Published:Updated:

விரட்டியடிக்கப்படும் ஏழைக் குழந்தைகள்

குழந்தைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைகள்

டெண்டர் எடுத்தவர்கள் திண்டாட்டம்! - ஆக்‌ஷன் எடுக்குமா சென்னை மாநகராட்சி?

“சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை, சில அதிகார சக்திகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. ஏழைக் குழந்தைகளும், அரசுப் பள்ளி மாணவர்களும் அந்த விளையாட்டு மைதானங்களுக்குள் நுழையவே முடியவில்லை” என்று குமுறுகின்றனர் மைதானங்களை ஒப்பந்தத்துக்கு எடுத்த ஒப்பந்ததாரர்கள்.

டென்னிஸ் மைதானம்
டென்னிஸ் மைதானம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 16 ஸ்கேட்டிங் மைதானங்கள், 18 டென்னிஸ் மைதானங்கள், 11 பேட்மிண்டன் மைதானங்கள் இருக்கின்றன. இவை, இதற்கு முன்பு அந்தந்தப் பகுதி கவுன்சிலர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. விளையாடுவதற்கான கட்டணம், பராமரிப்பு போன்றவற்றையும் அவர்களே நிர்வகித்தனர். கிட்டத்தட்ட ரெளடிகள் மாமூல் வசூலிக்கும் நடைமுறை அது. இதனால், விளையாட்டு மைதானங்களிலிருந்து மாநகராட்சிக்கு எந்த வருவாயும் செல்லவில்லை. எனவே, மைதானங்களை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்குக் கொடுக்க முடிவுசெய்தது சென்னை மாநகராட்சி. அதன்படி மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், அந்தந்தப் பகுதி ஏழைக் குழந்தைகளுக்கும் இலவச விளையாட்டுப் பயிற்சியும் ஊட்டச்சத்து உணவும் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. பிற நபர்களுக்கு, விளையாட்டுகளைப் பொறுத்து குறைந்தபட்சக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. அந்த வகையில், கணிசமான மைதானங் களை ‘முல்லை மலர்’ என்ற நிறுவனம் ஒப்பந்தத்துக்கு எடுத்தது. இங்கேதான் வில்லங்கம் தொடங்கியது என்கிறார்கள் ஒப்பந்ததாரர் தரப்பினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குழந்தைகள்
குழந்தைகள்

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சிக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செலுத்தி, இந்த ஒப்பந்தத்தை எடுத்திருக்கிறோம். இதன்மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு சுமார் ஐந்து கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். ஆனால், ஒப்பந்தம் எடுத்தது முதல் கவுன்சிலர்கள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி வட்டச் செயலாளர்கள் வரை உள்ளூர் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நீதித்துறை, காவல்துறை பிரமுகர்கள், ரெளடிகள் என இவர்களின் தலையீடு தாங்க முடியவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இவர்கள் அந்தந்தப் பகுதி மைதானங்களை ஆக்கிரமித்துவைத்துக்கொண்டு எங்களை மிரட்டுகி றார்கள். குறிப்பாக எழும்பூர், போரூர், பெசன்ட் நகர், அம்பத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மைதானங்களில் உள்ளே செல்லவே முடியவில்லை. அங்கு விளையாட வரும் குழந்தைகளிடம் ஆயிரக் கணக்கில் மாதக் கட்டணம் வசூலிக்கிறார்கள். மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் உட்பட ஏழைக் குழந்தைகள் மைதானத்துக்குள் நுழைந்தாலே விரட்டியடிக்கிறார்கள்” என்றார்கள் அச்சத்துடன்.

பேட்மிண்டன் மைதானம்
பேட்மிண்டன் மைதானம்

இதுகுறித்து, முல்லை மலர் நிறுவனத்தின் நிர்வாகி ராஜேஷிடம் பேசினோம். ‘‘மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டத்தான் மைதானங்களை தனியாருக்கு டெண்டர் விட்டது சென்னை மாநகராட்சி நிர்வாகம். ஆனால், முக்கியமான சில இடங்களில் மைதானங்களை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிய வில்லை. ஒரு மைதானத்தை, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இன்னொரு மைதானத்தை காவல்துறை பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். பயிற்சிபெற மைதானத் துக்கு வருபவர்களிடம் அவர்கள் மாதம்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாயை கட்டணமாக வசூலிக் கின்றனர். யாரையும் இலவசமாக விளையாட அனுமதிப்பதில்லை. இது ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிரானது. பணம் கட்டி ஒப்பந்தம் எடுத்த எங்களால், இந்த அட்டூழியங்களை வெறுமனே வேடிக்கைதான் பார்க்க முடிகிறது’’ என்றார் வேதனையுடன்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசினோம். ‘‘பெயர் வேண்டாம்’’ என்று குறிப்பிட்ட அவர்கள், “நாங்கள் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப் படுத்த நடவடிக்கை எடுத்தால், அரசியல் பிரமுகர்கள் எங்களையே மிரட்டுகிறார்கள். ஒவ்வோர் இடத்திலும் ஏதாவது ஓர் அரசியல் கட்சிப் பிரமுகர் ஆதிக்கம் செலுத்துகிறார். இருப்பினும் விரைவில் இந்தப் பிரச்னைகளை சரிசெய்துவிடுவோம்” என்றார்கள்.

விளையாட்டு மைதானத்தில் அரசியல் விளையாட்டு வேண்டாமே!