சென்னை பாரிமுனையிலுள்ள ‘சுரானா ஜுவல்லரி’யில் 2012-ம் ஆண்டு, சிபிஐ ஒரு சோதனை நடத்தியது. அப்போது, கணக்கில் வராத சுமார் 400 கிலோ அளவிலான தங்கத்தை அங்கிருந்து பறிமுதல் செய்து, அதே சுரானா நிறுவனத்திலுள்ள லாக்கரில் சீல் வைத்திருந்தது சிபிஐ. அதில், சுமார் 103 கிலோ தங்கம் இப்போது காணாமல் போயிருப்பது ஒட்டுமொத்த சிபிஐ-யையும் களங்கத்துக்கு உள்ளாக்கியதோடு, பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

இது குறித்து சிபிஐ-யின் முன்னாள் எஸ்.பி-யான ரகோத்தமனிடம் பேசினோம்.

‘‘2012-ம் ஆண்டு நடைபெற்ற ஆய்விலிருந்து இதைத் தொடங்கலாம். சுரானா கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தங்கத்தை இறக்குமதி செய்து, அதை நகைகளாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசிடம் லைசென்ஸ் பெற்றிருந்தது. இந்த நிறுவனம், சென்னை பாரிமுனை ஏரியாவிலுள்ள ‘மினரல்ஸ் அண்ட் மெட்டல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எம்.எம்.டி.சி)’ என்ற மத்திய அரசு நிறுவனத்திடமிருந்து தங்கத்தை வாங்குவது வழக்கம். எம்.எம்.டி.சி-யின் தங்க இருப்பில் குளறுபடி இருப்பதாகச் செய்தியறிந்த சிபிஐ உயரதிகாரிகள், சந்தேகத்தின்பேரில் அந்த நிறுவனத்துடன் ரெகுலர் தொடர்பிலிருந்த சுரானா நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். 2012-ம் ஆண்டு நடைபெற்ற சிபிஐ-யின் இந்த திடீர் ரெய்டில், 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவை அனைத்தையும் அதே சுரானா நிறுவன லாக்கரிலேயே சிபிஐ தரப்பினர் சீல் வைத்தனர். தங்கம்வைக்கப்பட்ட 72 லாக்கர் சாவிகள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ.

இந்த சுரானா நிறுவனம் நான்கு வங்கிகளிடம் 1,160 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தது. அதற்கு ஈடாக, 400 கிலோ தங்கத்தை அடமானமாகக் காட்டியிருந்தது. ‘அந்த 400 கிலோ தங்கத்தை விற்று, கடனை ஈடுகட்ட அனுமதி அளிக்க வேண்டும்’ என்று வங்கித் தரப்பினர் உயர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்ற உத்தரவின்படி, தங்கத்தை விற்று வங்கிக் கடனை அடைக்கச் சிறப்பு அதிகாரி ராமசுப்ரமணியன் நியமிக்கப் பட்டார். கடந்த பிப்ரவரி மாதம், அவர் தங்கத்தை ஆய்வு செய்தபோதுதான், அதில் 103 கிலோ காணாமல் போயிருப்பது தெரியவந்திருக்கிறது. சிபிஐ-க்கு இது குறித்து அவர் பலமுறை விளக்கம் கேட்டும் பதில் வராததால், சிறப்பு அதிகாரி இது குறித்து அண்மையில் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், ‘இது, சிபிஐ-க்கு ஒரு அக்னி பரீட்சை போன்றது’ என்று குறிப்பிட்டதோடு, ‘தமிழக சிபிசிஐடி பிரிவு வழக்கு பதிவுசெய்து, எஸ்.பி அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரியைக்கொண்டு விசாரித்து, ஆறு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ எனவும் உத்தரவிட்டிருக்கிறார்.

ரெய்டு நடந்த நிறுவனத்திலேயே எட்டு ஆண்டுகள் தங்கத்தை வைத்திருந்தது மாபெரும் தவறு. ஆர்.பி.ஐ-யின் பொறுப்பிலுள்ள லாக்கர்களில் அல்லது தேசிய வங்கிகளில்தான் வைத்திருக்க வேண்டும். இப்போது, சிபிஐ தலைகுனிந்து நிற்கிறது’’ என்றார் ரகோத்தமன்.

ஓய்வுபெற்ற காவல்துறை எஸ்.பி-யான கருணாநிதியிடம் இது குறித்துக் கேட்டபோது, ‘‘என்னுடைய 37 வருடப் பணி அனுபவத்தில், சிபிஐ-யை சிபிசிஐடி-யை விட்டு விசாரிக்க நீதிமன்றம் சொல்லியிருப்பது புதிய செய்தியாக இருக்கிறது. சுரானா நிறுவனத்திலேயே அந்தத் தங்கத்தை வைக்க முடிவு செய்திருந்தால், நீதிமன்றம் ஆய்வு செய்து சரிபார்த்திருக்க வேண்டும். அந்த லாக்கர்கள் இருக்கும் அறையின் முன்பு பாதுகாப்புடன்கூடிய போலீஸை 24/7 நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும். அவ்வப்போது, சிபிஐ-யின் உயரதிகாரிகள் போய் சர்ப்ரைஸ் செக்கிங் செய்திருக்க வேண்டும். இது போன்ற எந்த நடைமுறையும் பின்பற்றப்பட்ட தாகத் தெரியவில்லை’’ என்றார்.

நடந்த விவகாரம் பற்றி சிபிஐ தரப்பில் கருத்து கேட்க முயன்றோம். யாரும் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை. சிலரிடம் மீண்டும் மீண்டும் கேட்டபோது, ‘‘எட்டு ஆண்டுகளாக அந்தத் தங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்த அதிகாரிகளின் லிஸ்ட் எடுக்கப்பட்டுவருகிறது. சிபிசிஐடி போலீஸைவிட்டு விசாரிக்கச் சொன்னதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யலாமா என்கிற கோணத்தில் சட்ட ஆலோசனையும் நடந்துவருகிறது’’ என்றனர்.

52.35 கோடி ரூபாய் மதிப்புள்ள 103 கிலோ தங்கத்தைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள முடியாத சிபிஐ-யின் கையில்தான், நாட்டின் பல ரகசியங்களும் ஆவணங்களும் பாதுகாக்கப்பட்டுவருகின்றன என்பதை நினைக்க அச்சமாக இருக்கிறது!

வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் கடத்திவரப்படும் தங்கம், விலையுயர்ந்த பொருள்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு, அந்த வழக்கு முடியும் வரை திருச்சியிலுள்ள மத்திய கலால்-சுங்க ஆணையர் அலுவலகத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படும். இதுவே நடைமுறை. கடந்த 2015, மார்ச் 20-ம் தேதி சிங்கப்பூரிலிருந்து நவாஸ்கான் என்பவர் கொண்டுவந்த ஏழு கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்து, அதைப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கச் சென்றார், அப்போதைய சுங்கத் துறை ஆணையர் கே.சி.ஜானி. அப்போது, ஏற்கெனவே அதில் வைக்கப்பட்டிருந்த, 3.50 கோடி மதிப்பிலான (அன்றைய மதிப்பு) 14.5 கிலோ தங்கம் திருடப்பட்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. இதையடுத்து, திருச்சி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். பாதுகாப்புப் பெட்டகம் உடைக்கப்படவில்லை என்பதால், அங்கே பணிபுரியும் அதிகாரிகள்மீது சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இன்று வரையிலும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் கிடப்பதாகச் சொல்கிறார்கள்.