Published:Updated:

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு! - மத்திய அரசு முடிவு

இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு

ஸ்டாலின், ``50 சதவிகித இடஒதுக்கீட்டை அடையும்வரை தி.மு.க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும். சமூகநீதியைக் காக்கும் உறுதியான போராட்டத்தை தி.மு.க-வும், இந்த அரசும் தொடர்ந்து நடத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 2020 -21 கல்வியாண்டில், அதாவது நடப்பு கல்வியாண்டிலேயே மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய கோட்டாவில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்படவிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த ஆண்டு முதல் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படவிருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

`மருத்துவப் படிப்புகளில் ஒன்றிய அரசு இட ஒதுக்கீடு அறிவித்தது ஆறுதல் தருவதாக இருக்கிறது’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `ஓபிசி பிரிவுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் ஒன்றிய அரசின் முடிவு தமிழகத்துக்குக் கிடைத்த வெற்றி. சமூகநீதி வரலாற்றில் முக்கிய நிகழ்வாக உள்ளது. 2021-22-லிருந்து மொத்தம் 4,000 ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்கும். 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு என்பதே தி.மு.க-வின் கோரிக்கை” என்றவர், ``50 சதவிகித இட ஒதுக்கீட்டை அடையும்வரை தி.மு.க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும். சமூகநீதியைக் காக்கும் உறுதியான போராட்டத்தை தி.மு.க-வும், இந்த அரசும் தொடர்ந்து நடத்தும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

வன்னியர் இடஒதுக்கீடு... வழக்குகளைக் காட்டி வஞ்சிக்கிறதா தி.மு.க அரசு?
அடுத்த கட்டுரைக்கு