தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

“மொபைல் கேம் பிடிக்காது... சிற்பம் செதுக்கப் பிடிக்கும்!” - ஊரடங்கில் உளி எடுத்து அசத்தும் சிறுமி

அஞ்சனாஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சனாஸ்ரீ

ரொம்ப நாளா எனக்கு இந்த மர வேலை களைக் கத்துக்கணும்னு ஆசை இருந்துச்சு. அதுக்கு இது நல்ல சந்தர்ப்பமா இருந்ததால, அப்பாகிட்ட கேட்டேன்

‘‘மொதல்ல மரச் சட்டத்துல ஓவியம் வரையணும். வரைஞ்ச உடனே தோண்டணும், தோண்டுனதுக்கு அப்புறம் மட்டம் எடுக்கணும். அப்புறம் செதுக்கிட்டு கீத்துப் போடணும். கடைசியா எமரி ஷீட் வச்சு நல்லா தேய்ச்சு பளபளப்பா கொண்டு வரணும். அதுதான் ரொம்ப முக்கியம்...’’ - சொல்லிக்கொண்டே செய்துகாட்டுகிறார் அஞ்சனாஸ்ரீ. எட்டாம் வகுப்புப் படிக்கும் இவர் கொரோனா லாக்டௌனில், தன் அப்பா செய்யும் மரவேலைகளைக் கற்றுக் கொண்டு, தொழில்முறையாகத் தன் அப்பாவுக்கு உதவி அசத்தி வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சிறிய அளவிலான மர, பூ, சிற்ப வேலைகள் செய்யும் தன் அப்பாவின் பட்டறையில், மரச்சட்டங்களுக்கு நடுவே பரபரப்பாக இருந்த 13 வயது அஞ்சனாஸ்ரீயைச் சந்தித்தோம்.

“புதுக்கோட்டை திருக்கோகர்ணம் எங்க சொந்த ஊரு. திருவப்பூர் போற வழியில இங்க, மர, பூ, வேலை, சிற்ப வேலை செய்ற கார்விங் கடை வச்சிருக்காரு அப்பா. லீவ் நாள்ல எல்லாம் அப்பாவோட பட்டறைக்குப் போறது எனக்கு ரொம்ப பிடிக்கும். அங்க அப்பா கேட்குற டூல்ஸை எல்லாம் எடுத்துக்கொடுத்து, அவரு பாக்குற வேலைகளை கவனிச்சிக்கிட்டு இருப்பேன். கொரோனா லாக்டௌன்ல ஆன்லைன் கிளாஸ் போக மத்த நேரங்கள்ல எனக்கு ரொம்ப போர் அடிச்சது. எனக்கு டிவி, மொபைல் பார்க்க, மொபைல்ல கேம் விளையாடவெல்லாம் பிடிக்காது. அப்பாவுக்கும் ஊரடங்கால கடைக்கு புது ஆர்டர்கள் வரலை என்பதால, ஏற்கெனவே வாங்கி வெச்சிருந்த வேலைகளை வீட்டுல வெச்சே செஞ்சிக்கிட்டு இருந்தாரு.

 “மொபைல் கேம் பிடிக்காது... சிற்பம் செதுக்கப் பிடிக்கும்!” - ஊரடங்கில் உளி எடுத்து அசத்தும் சிறுமி

ரொம்ப நாளா எனக்கு இந்த மர வேலை களைக் கத்துக்கணும்னு ஆசை இருந்துச்சு. அதுக்கு இது நல்ல சந்தர்ப்பமா இருந்ததால, அப்பாகிட்ட கேட்டேன். ‘சின்ன புள்ளைக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது’னு மறுத்துட் டாரு. அம்மா எனக்காக அப்பாகிட்ட பேச, ஒரு வழியா அப்பா எனக்கு கிளாஸ் எடுக்க ஒதுக்கிட்டாரு’’ என்று உற்சாகமாகச் சொல்லும் அஞ்சனாஸ்ரீ, தன் அப்பா தனக்கு முதலில் பரீட்சையை வைத்துவிட்டு பின்னரே பயிற்சியை அளித்த சுவாரஸ்ய கதையை பகிர்ந்தார்.

‘‘டூல்ஸை பொறுத்தவரைக்கும் செதுக்குற உளி எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். மரத்தின் தன்மையைப் பொறுத்துச் சரியான உளியை, சரியான திசையில பிடிச்சு செதுக்குறது ரொம்ப முக்கியம். கொஞ்ச நாள்லேயே மர வேலைகளை ஓரளவுக்கு நல்லாவே கத்துக்கிட்டேன். ஆரம்பத்துல ‘செஞ்சு பாரு...’னு பயிற்சியா கொடுக்காம, அப்பா பார்த்துக்கிட்டு இருந்த வேலையவே என்கிட்ட கொடுத்து செய்யச் சொன்னாரு. ரெண்டு, மூணு வேலையைச் சரியா செய்யாம சொதப்பிட்டேன். ஒரு வார்த்தைகூட திட்டலை. மறுபடியும் அவர் பார்க்குற வேலையவே கொடுத்தாரு. அதுக்கு அப்புறம் தோண்டுறதுல ஆரம்பிச்சு கீத்துப் போடுற வரைக்கும் எல்லா வேலைகளையும் நேர்த்தியா செஞ்சு காட்டிட்டேன். அதை லேசா கைபார்த்துட்டு கஸ்டமர்கிட்ட கொடுத்திட்டாரு. அதுக்கு அப்புறம்தான், வீணான மரச்சட்டங்களை எல்லாம் வெச்சு டிசைன் போட்டுக் கத்துக்கிட்டேன்’’ எனும் அஞ்சனாஸ்ரீ, இப்போது மர, பூ டிசைன், ஜன்னல், கதவு டிசைன், கட்டில் வேலைப்பாடுகள் என்று பல வேலைகளைச் செய்கிறார்.

‘‘தினமும் காலையில யோகா கிளாஸ், அப்புறம் சிலம்பம் கிளாஸ் போவேன். ஆன்லைன் கிளாஸை முடிச்சிட்டு மதியத்துக்கு மேல அப்பாவாவோட கடைக்குப் போவேன். இரவு கடை யைப் பூட்டிட்டு அப்பா வீட்டுக்கு வரும்வரை நானும் அங்கேயே இருப்பேன். அப்பா ஒரு மாடல் தேர் செஞ்சிருந்தாரு. அது மாதிரி நானும் ஒரு சின்ன தேரை செஞ்சு வச்சேன். அதைப் பார்த்துட்டு எல்லாரும் பாராட்டுனாங்க. ரொம்ப சந்தோ ஷமா இருந்துச்சு’’ என்று பெருமை பூரிக்க அஞ்சனாஸ்ரீ சொல்ல, அவர் ஆசான், அப்பா முத்துக்குமாரிடம் பேசினோம்.

‘‘இது எனக்குப் பரம்பரைத் தொழில் இல்ல. ஆர்வத்தால மர வேலைகள் செய்ய ஆரம்பிச்சு, கிட்டத்தட்ட 25 வருஷமா இந்தத் தொழில்ல இருக்கேன். எனக்கு மூணு பொம்பளப் பிள்ளைங்க. மூத்த பிள்ளைதான் அஞ்சனாஸ்ரீ. தேஜாஸ்ரீ, ஜெய்சாய்ஸ்ரீனு அவளுக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. படிப்பு, யோகா, சிலம்பம், கராத் தேன்னு எல்லாத்துலயும் கெட்டி அஞ்சனா. பயிற்சினு சொல்லி வீணாகிப்போன மரச் சட்டங்களைக் கொடுத்திருந்தா, பாப்பா இந்தளவுக்கு சீக்கிரமா வேலையைக் கத்திருக்காது. அதுக்கு அந்தப் பொறுப்பும் தன்னம் பிக்கையும் வரணும்னுதான், வாடிக்கையாளர்களோட வேலை யவே கொடுத்தேன். குருவுக்குத் தெரியாத சிஷ்யனோட வேலை..? நான் நினைச்ச மாதிரியே பாப்பா சீக்கிரம் கத்துக்கிச்சு.

 “மொபைல் கேம் பிடிக்காது... சிற்பம் செதுக்கப் பிடிக்கும்!” - ஊரடங்கில் உளி எடுத்து அசத்தும் சிறுமி

ஒரு நாள், கதவுல ஒரு மயில் ஒர்க் வந்துச்சு. அந்த வேலையை பாப்பாவே செய்றேன்னு சொல்லி செஞ்சது. முடிக்கிற நேரத்துல மயிலோட மூக்கை உடைச்சிடுச்சு. உடனே ஒரு சட்டத்தை எடுத்து அதுல ஒட்டுப் போட்டுடுச்சு. அதுல கண்ணு வைக்கிற வேலை மட்டும் இருந்துச்சு. கண்ணு வச்சிட்டு கூர்ந்து பார்த்தப்பதான், மயிலோட மூக்கு உடைஞ்சு அதைச் சரிசெஞ்சிருக்கிறது எனக்குத் தெரிஞ்சது. பொய் சொல்லி மறைச்சதுக்காக பிள்ளையைக் கடுமையா கண்டிச்சுட்டேன். இருந் தாலும் இன்னொரு பக்கம், இத்தனை நுணுக்கமா வேலை செய்ற புள்ள எப்படியும் பிழைச்சுக்கும்னு பெரு மையாவும் இருந்தது’’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

அஞ்சனாஸ்ரீயின் அம்மா கவிதா, ‘‘பாப்பா இப்போ அவங்க அப்பாவுக்கே, அதை மாத்தலாம், இதை வைக்கலாம்னு ஆலோசனை சொல்லுது. ஆனா, அஞ்சனா கடையில உட்காந்து வேலை செய்யுறதைப் பார்த்துட்டு சொந்தக் காரங்க சிலர், ‘என்ன பொம்பளப் பிள்ளையை இந்த வேலை எல்லாம் பார்க்க விடுறீங்க..?’னு கேட்டாங்க. சிலர், குழந்தைத் தொழிலாளினு எல்லாம் பேசினாங்க. எதையும் நாங்க காதுல வாங்கல. நம்ம நோக்கத் துக்குப் பிள்ளைகளை வளைக்காம, அதுங்களுக்குப் பிடிச்சதை செய்ய விட்டாலே தங்களோட திசையை அவங்க கண்டுக்குவாங்க’’ என்கிறார் திடமாக.

 “மொபைல் கேம் பிடிக்காது... சிற்பம் செதுக்கப் பிடிக்கும்!” - ஊரடங்கில் உளி எடுத்து அசத்தும் சிறுமி

‘‘சிற்ப வேலைகளைப் பொறுத்த வரை ரொம்ப நுணுக்கமா செய்ய ணும். சிற்பக்கலை சார்ந்த படிப்பு படிக்கணும் படிச்சிட்டு, அதைப் பெரிய அளவுல தொழிலா செய் யணும்’’ என்று தன் திட்டங்களைத் தயாராக வைத்துள்ளார் ஆஞ்சனாஸ்ரீ.