 25% கொண்டுள்ள பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மிகப் பெரிய வாராக்கடனை முழுமையாக வசூல் செய்ய மத்திய அரசு முன்வருவது, இணைப்பு நோக்கத்தின் மீதான சந்தேகங்களைப் போக்க பெருமளவு உதவுவதுடன் புதிய தொழில் கடன்களை வங்கிகள் தயக்கமின்றி வழங்கவும் வழிவகை செய்யும்.

அதேசமயம், அடிப்படைக் கட்டுமான பணி களுக்கான ஒப்பந்தங்களில் ஊழலை அகற்றவும் வெளிப்படையான விரைவான முடிவுகளை எடுக்கவும் அரசு முன்வர வேண்டும். நிதி அமைச்சர் உறுதியளித்தபடி, கட்டுமான நிறுவனங்களுக்கு அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை கால தாமதமின்றி வழங்க வேண்டும். நீண்டகாலக் கடன்களுக்கு வணிக வங்கிகளை சார்ந்திராமல், உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கடன் சந்தையிலிருந்து நிதி திரட்ட ஆவண செய்ய வேண்டும்.

பொருளாதார மறுமலர்ச்சிக்கு...

சமீபத்தில், பெரும் தொழில் நிறுவனங்கள் சர்வதேச சந்தை யில் குறைந்த வட்டியில் எளிய முறையில் கடன் பெறும் வகையில் ரிசர்வ் வங்கியால் ஏராளமான சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. ஆனால், இந்த சலுகைகளை வட்டிச் செலவின குறைப்பிற்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்ட பெரு நிறுவனங்கள், பெருவாரியான புதிய முதலீடுகளைச் செய்ய முன்வரவில்லை. இதற்கு முக்கியக் காரணம், இந்தியச் சந்தையில் சாமான்யர்களின் தேவைகள் குறைந்துபோனது தான். பெரிய கடன்கள் மட்டுமே உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியாது என்பது காலம் தரும் பாடம்.

இந்தியப் பொருளாதாரத்தின் பெரும்பகுதி அமைப்புசாரா தொழில் துறையையே சார்ந்துள்ளது. அமைப்புசாராத் துறையில் பணியாற்றும் மிகப் பெரும் எண்ணிக்கையிலான சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் பட்சத்தில், அவர்களின் தேவைகள் அதிகரிக்கும். அப்போது அமைப்புசார்ந்த தொழில் துறையில் தாமாகவே உற்பத்தி அதிகரிப்பதுடன் பொருளாதார மறுமலர்ச்சியும் எளிதில் கைகூடும். எனவே, அமைப்புசாரா துறையினருக்கு உரிய வங்கி சேவைகள் எளிதில் சென்றுசேர அரசு ஆவண செய்ய வேண்டும். இதற்கு உள்ளூர் தேவைகளை சரிவர உணர்ந்து செயல்படக்கூடிய வங்கிகள் மிக மிக அவசியம். கடந்த வாரம், மத்திய நிதி அமைச்சர் அறிவித்தபடி, வங்கிசாரா நிறுவனங்களும் பொதுத் துறை நிறுவனங்களும் இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது நன்மை பயக்கும்.

ஆக மொத்தத்தில், பெரிய கடன்களை வழங்கி, ஒருசில மாபெரும் பணக்காரர்களை உருவாக்கும் வலுவான வங்கிகளைவிட அடித்தட்டு மக்களின் அன்றாடத் தேவைகளை உணர்ந்து, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதை உறுதிசெய்யும் பொறுப்புள்ள வங்கிகள்தான் பொருளாதார மறுமலர்ச்சிக் கான அவசியத் தேவை மட்டுமல்ல, அவசரத் தேவையும்கூட. வங்கிகள் இணைப்பின்மூலம் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிய இன்னும் சில காலம் பொறுமை யாக இருப்போம்!

(இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்களே)