Published:Updated:

2K kids: கொஞ்சம் ஸ்நாக்ஸ்... ஒரு மெசேஜ்!

ஆவடி
பிரீமியம் ஸ்டோரி
ஆவடி

கலைமதி.வே

2K kids: கொஞ்சம் ஸ்நாக்ஸ்... ஒரு மெசேஜ்!

கலைமதி.வே

Published:Updated:
ஆவடி
பிரீமியம் ஸ்டோரி
ஆவடி

எத்தனையோ உணவகங்களுக்குப் போனாலும், சில உணவகங்கள் மட்டும் ‘இது சூப்பரு’னு மனசுல நிக்கும். அதுக்கு உணவு மட்டுமில்ல, அதைத் தாண்டி அந்த இடத்தின் ரம்மியம், அங்க நமக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்னு மற்ற காரணங்களும் இருக்கலாம். அப்படித்தான் எனக்கு அமைந்தது ஆவடி, பேருந்து நிலையம் அருகில் இருக்கும் `எம். எம். ஃபுட்ஸ்' (MM Foods). டேஸ்ட், ஒரு குடும்பத்தின் உழைப்பா அந்த ஹோட்டல் எழுந்து நிக்கும் கதை, கிளம்பும்போது அதன் உரிமையாளர் சொன்ன மெசேஜ்னு... எல்லாமே சூப்பர்!

2K kids: கொஞ்சம் ஸ்நாக்ஸ்... ஒரு மெசேஜ்!

அன்னிக்கு கல்லூரி முடிச்சுட்டு நண்பர்களோட ஆவடி பேருந்து நிலையத்துக்குப் போயிட்டிருந்தப்போ, அப்படி ஒரு வாசனை வந்து மூக்குல முட்டுச்சு. ‘எம்.எம். ஃபுட்ஸ்’னு போர்டை பார்த்ததும், ‘எனக்குப் பசிக்குது, உள்ளே போ’னு வயிறு அடம்பிடிக்க ஆரம்பிச்சது. சின்னக் கடைதான். ஆனா, பெரிய உபசரிப்பு. கவனிச்சுக் கேட்டப்போதான் தெரிஞ்சது, குடும்பத்தோடு, குடும்பத்துக்காக உழைக்கிறவங்களோட ஹோட்டல் அதுனு. ஆமா... அப்பா, அம்மா, பொண்ணு, பையன்னு எல்லாருமா சேர்ந்து அங்க தங்களோட உழைப்பைக் கொடுத்துட்டு இருந்தாங்க.

மெனு கார்டு பார்த்தோம். வெஜ் சாண்ட்விச், சீஸ் சாண்ட்விச், பனீர் சாண்ட்விச், ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், ஸ்மைலீஸ், வெஜ் சீஸ் பர்கர், வெஜ் ரோல், பாயில்டு பட்டர் வெஜ் ரோல், மஷ்ரூம் ரோல், வெஜ் - பனீர் கார்ன், சிக்கன் பீட்ஸானு வெரைட்டிகள் நிறைய. ஐஸ்க்ரீம் வகைகளும் உண்டு. நானும் நண்பர்களும் சாப்பிட்டதுல வெஜ் சாண்ட்விச், சிக்கன் சூப், வெஜ் சூப், பீட்ஸா இதுக்கெல்லாம் 4.5 ஸ்டார்ஸ். சுவை, தரம், விலைனு எல்லாமே நிறைவு.

2K kids: கொஞ்சம் ஸ்நாக்ஸ்... ஒரு மெசேஜ்!

ஹோட்டல் உரிமையாளர் மோகன்ராஜ் அண்ணாகிட்ட பேசினப்போ, ‘`உணவு தயாரிப்புப் பொருள்களில் செயற்கை பொருள்கள் தவிர்த்து, எல்லாத் தையும் நாங்களே தயாரிக்கிறோம்’’னு சொன்னார். அவர் அடுத்து சொன்ன விஷயம்தான், ‘நோட் பண்ணுங்க மக்களே’ மெசேஜ்...

‘`ஒரு சின்ன உணவுக் கடையில தொழிலாளியா என் வாழ்க்கை ஆரம்பிச்சது. 35 வருஷமா தொழிலாளியாவே இருந்துட்டேன். எண்ணிக்கையில அடங்காத அவமானங்கள், வேதனைகளை அனுபவிச்சேன். அதைவிட பெரிய வலியை, 35 வருஷமா யாரோ ஒருத்தரோட முன்னேற்றத்துக்காக உழைச்சு நம்ம வாழ்க்கையைக் கழிச்சிருக்கோமேனு புரிஞ்சுக்கிட்டப்போ உணர்ந்தேன். அப்புறம்தான், ‘முடிஞ்சதை ஒருமுறை முயற்சி பண்ணிப் பார்த்துடுவோம்’னு முதலாளி அவதாரம் எடுத்தேன். குடும்பம் உறுதுணையா நின்னாங்க. தொழில் நல்லா போயிட்டிருக்கு. இந்த முடிவை ஏன் நாம இத்தனை வருஷமா எடுக்கலைனு தோணாத நாள் இல்லை.

2K kids: கொஞ்சம் ஸ்நாக்ஸ்... ஒரு மெசேஜ்!

அதனால பசங்களா... உங்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன். காலம் எப்பவும் திரும்பி வராது. அதை சரியா பயன்படுத்திக்கணும். மேற் படிப்பு, வேலை, தொழில்னு வாழ்க்கையில முன்னேற்றத் துக்கான முடிவுகளை எப்பவும் தள்ளிப் போடாதீங்க!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism