Published:Updated:

ஆண் பாதி... ஆடை பாதி!

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

#Lifestyle

படங்கள்: கிரண் சா

‘அழகு என்பது ஆண்பாலா... பெண்பாலா...’ என்ற வாதமெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். `அழகில் ஏது பாலின பேதம்? அது நாம் உடுத்தும் உடைகளிலும், நம் உடல்மொழியிலும்தான் உள்ளது' என்கிறார்கள் காஸ்டியூம் டிசைனர்களும் போட்டோகிராபர்களும்.

பிரபல செலிபிரிட்டி போட்டோ கிராபரான கிரண் சா, போட்டோஷூட்டில் ஆணை அழகாகக் காட்டும் விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.

``பெண்களைப் பொறுத்தவரையில் அவங்கள நேர்த்தியா காட்ட ஹேர்ஸ்டைல், மேக்கப், அவுட் ஃபிட், உடல் மற்றும் முக பாவனைகள்னு நிறைய விஷயங்கள் இருக்கு. ஆனா, ஓர் ஆணை அவர் அணியும் ஆடைகளால் மட்டும்தான் அழகா காட்ட முடியும்.

கலர்ஃபுல்லான ஷர்ட், டி-ஷர்ட் அதுக்கு மேட்ச்சா பேன்ட் அணியும்போது லுக்கா இருக்கும். வொயிட் கலர் ஷர்ட்டும் ப்ளூ கலர் ஜீன்ஸ் வித் கூலர்ஸும் ஆண்களை ஸ்மார்ட்டா காட்டும். டிரஸ்ஸுக்கு தகுந்த ஹேர் ஸ்டைல், ஸ்லிப்பர்ஸ்ல லுக் பர்ஃபெக்டா அமைஞ்சிடும்” என்கிற கிரண் சா, தான் போட்டோஷூட் செய்த பிரபலங்களின் அவுட் ஃபிட் ஸ்டைல் குறித்தும் விவரித்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஆண் பாதி... ஆடை பாதி!

விஜய்

விஜய் அண்ணா போட்டோஷூட் வேற லெவல்ல இருக்கும். கோட்-சூட்ல அவரைப் பார்க்குறது ரொம்பவே அபூர்வம். எப்போதும் நார்மல் பேன்ட்-ஷர்ட்தான் அவரோட சாய்ஸ். ஸ்லீவை மடக்கி விட்டிருப்பார். அவரோட மேன்லி லுக்குக்கு இன்னொரு ஸ்பெஷல் காரணம், அவர் முகத்துல எப்போதும் இருக்கும் ஸ்மைல்!

ஆண் பாதி... ஆடை பாதி!

கமல்

மல் சாருக்கு எந்த அவுட் ஃபிட்டும் கச்சிதமா பொருந்தும். தான் அணியுற உடைகளில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துவாரோ அதே அளவுக்கு ஹேர் ஸ்டைல், ஷூஸ், வாட்ச்னு எல்லாவற்றுக்குமே முக்கியத்துவம் கொடுப்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆண் பாதி... ஆடை பாதி!
ஆண் பாதி... ஆடை பாதி!

ஜெயம் ரவி

ஜெயம் ரவியோட ஃபேமிலி போட்டோஷூட் ஒருமுறை நடந்தது. அப்போ அவர், பிளாக் வித் ப்ளூ கோட் சூட்ல ரொம்ப மேன்லியா இருந்தாரு. அப்போ அவரை மட்டும் தனியா ஒரு போட்டோஷூட் பண்ணிக் கொடுத்தேன்.

ஆண் பாதி... ஆடை பாதி!

ராணா டகுபதி

டிரெடிஷன், மாடர்ன் ரெண்டு காஸ்டியூஸ்லயும் பிரமாதமா தெரிவார் ராணா டகுபதி. லுக்குக்கு தகுந்த மாதிரி அவரோட பாடி லேங்குவேஜும் வித்தியாசமா இருக்கும்.

ஆண் பாதி... ஆடை பாதி!

ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் சாரோட காஸ்டியூம் எப்போதும் கூலான ஸ்டைலில், கலர் ஃபுல்லா இருக்கும். டார்க் ப்ளூ ஷெர்வானி, ப்ளூ ஜீன்ஸ், பிளாக் ஷூஸ் காம்பி னேஷன்ல ஒரு போட்டோ ஷூட் பண்ணியிருந்தோம். பிரமாதமா வந்திருந்தது.

ஒவ்வொருவருக்கும் ஒரு காஸ்டியூம் ஸ்டைல் பொருந்திப்போகும். அதைக் கண்டுபிடிச்சிட்டோம்னா நமக்கான ஸ்டைல் தானாவே உருவாகிடும்.

ஆண் பாதி... ஆடை பாதி!

ண்களுக்கான ஆடைகளைத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களைக் கூறுகிறார் காஸ்டியூம் டிசைனர் தூரிகை கபிலன்.

“ஆண்கள் காஸ்டியூம் விஷயத்துல மற்றவர்களை ஃபாலோ பண்ணாம, தமக்குன்னு ஒரு தனி ஸ்டைலை ஏற்படுத்திக்கணும். காலர் வெச்ச ஷர்ட் வயதை அதிகரித்துக் காட்டுதுனு நினைக்கிறவங்க காலர் இல்லாத வெஸ்டர்ன் ஸ்டைல் சட்டைகளை முயற்சி செய்யலாம். கதர் ஆடையும் வயதை அதிகரித்துக் காட்டும் என்பதால் அவங்களோட நிறத்துக்குப் பொருந்தும் கலர்களில் ஷர்ட் அணியலாம்.

பருமனான ஆண்களும் டார்க் நிற உடைகளில் ஃபிட்டான தோற்றத்தைப் பெறலாம். ரொம்பவும் டைட்டாக அல்லது லூசாக இல்லாமல் அவர்களின் உடல் அமைப்புக்குத் தகுந்த சைஸில் அவுட் ஃபிட்டை தேர்வு செய்ய வேண்டும். அணியும் ஆடைக்குத் தகுந்தாற்போல பெல்ட், வாட்ச், ஷூஸ், டை போன்றவற்றை அணியும்போது மட்டுமே பர்ஃபெக்ட் லுக் கிடைக்கும். எந்த ஆடையானாலும் தன்னம்பிக்கையுடனும் கம்பீரத்துடனும் அணிய வேண்டும்.”