Published:Updated:

முதல்வருக்கு எதிராகத் திரளும் முக்குலத்தோர் அமைப்புகள்!

ஸ்ரீதர் வாண்டையார், கதிரவன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீதர் வாண்டையார், கதிரவன்

அண்ணா பெயர் இருக்கிறது... காமராஜர் பெயர் இருக்கிறது... தேவர் பெயர் வைக்கக் கூடாதா?

முதல்வருக்கு எதிராகத் திரளும் முக்குலத்தோர் அமைப்புகள்!

அண்ணா பெயர் இருக்கிறது... காமராஜர் பெயர் இருக்கிறது... தேவர் பெயர் வைக்கக் கூடாதா?

Published:Updated:
ஸ்ரீதர் வாண்டையார், கதிரவன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீதர் வாண்டையார், கதிரவன்

தேவர் பிறந்தநாள் பரபர

ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி அன்று தேவர் குருபூஜை விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். முத்துராமலிங்கத் தேவர் பிறந்த பசும்பொன் கிராமத்தில், அரசாங்கத்தின் சார்பிலேயே இந்த நிகழ்ச்சி கொண்டாடப் படுகிறது. இதில் முதலமைச்சர், அமைச்சர்கள், அனைத்து கட்சி அரசியல்வாதிகள்... ஆண்டுதோறும் பங்கேற்பதும் வழக்கம். அந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பலரும் இந்த ஆண்டு நிகழ்வில் பங்கேற்கும் சூழலில், அதே அக்டோபர் 30 அன்று மதுரையில் தமிழக அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்த தீவிரமாகிவிட்டன முக்குலத்தோர் அமைப்புகள்.

மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையம்

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட சில அமைப்புகள் ஒருங்கிணைந்து, ‘தேவரின் தேசபக்தி முன்னணி’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளன. இந்த அமைப்பின் சார்பில்தான் இந்தப் போராட்டம். இதுகுறித்து மூவேந்தர் முன்னேற்றக் கழக நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையாரி டம் பேசினோம்.

‘‘மதுரை விமானநிலையத்துக்கு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். அதற்காக ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, ரயில் மறியல் எனப் பலவிதமான போராட்டங்களை நடத்தி விட்டோம். எங்கள் கோரிக்கைக்கு அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.

விமானநிலையத்துக்கு தேவரின் பெயரைச் சூட்ட மத்திய அரசு முடிவுசெய்தாலும், தடையில்லாச் சான்று வழங்க மாநில அரசு மறுக்கிறது என்பதை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிந்துகொண்டுள்ளோம். ‘தலைவர்களின் பெயரைச் சூட்டுவதில் பிரச்னை உள்ளது’ என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. சென்னை விமானநிலையங்களுக்கு அண்ணா மற்றும் காமராஜர் பெயர் சூட்டியிருக்கும்போது, மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டுதில் என்ன பிரச்னை? அதனால்தான், போராட்டம். அதேசமயம், அன்றைய தினம் பசும்பொன்னில் நிகழ்ச்சிகள் அனைத்தும் வழக்கம்போல் நடக்கும்’’ என்ற ஸ்ரீதர் வாண்டையார்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முத்துராமலிங்கத் தேவர்
முத்துராமலிங்கத் தேவர்

‘‘பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் தேவர். சுதந்திரம் அடைந்த பிறகு, எம்.பி., எம்.எல்.ஏ பதவிகளையெல்லாம் வகித்தவர். நாட்டு விடுதலைக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் சிறையில் இருந்தவர். ஃபார்வர்டு பிளாக் கட்சியில் நேதாஜியுடன் இணைந்து செயலாற்றியவர். அப்படிப்பட்டவர் வாழ்ந்த மதுரையில் உள்ள விமானநிலையத்துக்குத்தான் அவர் பெயரைச் சூட்டச் சொல்கிறோம். நாக்பூரில் அம்பேத்கர் பெயரிலும், மும்பையில் சத்ரபதி சிவாஜி பெயரிலும், போர்ட் பிளேரில் சாவர்க்கரின் பெயரிலும் விமானநிலையங்கள் உள்ளன. அப்படியிருக்கும்போது, எங்கள் கோரிக்கை மிகவும் நியாயமானதே. இதை நிறைவேற்றாவிட்டால், பசும்பொன் மண்ணில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் நான் தயார்’’ என்றார் உறுதியாக.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் பேசும்போது, ‘‘எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் செயல்பட்டுவரும் தற்போதைய அரசுதான் தேவர் பெயர் சூட்டுவதற்குத் தடையாக இருக்கிறது. தேவருக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைத்து கௌரவித்துள்ளது மத்திய அரசு. தமிழக சட்டமன்றத்திலும் படம் வைக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, மத்திய அரசு ஒப்புதல் அளித்தும் தடையில்லாச் சான்று வழங்காததற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. ‘பள்ளிப்பாடத்தில் தேவரின் உண்மை வரலாற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்’ என்பது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசு, இந்தக் கோரிக்கையை மட்டும் ஏனோ ஏற்கவில்லை! அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து ‘இந்தக் கோரிக்கையை உடனே நிறைவேற்றுங்கள். இல்லையென்றால், சமுதாய மக்களிடம் உங்களுக்கு கெட்டபெயர் ஏற்படும்’ எனச் சொல்லியிருக்கிறோம்’’ என்றார்.

ஸ்ரீதர் வாண்டையார், கதிரவன்
ஸ்ரீதர் வாண்டையார், கதிரவன்

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலிருந்தே, ‘தேவரின் பெயரைச் சூட்டவேண்டும்’ என்ற கோரிக்கை இருந்துவருகிறது. முக்குலத்தோர் இன மக்களின் ஆதரவைப் பெறுவதில் தி.மு.க-வைவிட எப்போதுமே முன்னேதான் நிற்கும் அ.தி.மு.க. ஆனாலும்கூட தேவர் பெயரைச் சூட்டும் விஷயத்தில் ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்காமல்தான் இருந்தார். காரணம், தென்மாவட்டங்களில் அதிக அளவில் வசிக்கும் பட்டியலின மக்களின் வாக்குகள்தான். தங்களின் பிரதிநிதியான இமானுவேல் சேகரனின் பெயரை இந்த விமானநிலையத்துக்குச் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையை அவர்களும் தொடர்ந்து முன்வைத்துவருகின்றனர். எல்லாவற்றையும் மீறி தேவர் பெயரைச் சூட்டினால், தேன்கூட்டில் கல்லெறிந்த கதையாகிவிடும் என்றுதான் அவர் அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தார். ‘அம்மா வழியில் ஆட்சி நடத்தும்’ எடப்பாடியும் அதையேதான் செய்துகொண்டிருக்கிறார். இத்தகைய சூழலில் இந்தப் போராட்டம் அவரை எந்த அளவுக்கு அசைக்கும் என்பது, அக்டோபர் 30-ம் தேதி தெரிந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism