Published:Updated:

`நம் அமைப்புதான் அவரை விளிம்புக்குத் தள்ளியது!’ – சித்தார்த்தா மரணம் குறித்து பிரபலங்களின் பதிவு

தற்போது வரை மொத்தமாக 1,700 கஃபேக்கள், சுமார் 48,000 விற்பனை இயந்திரங்கள், 532 கியோஸ்க் ஸ்டோர்கள் மற்றும் 403 கிரவுண்ட் காபி விற்பனை நிலையங்கள் உள்ளன.

V G Siddhartha
V G Siddhartha

தேநீர் அதிகம் பருகிய இந்தியாவைக் காபி பக்கம் திருப்பியவர் வி.ஜி.சித்தார்த்தா. IT நிறுவனங்களைத் தவிர்த்து சாதாரண மக்கள் நிறைந்திருக்கும் வணிக இடத்தில் முதல் முறையாக காபி டே மூலம் இன்டர்நெட் இணைப்பைக் கொண்டு வந்தவர் இவர். 350 ஏக்கர் காபி தோட்டத்தை 12,000 ஏக்கர் நிலப்பரப்பளவுக்கு உயர்த்தி, ஆசியாவின் மிகப் பெரிய காபி எஸ்டேட்டின் உரிமையாளரானார். இவரின் திடீர் மறைவு, பல தொழில்முனைவோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சித்தார்த்தாவின் மறைவுக்கு தங்களின் இரங்கல் செய்தியைச் சமூக வலைதளத்தில் பதிவிட்ட, சில பிரபலங்களின் ட்வீட்ஸ் இங்கே.

``இந்தியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு இது ஒரு கறுப்பு தினம்! வி.ஜி.சித்தார்த்தாவின் இந்நிலை துரதிர்ஷ்டவசமானது. நம் அமைப்புதான் அவரை விளிம்புக்குத் தள்ளியது என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. ஓம் சாந்தி" – என்று முன்னாள் IPS அதிகாரியும் ஜார்க்கண்ட் பிரதேச காங்கிரஸ் குழுவின் தலைவருமான அஜோய் குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Ajoy Kumar Tweet
Ajoy Kumar Tweet

``சித்தார்த்தாவின் நிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. IT அதிகாரிகளின் துன்புறுத்தல், வரி பயங்கரவாதம் மற்றும் பொருளாதாரத்தின் சரிவுடன் இந்தியாவின் தொழில்முனைவோர் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. UPA-வின் கீழ் அமைந்திருக்கும் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், மக்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத் துறை (Tamil Nadu Congress Minority Department) பதிவிட்டிருக்கிறது.

Tamilnadu Congress Minority Department tweet
Tamilnadu Congress Minority Department tweet

``சித்தார்த்தா, கர்நாடகாவின் காபியை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தினார். பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதோடு ஒவ்வோர் இந்தியரின் மனதையும் ஆழமாகத் தொட்ட ஒரு வணிகத்தை உருவாக்கியவருக்கு இப்படிப்பட்ட மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவருடைய குடும்பத்தினருக்கு என் இரங்கல்" என்று கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் ரோஷன் பெயிக் குறிப்பிட்டிருக்கிறார்.

Roshan Baig Tweet
Roshan Baig Tweet

`` `பணம்' அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்காது. நம் பெயருக்கும் வாழ்க்கைக்கும் ஏராளமான முரண் உள்ளது. ஒரு சித்தார்த்தா சமாதானத்தின் அடையாளமாக மாறினார், மற்றொருவர் அதன் உண்மையான முக்கியத்துவத்தை நமக்குக் காண்பித்திருக்கிறார்" என்று பிரபல RJ மற்றும் நடிகருமான தானிஷ் செயிட் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Danish Sait tweet
Danish Sait tweet

``மறக்கமுடியாத பல CCD நினைவுகளில் இதுதான் எனக்கு மிகவும் நெருக்கமானது. 2010-ல், நான் என் குழந்தையோடு பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்போது, அவனுக்கு பால் கொண்டு செல்ல மறந்துவிட்டேன். அங்கிருந்த காபி டே கடையில் ஒரு பாட்டிலில் பாலை நிரப்பி அதற்காக இரண்டு காபிக்கு பில் போடச் சொன்னேன். ஆனால், அவர்கள் அதற்கான கட்டணத்தை வாங்க மறுத்துவிட்டனர். சித்தார்த்தா, உங்கள் பிராண்டு நீண்ட காலம் வாழும்" என்று நெகிழ்ந்து பதிவிட்டிருந்தார் பிரபல உணவு எழுத்தாளரான நந்திதா ஐயர்.

Nandita Iyer tweet
Nandita Iyer tweet
கம்யூனிச தலைவராக நினைத்தவர் கஃபே காபி டே ஓனர்... சித்தார்த்தா பயோ! #VGSiddhartha #CafeCoffeeDay

``உதய்பூருக்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது சித்தார்த்தாவுடன் நிகழ்ந்த என் கடைசி உரையாடலை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பதிலிருந்து மீள முடியவில்லை. அவர் எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பவர். மிகவும் கண்ணியமானவர். இது, அவருடைய குடும்பம், நண்பர்கள் மற்றும் இந்தியாவின் தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்புக்குக் கற்பனை செய்ய முடியாத இழப்பு" என்று The Quint தளத்தின் நிறுவனர் ராகவ் பால் பதிவிட்டிருக்கிறார்.

Raghav Bahl Tweet
Raghav Bahl Tweet

தற்போதுவரை மொத்தமாக 1,700 கஃபேக்கள், சுமார் 48,000 விற்பனை இயந்திரங்கள், 532 கியோஸ்க் ஸ்டோர்கள் மற்றும் 403 கிரவுண்ட் காபி விற்பனை நிலையங்கள் உள்ளன. சமீபத்தில், இந்தியாவின் மிகப்பெரிய காபி செயினின் கணிசமான பங்கைப் பெறுவதற்காக CCD-யுடன் Coca-Cola நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. காபி டேயுடன் GTV, மைண்ட்ரீ, லிக்விட் கிரிஸ்டல், வே 2 வெல்த் மற்றும் இட்டியம் ஆகிய நிறுவனங்களிலும் சித்தார்த்தா இணைந்திருக்கிறார். இளம் தொழில்முனைவோர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்த சித்தார்த்தாவின் மறைவு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.