Published:Updated:

“ஒருத்தரோட வயித்துப்பசியைவிடவா காசு முக்கியம்?” - தள்ளுவண்டிக்கடை வள்ளி அக்கா

வள்ளி அக்கா
பிரீமியம் ஸ்டோரி
வள்ளி அக்கா

சென்னை, காலடிப்பேட்டை மெட்ரோ ஸ்டேஷன் அருகில் இருக்கிறது வள்ளி அக்காவின் தள்ளுவண்டிக்கடை. அசைவ உணவுக்கு அக்காவின் கடை அந்த ஏரியாவில் பிரபலம்

“ஒருத்தரோட வயித்துப்பசியைவிடவா காசு முக்கியம்?” - தள்ளுவண்டிக்கடை வள்ளி அக்கா

சென்னை, காலடிப்பேட்டை மெட்ரோ ஸ்டேஷன் அருகில் இருக்கிறது வள்ளி அக்காவின் தள்ளுவண்டிக்கடை. அசைவ உணவுக்கு அக்காவின் கடை அந்த ஏரியாவில் பிரபலம்

Published:Updated:
வள்ளி அக்கா
பிரீமியம் ஸ்டோரி
வள்ளி அக்கா

சென்னை, காலடிப்பேட்டை மெட்ரோ ஸ்டேஷன் அருகில் இருக்கிறது வள்ளி அக்காவின் தள்ளுவண்டிக்கடை. அசைவ உணவுக்கு அக்காவின் கடை அந்த ஏரியாவில் பிரபலம். கடை அருகில் தென்னை ஓலையை விரித்துப்போட்டு நான்கு பேர் மீன்களை சுத்தம் செய்வதும், வெங்காயம் உரிப்பதுமாக இருக்க, சமையல் செய்துகொண்டே பேச ஆரம்பித்தார் வள்ளி அக்கா...

“ எங்க அம்மா காலத்துலேருந்து 40 வருஷங்களா சாப்பாட்டுக்கடை நடத்துறோம். ஆரம்பத்துல வீட்ல சமைச்சு பொட்டலங்களா கொடுத்துட்டு இருந்தோம். அம்மா இறந்ததுக்கு அப்புறம் நான் தள்ளு வண்டிக்கடை நடத்துறேன். நான் பள்ளிக்கூடத்துக்கே போனதுல்ல. 18 வயசுல கல்யாணம் பண்ணி வெச்சாங்க. மூணு பிள்ளைங்க பொறந்ததுக்கு அப்புறம் வீட்டுக்காரர் என்னை விட்டுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ‘உன்னைப் பிடிக்கல’னு ஒத்த வார்த்தையைச் சொல்லி விரட்டிவிட்டாரு. அப்போ எனக்கு 23 வயசு. அந்த வயசுல என்ன பண்ணணும், யார்கிட்ட பிரச்னையைச் சொல்லணும்னு தெரியல. போலீஸ் ஸ்டேஷன் போகவும் பயம். இதுதான் வாழ்க்கைனு பிள்ளைகளுக் காக வாழ ஆரம்பிச்சிட்டேன். அம்மாகூட சேர்ந்து, சாப்பாட்டு பொட்டலங்கள் போட ஆரம்பிச்சேன். அதுல கிடைச்ச வருமானத்துல தான் மூணு குழந்தைகளைப் பார்த்துக்கிட் டேன்'' - ஆரம்பம் சொல்லும் வள்ளி அக்கா, தள்ளுவண்டிக்கடை தொடங்கிய கதையைத் தொடர்ந்தார்.

“ஒருத்தரோட வயித்துப்பசியைவிடவா காசு முக்கியம்?” - தள்ளுவண்டிக்கடை வள்ளி அக்கா

“அம்மாவும் தவறிட்டாங்க. கிடைச்ச வருமானம் பிள்ளைங்க படிப்புக்கும் நாலு பேரோட சாப்பாட்டுக்குமே பத்தல. அதனால தள்ளுவண்டிக்கடை போடலாம்னு முடிவு பண்ணேன். கடன் வாங்கி பழைய தள்ளு வண்டி வாங்கி, பெயின்ட் அடிச்சு மதிய சாப்பாட்டுக்கடை ஆரம்பிச்சேன். எங்க ஏரியாவுல அசைவ சாப்பாட்டுக்கு நல்ல வரவேற்பு இருக்கவே, மீன், முட்டை, சிக்கன்னு சமைக்க ஆரம்பிச்சேன்.

காலையில எந்திரிச்சு காசிமேடு போயி மீனும், சமையலுக்குத் தேவையான பொருள் களும் வாங்கிட்டுவந்து 11 மணிக்கு சமைக்க ஆரம்பிப்பேன். ஒரு மணிக்கு சாப்பாடு ரெடி ஆயிரும். தனி ஆளா, கடையைப் பாத்துக்கிறது சிரமமா இருந்தாலும், பிள்ளைகளுக்காக உழைக்கத் துணிஞ்சேன். பொண்ணு 12-வது வரை படிச்சுது. பசங்க பத்தாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டாங்க. மூணு பிள்ளைங்களுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சேன். மூணாவது பையனுக்குக் கல்யாணம் பண்ணப்போ, கல்யாண வாழ்க்கையில ஏற்பட்ட பிரச்னையில அவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுச்சு. அதுக்கான வைத்திய செலவையும் இந்த வருமானத்துலதான் பார்த்துக்குறேன்’’ என்பவர், கஷ்ட ஜீவனத்திலும், பணத்தின் மீது ஆசையற்ற வராக இருப்பது ஆச்சர்யம்.

‘`கஷ்டப்படற ஜனங்களுக்காக முழு சாப்பாடு 40 ரூபாய்க்கு கொடுக்குறேன். அதுவும் கொடுக்க முடியலைனு வந்து நிக்கிறவங்ககிட்ட கணக்கு வழக்கெல்லாம் பார்க்க மாட்டேன். ஒருத்தரோட வயித்துப்பசியைவிடவா காசு முக்கியம்?’’ கனிவாகக் கேட்பவர், தன் கடையில் ஐந்து பேரை வேலைக்கு வைத்திருக்கிறார். அவர்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி. மற்ற நால்வரும் ஆதரவற்றவர்கள்.

‘`எனக்குனு எதையும் சேமிச்சு வைக்கல. ஆனா, எனக்கு ஒரு பிரச்னைனா இந்த ஏரியா ஜனங்க வந்து நிப்பாங்க. நல்ல மனுஷங்க பக்கத்துல இருக்கும்போது, பணத்தை வெச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறோம்...” என்கிற வள்ளி அக்கா, அதே வாஞ்சையுடன் வாடிக்கையாளர்களின் பசியாற்றத் தயாராகிறார்.