Published:Updated:

மீத்தேன், எட்டுவழிச்சாலை, அணுக்கழிவு மையம்... மீண்டும் கிளம்பும் பூகம்பங்கள்!

மீண்டும் கிளம்பும் பூகம்பங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் கிளம்பும் பூகம்பங்கள்!

மக்களுக்கு எதிரான திட்டங்கள் எதையும் தமிழகத்துக்குள் கொண்டுவரக் கூடாது என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார்.

மீத்தேன், எட்டுவழிச்சாலை, அணுக்கழிவு மையம்... மீண்டும் கிளம்பும் பூகம்பங்கள்!

மக்களுக்கு எதிரான திட்டங்கள் எதையும் தமிழகத்துக்குள் கொண்டுவரக் கூடாது என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார்.

Published:Updated:
மீண்டும் கிளம்பும் பூகம்பங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் கிளம்பும் பூகம்பங்கள்!

சுற்றுச்சூழல் காரணங்களால் தேர்தலுக்கு முன்பு தி.மு.க-வால் மிகக் கடுமையாக எதிர்க்கப்பட்ட திட்டங்கள், மீத்தேன், எட்டுவழிச் சாலை, அணுக்கழிவு மையம். இந்த மூன்று திட்டங்களும் மீண்டும் வேகமெடுக்கும் அறிகுறிகளை மத்திய அரசு வெளிக்காட்டியிருக்கிறது.

சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கனிமொழி உள்ளிட்ட தமிழ்நாட்டு எம்.பி-க்களின் கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், “காவிரி டெல்டாவில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எந்த ஹைட்ரோகார்பன் திட்டமும் கைவிடப்படவில்லை. சேலம் - சென்னை எட்டுவழிச் சாலையை எந்தெந்தப் பாதையில் அமைப்பது என்று தமிழ்நாடு அரசின் கருத்து வந்ததும் பணிகள் தொடங்கும். கூடங்குளம் அணு உலையிலிருந்து வெளியேறும் கழிவுகளை ரஷ்யாவுக்கு அனுப்புவது குறித்து மத்திய அரசு எந்தப் பரிசீலனையும் மேற்கொள்ள வில்லை” என்று கூறியிருக்கிறார்கள் மத்திய அமைச்சர்கள்.

மீத்தேன், எட்டுவழிச்சாலை, அணுக்கழிவு மையம்... மீண்டும் கிளம்பும் பூகம்பங்கள்!
மீத்தேன், எட்டுவழிச்சாலை, அணுக்கழிவு மையம்... மீண்டும் கிளம்பும் பூகம்பங்கள்!

அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் மத்திய அமைச்சர்களின் பதில்கள் குறித்து, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனிடம் பேசினோம். ``தமிழ்நாடு அரசு டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, மீத்தேன் - ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எண்ணெய் எரிவாயு எடுக்கும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்திருக்கிறது. அப்படியிருந்தும், மத்திய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டங்களை செயல்படுத்துவோம் என விடாப்பிடியாக இருக்கிறது. பா.ஜ.க ஆளும் குஜராத்தில், ‘அணு உலை திட்டம் வேண்டாம்’ என்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில், ‘கூடங்குளம் அணுக்கழிவை இங்கேயே புதைக்காதீர்கள்... ரஷ்யாவுக்கு அனுப்புங்கள்’ என்று சொன்னால், ‘அனுப்ப முடியாது’ என்கிறார்கள். சேலம் - சென்னை எட்டுவழிச் சாலையிலும் மக்களுக்கு எதிரான போக்கைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியைச் சந்தித்து வலியுறுத்தியும் திட்டத்தைக் கைவிடாதது ஏமாற்ற மளிக்கிறது. இது மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயல். மத்திய அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும் அதற்கான அனுமதியை தமிழ்நாடு அரசுதான் கொடுக்க வேண்டும். ‘நாங்கள் வேண்டாம் என்கிற திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மக்களுக்கு எது சரியோ அதைத்தான் செய்வோம்’ என்று தமிழ்நாடு அரசு ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்” என்றார் அழுத்தமான குரலில்.

சுந்தர்ராஜன்
சுந்தர்ராஜன்
மெய்யநாதன்
மெய்யநாதன்

இது குறித்து, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதனிடம் பேசியபோது, ``ஹைட்ரோகார்பன், மீத்தேன், எட்டுவழிச் சாலை போன்ற மக்கள் எதிர்க்கும்... மக்களுக்கு எதிரான திட்டங்கள் எதையும் தமிழகத்துக்குள் கொண்டுவரக் கூடாது என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார். அவர் ஆட்சியில் இது போன்ற திட்டங்களுக்கெல்லாம் அனுமதி வழங்க மாட்டோம்” என்றார் உறுதியான குரலில்.

பார்க்கலாம்!