Published:Updated:

80 லட்சம் டெபாசிட்... 45 ஆயிரம் வாடகை! - தேனியை மிரளவைத்த செல்போன் டவர் மோசடி

செல்போன் டவர்
பிரீமியம் ஸ்டோரி
செல்போன் டவர்

உங்கள் வங்கிக்கணக்கில் 80 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துவிடுவோம். மாதம் 45,000 ரூபாய் வாடகை கிடைக்கும்

80 லட்சம் டெபாசிட்... 45 ஆயிரம் வாடகை! - தேனியை மிரளவைத்த செல்போன் டவர் மோசடி

உங்கள் வங்கிக்கணக்கில் 80 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துவிடுவோம். மாதம் 45,000 ரூபாய் வாடகை கிடைக்கும்

Published:Updated:
செல்போன் டவர்
பிரீமியம் ஸ்டோரி
செல்போன் டவர்

‘நீங்கள் அதிர்ஷ்டசாலி, உங்களது செல்போன் எண்ணுக்கு ஒரு கோடி பரிசு விழுந்திருக்கிறது. இலவச வீட்டு மனை கிடைத்திருக்கிறது’ என்கிறரீதியில் வரும் டுபாக்கூர் அழைப்புகளை நம்பி ஏமாறுவோர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம், ஏமாற்றுபவர்களின் புதுப்புது யுக்திகள். தேனியில் செல்போன் டவர் அமைப்பதாகச் சொல்லி நடந்திருக்கும் மோசடி அதற்கு லேட்டஸ்ட் உதாரணம்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள கடமலைக்குண்டைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர், இந்த மோசடியில் சிக்கி பல லட்ச ரூபாய் இழந்திருக்கிறார். அவரிடம் பேசினோம். ‘‘கடந்த ஏப்ரலில் 9319777254 என்ற எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. செல்போன் டவர் அமைக்கும் ஏஜென்சியிலிருந்து பேசுவதாகச் சொல்லி ஒரு பெண் பேசினார். ‘உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் செல்போன் டவர் அமைக்க முடிவு செய்துள்ளோம். உங்களுக்கு எந்தச் செலவும் கிடையாது. செல்போன் கம்பெனியிடமிருந்து மாதந்தோறும் வாடகை வரும்’ என்று கவர்ந்திருக்கும்படி பேசியவர், ‘விருப்பமிருந்தால் உங்கள் இடத்தின் சர்வே நம்பரை 9990890155 என்ற எண்ணுக்கு வாட்ஸப் செய்யுங்கள்’ என்று சொன்னார். அவர் பேசியதை நம்பி என் வீட்டில் கலந்தாலோசித்து, எங்கள் நிலத்தின் சர்வே நம்பரை அனுப்பினேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு வாரம் கழித்து அந்தப் பெண் பேசினார். ‘உங்கள் இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கு எல்லாம் கிட்டதட்ட ஓ.கே ஆகிவிட்டது. உங்கள் வங்கிக்கணக்கில் 80 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துவிடுவோம். மாதம் 45,000 ரூபாய் வாடகை கிடைக்கும். ஆனால், இதற்கு அனுமதி வாங்குவதற்கான செலவுகளை நீங்கள்தான் செய்ய வேண்டும்’ என்றார். முதலில் டாக்குமென்ட் சார்ஜ் கேட்டார். எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவரின் அடையாள அட்டையையும், ட்ராய் பெயரில் அனுமதி கடிதத்தையும் எனக்கு அனுப்பி நம்பவைத்தார். பிறகு, டெல்லி இந்தியன் வங்கிக்கிளையில் அக்கவுன்ட் வைத்துள்ள பாபு என்பவரின் வங்கிக்கணக்குக்கு (6684596736) டாக்குமென்ட் சார்ஜாக அவர் கேட்ட 3,500 ரூபாயை அனுப்பினேன்.

சதீஷ், சாய்சரண் தேஜஸ்வி
சதீஷ், சாய்சரண் தேஜஸ்வி

இரண்டு நாட்கள் கழித்து அழைத்த அந்தப் பெண் ‘யு.டி.ஆர் நம்பர் வாங்க வேண்டும். அதற்கு 28,500 ரூபாய் கட்ட வேண்டும்’ என்றார். அதையும் அனுப்பினேன். இப்படி தொடர்ச்சியாக ஒரே மாதத்தில் 1,92,000 ரூபாய் அந்த வங்கிக்கணக்குக்கு அனுப்பினேன். ஒரு மாதமாகி விட்டது. ஒரு கட்டத்தில் சந்தேகம் ஏற்பட்டு, ‘இன்னும் ஏன் டவர் அமைக்கும் பணியைத் துவங்கவில்லை’ என்று கேட்டேன். ‘டாக்குமென்ட் வேலைகள் எல்லாம் முடித்துவிட்டது. ட்ராயிடம் என்.ஓ.சி வாங்க வேண்டும்’ என்று சொல்லி அதற்கு 1,20,000 ரூபாய் கேட்டார். ‘எல்லாம் முடிந்துவிட்டதே’ என நினைத்து அந்தத் தொகையையும் அனுப்பினேன். அவ்வளவுதான்... அடுத்த நாளே அவர்கள் தரப்பில் உள்ள அனைத்து நம்பர்களும் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டன. வங்கியில் விசாரித்தேன். அந்த வங்கிக்கணக்கில் சந்தேகம் இருப்பதாகச் சொன்னார்கள். உடனே அனைத்து ஆவணங்களுடன் தேனி எஸ்.பி-யிடம் புகார் தெரிவித்தேன். ‘நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று சொல்லியிருக்கின்றனர். ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்றார் ஆதங்கத்தோடு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சதீஷ் ஏமாற்றப்பட்டு ஆறு மாதமான நிலையில் இரண்டு வாரம் முன்னர், தேனி ஓடைத்தெருவைச் சேர்ந்த பிரபாகரனை அணுகியிருக் கிறது அதே மோசடி கும்பல். அவரிடம் நித்யா என்ற பெயரில் ஒரு பெண் தேனொழுகப் பேசியிருக்கி றார். அதே கதை. ஆனால் சதீஷ் 4,500 ரூபாய் இழந்ததும் சுதாரித்துக் கொண்டுவிட்டார். சதீஷின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிய நித்யா போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். சதீஷின் நண்பர் ஒருவருக்கும் இதே பாணியில் அழைப்பு வந்திருக்கிறது. ஆனால், அவர் ஏமாறாமல் விழித்துக்கொண்டார்.

பிரபாகரன் நம்மிடம், ‘‘நூற்றுக்கணக்கானோர் ஏமாந்திருப் பார்கள் என்று நினைக்கிறேன். இதுபற்றி போலீஸ் தரப்பில் உடனடியாக ஒரு விளம்பரம் கொடுத்தால் இதுவரை எத்தனை நபர்கள் ஏமாந்துள்ளனர் என்று தெரியவரும்’’ என்றார்.

செல்போன் டவர்
செல்போன் டவர்

இதுபற்றி நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர். ‘‘அனைவரிடமும் ஒரே டயலாக் சொல்லியிருக்கிறார்கள். தேனியில் பல இளைஞர்கள் ஏமாற்றப்பட்டிருக் கலாம். பலர் புகார் கொடுக்காமல் இருக்கலாம். போலீஸார் இந்த விவகாரத்தை விசாரிக்காமல் அலட்சியமாக இருப்பதால், மேலும் பலர் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு களை உருவாக்கும். குறைந்தபட்சம் மாவட்ட காவல் துறை சார்பில் இதுபற்றி விழிப்புஉணர்வாவது ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க, தேனி மாவட்ட எஸ்.பி-யான சாய்சரண் தேஜஸ்வியிடம் பேசி னோம். “புகார் கொடுத்த இளைஞரை, என்னை நேரில் சந்திக்கச் சொல்லுங்கள். விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

அந்த இளைஞர்களை எஸ்.பியைச் சந்திக்கச் சொல்லியிருக்கிறோம். நடவடிக்கை எடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism