Published:Updated:

FASTAG: வாட்ஸ் அப்பில் வைரலாகும் `காரைத் துடைக்கட்டுமா' வீடியோ; பணம் திருடப்படுகிறதா; உண்மை என்ன?

உங்கள் வாட்ஸ் அப்களில் அவை ஏற்கெனவே வந்திருக்கும். அல்லது வந்த வீடியோவை நீங்கள் காணாமல் கடந்திருப்பீர்கள்.

FASTAG: வாட்ஸ் அப்பில் வைரலாகும் `காரைத் துடைக்கட்டுமா' வீடியோ; பணம் திருடப்படுகிறதா; உண்மை என்ன?

உங்கள் வாட்ஸ் அப்களில் அவை ஏற்கெனவே வந்திருக்கும். அல்லது வந்த வீடியோவை நீங்கள் காணாமல் கடந்திருப்பீர்கள்.

Published:Updated:
கடந்த சில நாள்களாக FASTAG குறித்த வீடியோ ஒன்று வாட்ஸ் அப்களிலும், சமூக வலைதளங்களிலும் வலம் வருகின்றன. உங்கள் வாட்ஸ் அப்களில் அவை ஏற்கெனவே வந்திருக்கும். அல்லது வந்த வீடியோவை நீங்கள் காணாமல் கடந்திருப்பீர்கள். கவலை வேண்டாம் வேறொரு நபர் நிச்சயம் அந்த வீடியோவை அதே மாதிரியான பயமுறுத்தும் வார்த்தைகளுடன் உங்களுக்கு நிச்சயம் அனுப்புவார்.

"கண்ணாடியைத் துடைக்கட்டுமா" என்று ஒரு சிறுவன் டோல் கேட்டில் நிற்கும் ஒரு காரில் இருப்பவர்களிடம் வந்து கேட்கிறான். அவர்களும் சரி என சொல்லிவிடுகிறார்கள். காரைத் துடைத்துவிட்டு அந்தச் சிறுவன் சென்றுவிட, அந்தக் காரும் அங்கிருந்து புறப்பட்டு விடுகிறது. கிளம்பிய சில நிமிடங்களுக்குப் பிறகு தான், அவர்களின் FASTAGல் இருந்து பணம் பறிக்கப்பட்டிருப்பதை அவர்கள் உணர்க்கிறார்கள். உடனே , மீண்டும் அடுத்த முறை அதே டோல்கேட்டுக்குச் செல்கிறார்கள். அங்கே அதைப் போலவே ஒரு சிறுவன் வந்து "கண்ணாடியைத் துடைக்கட்டுமா" என கேட்கிறான். இப்போது காரில் இருப்பவர்கள் உற்று கவனிக்கிறார்கள். அந்தச் சிறுவன் கையில் ஏதோவொரு டிஜிட்டல் சாதனம் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு அந்தச் சிறுவன் காரில் இருக்கும் FASTAG கோடின் மீது தேய்க்கிறார். இப்படியாக பணப்பறிப்பு மோசடி நடைபெறுவதாக அந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வீடியோவில் இருக்கும் விஷயங்கள் போலியானவை என paytm செய்தி வெளியிட்டு இருக்கிறது. "ஸ்மார்ட் வாட்ச்சை வைத்துக்கொண்டு FASTAG-ஐ ஸ்கேன் செய்வதாக அந்த வீடியோவில் காட்டப்படுகிறது. அது முற்றிலும் தவறானது. NETCபடி, FASTAG பேமெண்டுகளை அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே செயல்பட வைக்க முடியும். அதற்கான பரிவர்த்தனைகளை நாங்கள் பலமுறை சோதித்து இருக்கிறோம். PAYTM FASTAG என்பது மிகவும் பாதுகாப்பான ஒன்று" என விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

Paytm
Paytm

உண்மையில் நாம் அவ்வளவு எல்லாம் யோசிக்கத் தேவையில்லை. ஒரு பேச்சுக்கு காரில் இருக்கும் FASTAG குறியீட்டினை வைத்து யார் வேண்டுமானாலும் பணம் எடுக்க முடியும் என வைத்துக்கொள்வோம். அதற்கு ஏன் டோல்கேட்டில் வெயிலில் நின்று கார் வரும் வரை காத்திருந்து, அந்தக் காரில் இருக்கும் அழுக்கைத் துடைக்கும் சாக்கில் திருட வேண்டும். தியேட்டர் பார்க்கிங், அப்பார்ட்டுமெண்டுகளில் நூற்றுக்கணக்கில் நிற்கும் கார்களில் எளிதாகப் பணத்தை அபேஸ் செய்துவிடலாமே. அதனால் , இனியாவது வரும் வீடியோக்களைப் பார்த்து ஜெர்க் ஆகி, பதறாமல் சற்று நிதானமாக யோசித்து முடிவெடுங்கள். டிஜிட்டல் பேமெண்ட்களின் மூலம் பணப் பரிவர்த்தனைகள் மிகவும் எளிதாக மாறியிருப்பதை நாம் ஒவ்வொரு நாளும் கண் கூடாகப் பார்த்து வருகிறோம்.