Published:Updated:

தமிழில் எனக்குப் பிடித்த சொல்!

ராதிகா
பிரீமியம் ஸ்டோரி
ராதிகா

`காலம் பொன் போன்றது' என்பார்கள். காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் நாம் அனுபவித்துக் கடக்க வேண்டும்.

தமிழில் எனக்குப் பிடித்த சொல்!

`காலம் பொன் போன்றது' என்பார்கள். காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் நாம் அனுபவித்துக் கடக்க வேண்டும்.

Published:Updated:
ராதிகா
பிரீமியம் ஸ்டோரி
ராதிகா
தமிழில் எனக்குப் பிடித்த சொல்!

வலி என்கிற சொல் மிகவும் பிடிக்கும். வலி என்பதற்கு வலிமை என்கிற பொருளும் இருக்கிறது. `ஊழிற் பெருவலி யாவுள' என்று வள்ளுவர் குறிப்பிடுவதில் உள்ள வலி என்பது வலிமையைக் குறிப்பதே. ஊழை (விதி) விடவும் பெரிய வல்லமை கொண்டது எது என்று குறிப்பிடுகிறார். எது வலி தருகிறதோ... அது வலிமையும் தரும் என்பதால் எனக்கு அச்சொல் மிகவும் பிடிக்கும்.

- பாரதி பாஸ்கர், பேச்சாளர்

தமிழில் எனக்குப் பிடித்த சொல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொரு குழந்தையும் சொல்கிற முதல் வார்த்தை 'அம்மா'. அம்மாவைப் பிடிப்பதற்கான காரணத்தை சொல்லியா தெரிய வேண்டும்... நம் குழந்தைகள் அம்மா என்றழைப்பதைக் கேட்கையில்தான் தாய்மை பூரணமடையும்.

- நடிகை குஷ்பு

தமிழில் எனக்குப் பிடித்த சொல்!

`ஞாயிறு' என்ற சொல்... அதன் எழுத்து வடிவமும் உச்சரிக்கும் ஒலியும் சூரியனைக் குறிப்பதற்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதால் அச்சொல் எனக்கு பிடித்திருக்கிறது.

- நடிகை ரோஹிணி

தமிழில் எனக்குப் பிடித்த சொல்!

`காலம் பொன் போன்றது' என்பார்கள். காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் நாம் அனுபவித்துக் கடக்க வேண்டும். காலம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பதால் அது என் விருப்புக்குரிய சொல்லாக இருக்கிறது.

- நடிகை ராதிகா

தமிழில் எனக்குப் பிடித்த சொல்!

`கலாபம்' என்கிற சொல் மிகவும் பிடிக்கும். கலாபம் என்றால் மயில்தோகை என்று பொருள். தோகை என்பதற்குப் பயன்படுத்தியே, மயில் என்பதற்கான ஆகுபெயராகவும் அது மாறிவிட்டது. அதாவது கலாபம் என்று சொன்னால் மயில் தோகையையும் குறிக்கும், மயிலையும் குறிக்கும். என் பாடல்களில் சரியான இடத்தில் இச்சொல்லைப் பொருத்துகையில் அவ்வரியே அழகாகி விடும்.

- தாமரை, பாடலாசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism