யாஷிகா ஆனந்த்
காலை எழும் நேரம், இரவு உறங்கச் செல்லும் நேரம்
நமக்கு யுஎஸ் டைம்தான். காலை 4:30க்குப் படுத்து மதியம் 2 மணிவரைக்கும் தூங்குவேன். ஷூட்டிங்னா காலையில 6 - 7 மணிக்கு ட்ரிங் ட்ரிங் அடிச்சிடும்.
எத்தனை சிம், மொபைல் வைத்திருக்கிறீர்கள்?
ஐ லவ் ஐபோன். ஐபோன் Xs மேக்ஸ், X11 ப்ரோன்னு ரெண்டு மொபைல் வெச்சிருக்கேன்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வொர்க் அவுட் டைம்
நான் ஒரு ராக்கோழி. அதனால இரவு 8 அல்லது 9 மணிக்கு ஆரம்பிச்சு, 45 நிமிடங்கள் வொர்க் அவுட் செய்வேன்.
வாய்விட்டுச் சிரிக்க உங்கள் சாய்ஸ்
நல்லா காமெடி செய்யும் நண்பர்கள். அதனால எப்பவுமே ஹிஹிஹிதான்.
மன நிம்மதிக்கு
ஷாப்பிங் செய்தா ஸ்ட்ரெஸ் எல்லாம் போயே போச்சு.
டென்ஷனாக்கும் ஒரு விஷயம்
நல்லாப் பேசினோம்னா, `டேக் இட் ஃபார் கிரான்டட்'னு எடுத்துக்கிறவங்களை டுமீல் டுமீல்தான்.
கேட்க விரும்பும் காம்ப்ளிமென்ட்
காம்ப்ளிமென்ட் சொன்னா சந்தோஷம். ஆனா, சொல்லணும்னு எதிர்பார்க்க மாட்டேன்.
இது இல்லாமல் ஒருநாளும் இருக்க முடியாது
டக்கீலா! ஹஹா... பயந்துட்டீங்களா..? டக்கீலா என்னோட நாய்க்குட்டி.
ஃபேவரைட் ஃபுட்
ஸ்ஸ்ஸ்... டெம்ப்டிங் 'மோமோஸ்'.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமாற்றவே முடியாத கெட்ட பழக்கம்
ரொம்பவே பர்ஃபெக்ஷனிஸ்ட். எதாச்சும் சரியில்லைன்னா கோபம் வந்துடும்.
ஆரம்பிக்க ஆசைப்படும் நல்ல பழக்கம்
கோபத்தைக் குறைக்க, யோகா பண்ண ஆரம்பிக்கணும்.
ஃபீல் குட் நேரத்துக்கு
ஒயின் சாப்பிட்டுட்டே நெட்ஃபிளிக்ஸ் பார்க்கிறது.
வாட்ஸப் அபௌட்டில் இருக்கும் வாசகம்
`டூ நாட் டிஸ்டர்ப்.'
அடிக்கடி செல்லும் இடம்
பெசன்ட் நகர் பீச், அப்படியே ஒரு லாங் டிரைவ்.
தெய்வ நம்பிக்கை
கடவுள் ஒருவரே. எனக்கு எல்லாரும் சமம்.
வார்ட்ரோப் விருப்பம்
பைஜாமா, கம்ஃபர்டபுள் `க்ராப் டாப்.'
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நடிகை குஷ்பு
காலை எழும் நேரம், இரவு உறங்கச் செல்லும் நேரம்
காலை 5.30 மணி. இரவு பெரும்பாலும் 12 - 12.30 மணிக்குத்தான்.
எத்தனை சிம், மொபைல் வைத்திருக்கிறீர்கள்
அது பர்சனல்!
வொர்க் அவுட் டைம்
ரெகுலர் வொர்க் அவுட்லாம் செய்றதில்லைங்க. எப்பயாச்சும் யோகா செய்வேன்.
வாய்விட்டுச் சிரிக்க உங்கள் சாய்ஸ்
ஒன் அண்ட் ஒன்லி வடிவேலு காமெடி.
மன நிம்மதிக்கு
என் பசங்ககூட நேரம் செலவழிக்கிறது.
டென்ஷனாக்கும் ஒரு விஷயம்
வேலை செய்யாம இருக்கிறதுக்குக் காரணம் தேடுறவங்களைக் கண்டாலே ஆகாது.
கேட்க விரும்பும் காம்ப்ளிமென்ட்
என் சமையலை கணவரோ பசங்களோ நல்லாருக்குன்னு சொன்னா, ஹேப்பி!
இது இல்லாமல் ஒருநாளும் இருக்க முடியாது
என் பசங்ககூட சண்டை போடாம, ஒருநாள்கூட என்னால இருக்க முடியாது.

ஃபேவரைட் ஃபுட்
காரம், புளிப்பு இல்லாத எந்தச் சாப்பாடும் நமக்கு ஃபேவரைட்தான்.
மாற்றவே முடியாத கெட்ட பழக்கம்
அஞ்சு நிமிஷம்கூட சும்மா இருக்க முடியாம, ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதாச்சும் செஞ்சுட்டே இருப்பேன். செய்றதுக்கு எதுவுமே இல்லைன்னா, அடுக்கி வெச்சிருக்கிற டிரெஸை எடுத்துக் கலைச்சுப் போட்டு மறுபடி அடுக்குவேன்னா பார்த்துக்கோங்க.
ஆரம்பிக்க ஆசைப்படும் நல்ல பழக்கம்
ஏற்கெனவே எல்லா நல்ல பழக்கமும் இருக்குங்கிறதால, புதுசா தொடங்குறதுக்கு எதுவும் மிச்சமில்லைங்க.
ஃபீல்குட் நேரத்துக்கு
இளையராஜா இசையில, எஸ்.பி.பி பாட்டு கேட்கிறது.
வாட்ஸப் அபௌட்டில் இருக்கும் வாசகம்
எதுவுமே இருக்காது!
அடிக்கடி செல்லும் இடம்
குடும்பத்தோடு அடிக்கடி தியேட்டருக்குப் போவோம்.
தெய்வ நம்பிக்கை
நான் அக்மார்க் பெரியாரிஸ்ட். கடவுள் இல்லவே இல்லை!
வார்ட்ரோப் விருப்பம்
புடவை மட்டுமே!
அமைச்சர் செல்லூர் ராஜு
காலை எழும் நேரம், இரவு உறங்கச் செல்லும் நேரம்
காலையில 5.30க்குள்ள எழுந்திடுவேன். வெளியூர்ல இருந்தாலும், மனைவிக்கு குட்மார்னிங் சொல்லிடுவேன். இல்லாட்டி, என்னை மறந்துட்டீங்களான்னு கோவிப்பாங்க. நைட் 12 மணிக்குத் தூங்குவேன்.
எத்தனை சிம், மொபைல் வைத்திருக்கிறீர்கள்
ஏர்டெல், பிஎஸ்என்எல்னு ரெண்டு சிம் வெச்சிருக்கேன். என் பேர்லயே வாங்கியிருக்கேன்.
வொர்க் அவுட் டைம்
ட்ரெட் மில்லுல துணி காயுது. முடிஞ்சவரை யோகா, வாங்கிங் போயிடுவேன்.
வாய்விட்டுச் சிரிக்க உங்கள் சாய்ஸ்
யூடியூப்சேனல்கள்தான். அப்புடிச் சிரிப்பேன். அதுவும் நம்மளைக் கலாய்க்கிறது, தாங்க முடியாத சிரிப்பு. இப்போ, ஸ்டாலினைக் கலாய்க்கிற வீடியோ, மீம்களையெல்லாம் பார்க்கும்போது, அதுல ஒரு திருப்தி.

மனநிம்மதிக்கு
பயணத்துல புத்தகம். பையனோட டிரஸ்ட்டுக்குப் போவேன். மாமியார் வீட்டுக்குப் போவேன். ஆசிரமம், முதியோர் இல்லம் போவேன்.
டென்ஷனாக்கும் ஒரு விஷயம்
கட்சியில வேலைபார்க்காம தலைவர்களைச் சுத்திட்டுப் பதவி வாங்குறவங்களைப் பார்த்தா டென்ஷனாகும்.
கேட்க விரும்பும் காம்ப்ளிமென்ட்
என்ன பாராட்டினாலும் பிடிக்கும். ஓவரா பாராட்டினா, கலாய்க்கிறாங்கன்னு நெனச்சுக்குவேன்.
இது இல்லாமல் ஒருநாளும் இருக்க முடியாது
தலைவர் பாட்டு, தத்துவப் பாட்டு, சந்திரபாபு, இளையராஜா 80'ஸ் பாட்டுகள்னு தினமும் இதெல்லாம்தான் வேணும் எனக்கு. என்கூட எப்பவும் ஆளுக இருக்கணும்னு நெனப்பேன். ஏன்னா, தனிமை எனக்குப் பிடிக்காது.
ஃபேவரைட் ஃபுட்
அம்மா சொல்லிக்கொடுத்து மனைவி சமைக்கிற சமையல். மட்டன் பிரியாணி பிடிக்கும். ஓட்டல்கள்ல அதிகம் சாப்பிடமாட்டேன்.
மாற்றவே முடியாத கெட்ட பழக்கம்
அடுத்தவங்க மனசு கஷ்டப்படும்னு யோசிக்காம, மனசுல பட்டதைப் பட்டுனு சொல்லிடுவேன். அதை மாத்திக்கணும்.
ஆரம்பிக்க ஆசைப்படும் நல்ல பழக்கம்
தினமும் டைரி எழுதணும்னு எத்தனையோ வருஷமா நெனச்சிட்டிருக்கேன்.
ஃபீல் குட் நேரத்துக்கு
பிள்ளைகள், பேரன்கள், கட்சிக்காரங்ககிட்ட பேசினாலே எனக்குப் போதும். சினிமா, கோயில்னு குடும்பத்தோடு போவோம்.
வாட்ஸப் அபௌட்டில் இருக்கும் வாசகம்
வாட்ஸப்ல யாருக்கும் பதில் சொல்லிட்டிருந்தா மனைவி கோபப்படுறாங்க. என்னையப் பத்திச் சொல்லணும்னா, அரசியல்ல இன்னொசன்ட்.
அடிக்கடி செல்லும் இடம்
மதுரை எக்கோ பார்க். சென்னை மெரீனா பீச்.
தெய்வ நம்பிக்கை
காலேஜ் முடிக்கிறவரை தாய்தான் தெய்வம்னு இருந்தேன். ஐயப்பனுக்கு மாலை போட்டதிலிருந்து தெய்வ நம்பிக்கை உண்டு. ஆனா ஜாதகம், ஜோசியமெல்லாம் பிடிக்காது.
வார்ட்ரோப் விருப்பம்
எம்.ஜி.ஆர், அம்மா, அண்ணா, பெரியார், அப்துல்கலாம் புத்தகங்கள் இருக்கும். மஞ்சள் கலர் சட்டை பிடிக்கும்.
தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி
காலை எழும் நேரம், இரவு உறங்கச் செல்லும் நேரம்
8 மணி நேரம் நிச்சயமாகத் தூங்கிவிடுவேன். சீக்கிரம் தூங்கினால் காலை 6:30க்கு எழுந்துவிடுவேன். இரவு 12 மணிக்குத் தூங்கப்போனால் காலை 8 மணிக்குத்தான் எழுவேன்.
எத்தனை சிம், மொபைல் வைத்திருக்கிறீர்கள்?
ஒரு மொபைல், இரண்டு சிம்கள். அரசியலுக்கு வருவதற்கு முன் பல நேரங்களில் வெளியில் செல்லும்போது மொபைலே எடுத்துச்செல்ல மாட்டேன். இப்போது முக்கிய அழைப்புகள் வருமென்பதால் கையோடு வைத்திருக்கிறேன்.
வொர்க் அவுட் டைம்
தினமும் காலை ஒரு மணிநேரம் யோகாவும், ஜிம் பயிற்சியும் மேற்கொள்வேன். என் வீட்டிலேயே ஜிம் உள்ளது.
வாய்விட்டுச் சிரிக்க உங்கள் சாய்ஸ்
வடிவேலு காமெடி, `பரிதாபங்கள்' யூடியூப் சேனல், மீம்ஸ்.

மன நிம்மதிக்கு
எனக்குப் பிடித்த விஷயங்களை மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும்போதே தியானம் செய்ததுபோன்ற மனநிம்மதி கிடைத்துவிடும்.
டென்ஷனாக்கும் ஒரு விஷயம்
முக்கியமான நேரங்களில் வரும் தேவையில்லாத மொபைல் நோட்டிஃபிகேஷன்ஸ். நேர மேலாண்மையைச் சரியாகக் கடைப்பிடிக்காததும் என்னை மிகவும் டென்ஷனாக்கும்.
கேட்க விரும்பும் காம்ப்ளிமென்ட்
நான் செய்யும் அலங்காரங்களைக் கூர்மையாகக் கவனித்து பிறர் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கும். இங்கிருந்து செண்பக மலர்கள் எடுத்துச் சென்று பார்லிமென்ட் செல்லும்போது சூடிக்கொண்டு செல்வேன். அதைச் சிலர் கவனித்துவிட்டு `செண்பகா கேர்ள்' என்று பாராட்டுவார்கள். இதுபோன்ற பாராட்டுகளைக் கேட்கப் பிடிக்கும்.
இது இல்லாமல் ஒருநாளும் இருக்க முடியாது
இசை. தினமும் ஒரு பாடலாவது கேட்டுவிடுவேன். இளையராஜா இசை, பாடகர் ஹரிஹரன் குரல் மிகவும் பிடிக்கும். தலையணை இல்லாமலும் என்னால் இருக்க முடியாது.
ஃபேவரைட் உணவு
அல்வா வகைகள். குறிப்பாக, அசோகா அல்வா.
மாற்றவே முடியாத கெட்ட பழக்கம்
பார்க்கும், பழகும் அனைவரையும் எளிதில் நம்பிவிடுவேன்.
ஆரம்பிக்க ஆசைப்படும் நல்ல பழக்கம்
ஒரு மாதமாவது சர்க்கரை இல்லாத உணவுப் பழக்கத்துக்கு மாற வேண்டும்.
ஃபீல் குட் நேரத்துக்கு
என் சொந்த ஊருக்குச் சென்று அங்குள்ளவர்களோடு நேரம் செலவழிப்பதும், எங்கள் ஊர்க் கண்மாயில் காலார நடப்பதும்.
வாட்ஸப் அபௌட்டில் இருக்கும் வாசகம்
அது மனநிலையைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். மார்கழி என்பதால் இப்போது ஆண்டாளின் `திருப்பாவை’ வரிகளை வைத்துள்ளேன்.
அடிக்கடி செல்லும் இடம்
ஆயுர்வேதிக் ஸ்பா
தெய்வ நம்பிக்கை
சிறுதெய்வ வழிபாடு செய்வேன். வனப்பேச்சி பிடித்த தெய்வம்.
வார்ட்ரோப் விருப்பம்
புடவை, கண்ணாடி வளையல்கள்.
ராதிகா
காலை எழும் நேரம், இரவு உறங்கச் செல்லும் நேரம்
காலை 5.30; இரவு 10 மணி
எத்தனை சிம், மொபைல் வைத்திருக்கிறீர்கள்?
ஒண்ணே ஒண்ணுதான்.
வொர்க் அவுட் டைம்
காலை நேரம் யோகா மற்றும் வாக்கிங்.
வாய்விட்டுச் சிரிக்க உங்கள் சாய்ஸ்
டி.வி சேனல்கள்ல வடிவேலு காமெடி போட்டா ரிமோட்டைக் கீழவெச்சுட்டு சிரிக்கத் தயாராகிடுவேன்.
மன நிம்மதிக்கு
பியானோ இசைப்பது, குட்டீஸுடன் விளையாடுறது.
டென்ஷனாக்கும் ஒரு விஷயம்
வேலையில் ஒழுங்கின்மை, நேர ஒழுங்கின்மையோடு யாராவது இருந்தா செம டென்ஷன் ஆகிடுவேன்.

கேட்க விரும்பும் காம்ப்ளிமென்ட்
எனக்கு எந்த காம்ப்ளிமென்டுமே பிடிக்காது.
இது இல்லாமல் ஒருநாளும் இருக்க முடியாது
இசை!
ஃபேவரைட் உணவு
பஞ்சு பஞ்சா இட்லி.
மாற்றவே முடியாத கெட்ட பழக்கம்
எனக்கு எப்பவுமே எதிர்பார்ப் புகள் நிறைய இருக்கும். அதைக் குறைச்சுக்கணும்.
ஆரம்பிக்க ஆசைப்படும் நல்ல பழக்கம்
நிறைய மொழிகள் கத்துக்கணும்.
ஃபீல் குட் நேரத்துக்கு
பாடி மசாஜ், ஹெட் மசாஜ்.
வாட்ஸப் அபௌட்டில் இருக்கும் வாசகம்
சூப்பர் உமன் அட் வொர்க்!
அடிக்கடி செல்லும் இடம்
ஸ்பா.
தெய்வ நம்பிக்கை
பெருமாள்.
வார்ட்ரோப் விருப்பம்
புடவைதான்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்
காலை எழும் நேரம், இரவு உறங்கச் செல்லும் நேரம்
பொதுவாகக் காலை 6 மணிக்கு எழுவதும் இரவு 11 மணிக்குத் தூங்கச் செல்வதும் வழக்கம்.
எத்தனை சிம், மொபைல் வைத்திருக்கிறீர்கள்?
ஒரேயொரு மொபைல் - சிம்தான்.
வொர்க் அவுட் டைம்
காலை 8 மணி முதல் 10 மணிக்குள் சிம்பிளான உடற்பயிற்சிகள் செய்வேன்.
வாய்விட்டுச் சிரிக்க உங்கள் சாய்ஸ்
வடிவேலு காமெடி. ஹியூமர் புத்தகங்கள் அதிகம் வாசிப்பேன்.

மன நிம்மதிக்கு
மியூசிக்.
டென்ஷனாக்கும் ஒரு விஷயம்
பசியில் நான் நானாகவே இருக்கமாட்டேன்.
கேட்க விரும்பும் காம்ப்ளிமென்ட்
`உங்க படம் பிடிச்சிருக்கு’னுதான்!
இது இல்லாமல் ஒருநாளும் இருக்க முடியாது
இளையராஜா சார் இசையோடு கிரீன் டீ.
ஃபேவரைட் ஃபுட்
அம்மா சமையல்தான் எப்போதும்
மாற்றவே முடியாத கெட்ட பழக்கம்
எல்லோரையும் எளிதில் நம்பும் பழக்கம்.
ஆரம்பிக்க ஆசைப்படும் நல்ல பழக்கம்
ஆரோக்கியமான டயட்.
ஃபீல் குட் நேரத்துக்கு
நீண்டதூரப்பயணமும் நல்ல படமும்.
வாட்ஸப் அபௌட்டில் இருக்கும் வாசகம்
Don't ask me to give it up for, passion is all I have.
அடிக்கடி செல்லும் இடம்
காபி ஷாப்ஸ்
தெய்வ நம்பிக்கை
இருக்கிறது.
வார்ட்ரோப் விருப்பம்
புளூ ஷர்ட் மற்றும் டெனிம் பேன்ட்.