Published:Updated:

ஜெயலலிதாவின் எளிமை, ஸ்ரீதேவியின் வாழ்த்து, நயன்தாராவின் செலக்‌ஷன்...

டாலி ஜெயின்
பிரீமியம் ஸ்டோரி
டாலி ஜெயின்

அனுபவங்கள் பகிரும் பிரபலங்களின் சாரி டிரேப்பர் டாலி ஜெயின்

ஜெயலலிதாவின் எளிமை, ஸ்ரீதேவியின் வாழ்த்து, நயன்தாராவின் செலக்‌ஷன்...

அனுபவங்கள் பகிரும் பிரபலங்களின் சாரி டிரேப்பர் டாலி ஜெயின்

Published:Updated:
டாலி ஜெயின்
பிரீமியம் ஸ்டோரி
டாலி ஜெயின்

டாலி ஜெயின்... பாலிவுட்டின் ‘தி மோஸ்ட் வான்ட்டடு வுமன்’... அடுத்த ஆறு மாதங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் ஃபுல் என்கிறது டாலியின் டைரி. மறைந்த நடிகை ஸ்ரீதேவி முதல் சமீபத்திய சென்சேஷன் நயன்தாரா வரை பிரபலங் களின் சாரி டிரேப்பர். இருப்பது கொல் கத்தாவில். பறப்பது உலகம் முழுவதும்...

`` `சேலை கட்டிவிடறதெல்லாம் ஒரு வேலையா... உனக்கு இதெல்லாம் தேவையா... இதுல என்ன வருமானம் வந்துடும்’னு ஒரு காலத்துல ஏளனமா பேசினவங்க, இன்னிக்கு என்கிட்ட பேச நேரம் கிடைக்குமானு காத்திட்டிருக் காங்க... நான் என்னை நம்பினேன்... என் திறமையை நம்பினேன்... இன்னிக்கு இந்த இடத்துல இருக்கேன்...’’ தன்னடக்க இன்ட்ரோ கொடுப்பவர், கடந்த காலத்தில் கனவுகள் ஏதுமில்லாத ஹோம் மேக்கராக இருந்தவர்.

ஜெயலலிதாவின் எளிமை, ஸ்ரீதேவியின் வாழ்த்து, நயன்தாராவின் செலக்‌ஷன்...

``பெங்களூருல பிறந்து, வளர்ந்தேன். 30 வருஷங் களுக்கு முன்னாடியே கொல்கத்தாவுல குடியேறிட் டோம். தவிர்க்க முடியாத சில காரணங்களால ஸ்கூல் ஃபைனலுக்கு மேல படிக்க முடியலை. நிறைய படிக்கிறவங்கதான் வாழ்க்கையில ஜெயிப்பாங்கன்றதை என் விஷயத்துல மாத்திக் காட்டின திருப்தி எனக்கு உண்டு. கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு சேலை உடுத்தவே பிடிக்காது. சேலை உடுத்தவும் தெரியாது. ஆனா புகுந்தவீட்டுல சேலைதான் உடுத்தியாகணும்ங்கிற நிலைமை. ‘சேலை மட்டும் வேண்டாமே... வேற டிரஸ் போட அனுமதிங்களேன்’னு மாமியார் மனசை கொஞ்சம் கொஞ்சமா மாத்த முயற்சி பண்ணிட்டிருந்தேன்.

ஒரு கட்டத்துல அவங்க ‘உன் விருப்பப்படி என்ன வேணா உடுத்திக்கோ’ன்னு சொல்லிட் டாங்க. ஆனா, அந்த நேரம் என்னையும் அறியாம எனக்கு சேலை மேல காதல் வந்திருச்சு... அது சாதாரண காதல் இல்லை... விதம்விதமான ஸ்டைல்ல சேலை கட்டி அழகுபார்க்குற அளவுக்கு அநியாய லவ்... எப்படி மடிப்பு வைக்கணும், எப்படி கொசுவம் வைக்கணும்னு சேலை கட்டறதுல அடிப்படைகூட தெரியாம இருந்த நான், இன்னிக்கு சாரி டிரேப்பிங்கை முழு நேர வேலையா பண்ணிட்டிருக்கேன்கிறது எனக்கே ஆச்சர்யம் தான்...’’ நம்மையும் ஆச்சர்யப்படுத்து கிறவரின் வளர்ச்சி அசாத்தியமானது.

 தேவியுடன்...
தேவியுடன்...

``எங்கே வெளியில போனாலும் வித்தியாசமான ஸ்டைல்ல சேலை கட்டிட்டுப் போவேன். அதைப் பார்த்துட்டு அத்தனை பேரும் பாராட்டுவாங்க. இன்னும் சொல்லப் போனா, அடுத்த முறை நான் என்ன ஸ்டைல்ல சேலை கட்டிட்டு வரப் போறேங்கிற எதிர்பார்ப்போட என்னை கவனிக்க ஆரம்பிச்சாங்க.

ஒருமுறை எங்க ஏரியாவுல இருந்த சின்ன பொண்ணுங்க சிலர், நான் உடுத்தற மாதிரி சேலை கட்ட சொல்லித் தர முடியுமானு வந்து கேட்டாங்க. அதுதான் ஆரம்பம். அப்பவே எனக்கு 25-க்கும் மேலான ஸ்டைல்ல சேலை கட்டத் தெரியும். இதையே ஏன் ஒரு பிசினஸா பண்ணக்கூடாதுன்னு சின்னதா பொறி தட்டுச்சு. துணிக்கடைகள்ல இருக்கிற மேனிக்வீன் பொம்மை ஒண்ணு வாங்கி வீட்டுல வெச்சு, இன்னும் விதம்விதமான ஸ்டைல்கள்ல சேலை கட்ட பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சேன். மேனிக்வீனுக்கு சேலை கட்டும் ஒவ்வொரு முறையும் அதை போட்டோ எடுத்துவைப்பேன். கிட்டத்தட்ட 80 ஸ்டைல்ல கட்டிப் பார்த்ததும் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸுக்கு அப்ளை பண்ணி னேன். இந்தியாவிலேயே முதல் முறையா 80 விதமான ஸ்டைல்ல சேலை கட்டி, லிம்கா புத்தகத்துல இடம் பிடிச்சேன். அடுத்த முறை 120 ஸ்டைல்ல கட்டி என் சாதனையை நானே முறி யடிச்சேன்’’- அநாயாச சாதனைகளை அடுக்குபவர், ரவீணா டாண்டன், சோனம் கபூர், ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அனுஷ்கா ஷர்மா, தியா மிர்ஸா, சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய், ஹெலன், வஹீதா ரஹ்மான், கங்கணா ரணாவத், தனுஸ்ரீ தத்தா, கத்ரினா கைஃப், சல்மான் கானின் சகோதரி அர்பிதா கான், அம்பானி குடும்பத் தார் என அநேக பிரபலங் களுக்கும் சாரி டிரேப்பர்.

 ஆலியா பட் - ரன்பீர் கபூர்
ஆலியா பட் - ரன்பீர் கபூர்
 தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்

‘என்னைப் பொறுத்த வரைக்கும் நான் சேலை உடுத்திவிட்ட ஒவ்வொரு பெண்ணுமே எனக்கு செலிபிரிட்டிதான். பாலிவுட் செலிபிரிட்டீஸுக்கு சேலை உடுத்திவிடற வாய்ப்பு நான் நினைச்சுப் பார்க்காத நேரத்துல நடந்தது. மனிஷ் மல்ஹோத்ரா, அபு ஜானி சந்தீப் கோஸ்லா, சப்யா சாச்சினு பாலிவுட்டின் டாப் டிசைனர்ஸ் பலரும் என் வொர்க்கை பார்த் துட்டு செலிபிரிட்டீஸுக்கு சேலை உடுத்திவிடற வாய்ப்பைக் கொடுத்தாங்க. நான் சேலை உடுத்திவிட்ட முதல் செலிப்ரிட்டி நடிகை ஸ்ரீதேவி. அவங்க என்னை பத்திக் கேள்விப்பட்டு, ஒருநாள் கூப்பிட்டனுப் பினாங்க. என் வொர்க்கை பார்த்துட்டு, ‘நீ மேஜிக்கே பண்ணிட்டே’ன்னு பாராட்டி னாங்க... அப்படியே அடுத்தடுத்து நிறைய பிரபலங்களோடு வொர்க் பண்ற வாய்ப்பு வந்தது.

ஒருநாள் ஒரு பெரிய ஸ்டைலிஸ்ட்கிட்டருந்து போன் வந்தது. ‘பெரிய செலிபிரிட்டியோட கல்யாணம்... மணப்பெண்ணுக்கு நீங்கதான் சேலை உடுத்திவிடணும். தேதிகளை மட்டும் பிளாக் பண்ணிவெச்சுக்கோங்க'ன்னு சொன் னாங்க. கடைசிலதான் அது ஆலியா பட் கல்யாணம்னு தெரியவந்தது. ஆலியாவோட அழகை பத்திச் சொல்லவே தேவையில்லை. கல்யாணத்துல தான் எப்படித் தெரிய ணும்ங்கிறதுல ரொம்ப தெளிவா இருந்தாங்க. அதனால என் வேலை ஈஸியாயிடுச்சு. அந்தக் கல்யாணத்துல எனக்குப் பிடிச்ச மூணு விஷயங்கள் நடந்தது. ஒண்ணு ஆலியா, அடுத்து அவங்க உடுத்தின என் ஆல்டைம் ஃபேவரைட் ஆர்கன்ஸா சாரி, மூணாவது அந்த சேலையோட ஐவரி கலர்... அதே மாதிரியான விஷயம்தான் சமீபத்துல முடிஞ்ச நயன்தாரா கல் யாணத்துலயும் நடந்துச்சு. ஒண்ணு நயன், அடுத்தது அவங்களுடைய ஹேண்ட் கிராஃப்ட்டடு சாரி, அப்புறம் அந்த அழகான ரெட் கலர்... அவங்களே பார்த்துப் பார்த்து செலக்ட் பண்ணின அந்த சாரியில தேவதை மாதிரி இருந்தாங்க நயன்’’ - சிலிர்ப்பவர், சாரி டிரேப்பிங்கில் ஒரு கொள்கையைக் கடைப்பிடிக்கிறார்.

நயன்தாரா
நயன்தாரா

``என் விருப்பத்தைவிட மணமகளோட விருப்பம்தான் எனக்கு முக்கியம். அவங்க விருப்பம் தெரிஞ்சுகிட்டு அதுல என் ஸ்டைலை சேர்த்துக் கட்டிவிடுவேன். தீபிகா படுகோனுக்கு பள்ளு நீளமா, கைகள்ல தாங்கிப்பிடிக்கிற மாதிரி இருந்தா பிடிக்கும். ப்ரியங்கா சோப்ராவுக்கு லூஸா கட்டிவிடச் சொல்லிக் கேட்பாங்க. அம்பானி தம்பதியோட மகள் இஷாவுக்கு சேலையை பின் பண்ணி, நகராம இருக்கிற நீட்லுக்தான் பிடிக்கும்..’’ அத்தனை பேரின் விருப்பங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவருக்கு மறக்கமுடியாத நினைவொன்று இருக்கிறது.

``தமிழ்நாடு முதல்வரா இருந்த ஜெயலலிதா மேடத்துக்கு ஒருமுறை சேலை உடுத்திவிடக் கூப்பிட்டாங்க. நான் பை நிறைய சேஃப்டி பின் எடுத்துட்டுப் போனதால என்னை உள்ளேயே விடலை. ‘சேலை உடுத்திவிட அது அவசியம், சேஃப்டி பின், ஆபத்தான ஆயுதமெல்லாம் கிடையாது'னு செக் யூட்ரிட்டிகிட்ட எடுத்துச் சொல்லிட்டு உள்ளே போனேன். ஆனா ஜெயலலிதா மேடம் ரொம்ப சிம்பிள். ஹெவியான சேலையைக் கொடுத்து, பாரம்பர்ய முறையில சிம்பிளா கட்டிவிடச் சொன்னாங்க...’’ பிரமிப்பு விலகாமல் விவரிக்கிறார்.

எப்படிப்பட்ட ஸ்டைலிலும் ஐந்து முதல் ஏழு நிமிடங்களில் சேலை கட்டிமுடிக்கும் திறமை கொண்ட டாலிக்கு, 365 ஸ்டைல்களில் சேலை உடுத்தத் தெரியுமாம்.

``365 ப்ளஸ் ஒன் ஸ்டைல்களை உள்ளடக்கிய காபி டேபிள் புக் கொண்டு வரணும்ங்கிறது தான் என் லட்சியமே... சேலையை உலக அளவுல பிரபலமாக்கணும். சேலை கட்டத் தெரியாது, சேலை உடுத்திக்கிட்டு வேலை செய்ய முடியாதுன்னெல்லாம் சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது. ஜான்சி ராணி லட்சுமிபாய் போர்க்களத்துலயே சேலை யோடுதான் இருந்தாங்க. உங்களால முடியாதா என்ன..?’’ - வரலாற்று உதாரணத்தோடு வாயடைக்க வைக்கிறார் டாலி.

சேலை கட்ட... டாலியின் டிப்ஸ்!

* முதல்முறை சேலை உடுத்தும்போது உங்க இன்ஸ்கர்ட்டும் பிளவுஸும் பக்காவா ஃபிட்டா யிருக்கானு பாருங்க.

* சேலையில ஒல்லியா தெரியணும்னா டி கோட் அணியறதும், சரியான மெட்டீரியல்ல சேலையைத் தேர்ந்தெடுக்கிறதும் முக்கியம்.

* சேலை கட்டும்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டபுள் லாக் பின் உபயோகிக்கத் தவறாதீங்க.

* பெட்டி கோட், ஷேப் வியருக்கு பதிலா டி கோட் யூஸ் பண்ணி சேலை உடுத்துங்க. அதுதான் இப்போ டிரெண்டு.

* டிரெடிஷனலா, மாடர்னா, செக்ஸியா... எப்படி வேணுமோ அப்படிக் காட்டக்கூடிய டிரஸ்னா அது சாரிதான். எந்த மெட்டீரியல்ல எந்த ஸ்டைல்ல உடுத்தறீங்கன்றதுதான் ரொம்ப முக்கியம்.