Published:Updated:

“சிங்கார வேலனே தேவா...” - கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்

கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்
பிரீமியம் ஸ்டோரி
கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்

வரலாறு

“சிங்கார வேலனே தேவா...” - கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்

வரலாறு

Published:Updated:
கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்
பிரீமியம் ஸ்டோரி
கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்

ர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து பத்திரிகையாளர், கவிஞர், பாடலாசிரியர், வசனகர்த்தா எனப் பல தளங்களிலும் தன் தமிழ்ப் புலமையால் முத்திரை பதித்ததோடு மட்டுமல்லாமல், தமிழக சட்ட மேலவை உறுப்பினர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் ஆகிய பொறுப்புகளையும் வகித்து தமிழ்ப் பணியாற்றிய கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியத்துக்கு இது நூற்றாண்டு.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு அருகிலுள்ள வேளுக்குடி என்ற ஊரில், மாரிமுத்து-கோவிந்தம்மாள் தம்பதிக்கு 1920-ம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் பாலசுப்பிர மணியம். தந்தையின் பூர்வீகம் குறிச்சி எனும் சிற்றூர் என்பதால், `குறிச்சி மாரிமுத்து பாலசுப்பிரமணியம்’ என்பதைச் சுருக்கி கு.மா.பா என்றழைக்கப்பட்டார். 1975-ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.

“சிங்கார வேலனே தேவா...” - கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்

கு.மா.பாலசுப்பிரமணியம் என்றால் யார் என்றே இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. ஆனால், அவர் எழுதிய பாடல்களைச் சொன்னால், ‘அட இந்தப் பாட்டை எழுதியவரா?’ என்று புருவம் உயர்த்துவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அளவுக்கு அருடைய பாடல்கள் என்றென்றும் நிலைத்துநிற்பவை.

“சிங்கார வேலனே தேவா...” - கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்

`அமுதைப் பொழியும் நிலவே... (தங்கமலை ரகசியம்), `ஆடாத மனமும் ஆடுதே.... (களத்தூர் கண்ணம்மா), `இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே... (வீரபாண்டிய கட்டபொம்மன்), `உன்னைக் கண் தேடுதே...’ (கணவனே கண்கண்ட தெய்வம்), `கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே...’ (அன்னையின் ஆணை), `குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே...’ ( மரகதம்), `சிங்கார வேலனே தேவா... (கொஞ்சும் சலங்கை), `சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி...’ (சபாஷ் மீனா), `மலரும் வான்நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே... (மகாகவி காளிதாஸ்), `மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு...’ (அம்பிகாபதி), `யாரடி நீ மோகினி கூறடி...’ (உத்தம புத்திரன்)... இப்படி காலத்தால் அழியாத பல பாடல்களைக் கொடுத்தவர்தான் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரை நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்று `சூப்பர் சிங்கர்’ மேடை வரை ஒலிக்கும் `சிங்கார வேலனே தேவா...’ பாடல் கு.மா.பா எழுதியதுதான். 1962-ல் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஞானசம்பந்தரின் தேவாரப் பாடலான - `மந்திரம் ஆவது நீறு... வானவர் மேலது நீறு’ என்ற வரிகளைத்தான் பாடலாக்க நினைத்திருக்கிறார். அந்த வரிகளுக்குத்தான் காருக்குறிச்சி அருணாசலம் நாதஸ்வரம் வாசித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அந்த நாதத்துக்குதான் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் `சிங்கார வேலனே தேவா...’ என்று புதிதாக வரிகளை எழுதி, அவற்றை ஜானகி பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் தொடக்கத்தில் வரும் ``சாந்தா! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்? உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு, ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா... பாடு சாந்தா, பாடு!’’ என்று, இவர் எழுதிய வசனமும் மிகவும் பிரபலமானது.

கவிஞராக மட்டுமல்ல, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, உதவி இயக்குநராகவும் பல படங்களில் பெரும் பங்காற்றியிருக்கிறார் கு.மா.பாலசுப்பிரமணியம்.

“சிங்கார வேலனே தேவா...” - கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்

1951-ல் அறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதிய `ஓர் இரவு’ படத்தில் அண்ணாவுக்கு வசனப் பிரதி யெடுத்து துணைபுரிந்ததுடன், அந்தப் படத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். அதில்தான் இவர் முதல் பாடலை எழுதினார். `மகாகவி காளிதாஸ்’, `கொஞ்சும் சலங்கை’ போன்ற புகழ்பெற்ற படங்களுக்குப் பாடல்களுடன் திரைக்கதை, வசனமும் எழுதியிருக்கிறார். ‘வேலைக்காரன்’ படத்தின் கதை மற்றும் பாடல்கள் இவர் எழுதியதுதான். ஏவி.எம் தமிழிலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து தமிழுக்கும் மொழிமாற்றம் செய்யும் திரைப்படங்களின் கதை இலாகாவில் பம்பாயில் பணியாற்றியதுடன், ‘சாம்ராட்’, ‘நாஸ்திக்’ ஆகிய திரைப்படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதியிருக்கிறார்.

திரை அடையாளங்கள் மட்டுமல்ல... இவருடைய பத்திரிகைப் பணியும் அபாரமானது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1942-ல் மதுரையில் சி.பா.ஆதித்தனாரின் `தமிழன்’ வார இதழிலும், கோயம்புத்தூரில் `வீரசக்தி’ மாத இதழிலும் பணியாற்றி யிருக்கிறார். 1945-ல் கொழும்பில் `வீரகேசரி’ நாளிதழிலும், தமிழரசு கழக ஏடுகளான `தமிழ் முரசு’, `செங்கோல்’ ஆகிய பத்திரிகைகளிலும் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பத்திரிகைகளில் எழுதியதுடன் தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல் தமிழக எல்லைப் போராட்டங்கள், தலைநகர் போராட்டம், தமிழ்நாடு பெயர்மாற்றப் போராட்டம், மாநில சுயாட்சிப் போராட்டம் ஆகிய போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்ற மொழிப்போர் தியாகியாகவும் திகழ்ந்த இவர், 1994-ம் ஆண்டு மாரடைப்பால் காலமானார்.

‘மரகதம்’ படத்தில் சந்திரபாபு பாடிய ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே...’ பாடல்தான் சந்திரபாபுவை இன்றைய தலைமுறைக்கு அடையாளம் காட்டு கிறது. இப்படி, பலருக்கும் தன் வரிகள் மூலம் தனித்துவமான அடையாளம் தந்த கு.மா.பாலசுப்பிரமணியத்தை நினைவுகூர வேண்டிய நேரம் இது!