Published:Updated:

தமிழைக் கொண்டாட ஓரிடம்... சென்னையில் முதல் முயற்சி!

 கத்திப்பாரா சதுக்கம்
பிரீமியம் ஸ்டோரி
கத்திப்பாரா சதுக்கம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இது புதுமையான அனுபவம்.

தமிழைக் கொண்டாட ஓரிடம்... சென்னையில் முதல் முயற்சி!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இது புதுமையான அனுபவம்.

Published:Updated:
 கத்திப்பாரா சதுக்கம்
பிரீமியம் ஸ்டோரி
கத்திப்பாரா சதுக்கம்

அம்மாவின் கைக்குள் கை நுழைத்து, சிலேட்டுக் குச்சியால் நாம் அனைவரும் எழுதிப் பழகிய முதல் எழுத்து ‘அ’வாகத்தான் இருக்கும். இரண்டு வரி நோட்டுகளில் தமிழில் எழுதப் பழகச் சொல்லி, சரியாக எழுதாமல் தமிழாசிரியர் நம் காதைத் திருகிய அனுபவம் பலருக்கும் இருக்கும். அப்படி உங்கள் மனதை மலரும் நினைவுகளுக்குள் ரீவைண்ட் செய்யும் விதமாகவும், தமிழைக் கொண்டாடும் விதமாகவும், ஆள் உயரத்துக்கு உயிர் எழுத்து களின் வடிவமைப்புகள் சென்னை, கத்திப்பாரா சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ளன.

தமிழைக் கொண்டாட ஓரிடம்... சென்னையில் முதல் முயற்சி!

கத்திப்பாரா சதுக்கத்திற்கு ஸ்பாட் விசிட் செய்த அனுபவம் உங்களுடன்...

சென்னை கிண்டி அருகிலுள்ள, கத்திப்பாரா மேம்பாலத்தில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. பரபரப்புக்கு இடையில் பட்டாம் பூச்சிகளும் சிறகடிக்கும் விதமாக, பாலத்துக்குக் கீழ் பசுமையான கத்திப்பாரா சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

‘கத்திப்பாரா சதுக்கம்’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ள நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றோம். வானில் மின்னும் நட்சத்திரங்களை, எந்த மூலையில் இருந்தும் பார்க்கும் அளவுக்கு, மேற்கூரையில்லாத ஓப்பன் ஏரியா. நட்சத்திரங்களுடன் போட்டி போடும் விதமாக மின்னல் கீற்றாய் மின்னி மறைகின்றன விமானங்கள்.

தமிழைக் கொண்டாட ஓரிடம்... சென்னையில் முதல் முயற்சி!
தமிழைக் கொண்டாட ஓரிடம்... சென்னையில் முதல் முயற்சி!

சதுக்கத்துக்குள் நுழைந்ததும் சறுக்கு மரம், ஊஞ்சல் போன்ற வழக்கமான விளையாட்டுப் பகுதிகள் தாண்டி, கட்டணங்கள் செலுத்தி மகிழும் ராட்டினம் போன்று சில விஷயங்களும் இருக்கின்றன. சதுக்கத்தின் ஒரு பிரிவில் நடைப்பயிற்சிக்கான இடம்... மற்றொரு பகுதியில் சிற்றுண்டிக் கடைகளைத் தாண்டி தமிழ் எழுத்துகள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு வந்தோம். அ முதல் ஃ வரையிலான எழுத்துகள் பிரமாண்டமாக நிற்கின்றன. அவற்றின் பக்கத்தில் வண்ண விளக்குகள் மின்னுகின்றன. பொதுவாக பூங்காக்கள், அரசு சார்ந்த பொழுது போக்கு மையங்களில், தமிழைக் கொண்டாடும்விதமாக தமிழை வளர்த்தவர் களுக்கு சிலைகள் அல்லது திருக்குறள் வரிகள் போன்றவற்றைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு பூங்கா வில் உயிர் எழுத்துகளின் வடிவங்கள் நிறுவப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

தமிழைக் கொண்டாட ஓரிடம்... சென்னையில் முதல் முயற்சி!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக் குமே இது புதுமையான அனுபவம். தங்கள் பெயரில் உள்ள தமிழ் எழுத்தின் அருகில் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ளும் அளவுக்கு மக்களின் ஃபேவரைட் ஸ்பாட்டாக மாறியிருக்கிறது இந்த இடம்.

பீச், மால் தவிர்த்து சென்னையில் வித்தியாச அனு பவத்தை உணர நினைப்பவர்கள், கத்திப்பாரா சதுக்கத்தைத் தேர்ந்தெடுக்கலாம். கூடவே தமிழையும் கொண்டாடலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism