Published:Updated:

தாய், மகள், பேத்தி... தி.மு.க பிரமுகரின் தலையைத் தேடும் போலீஸ்!

தேடுதல்
பிரீமியம் ஸ்டோரி
தேடுதல்

சடலத்தை கூறுபோட்டு வீட்டுக்குள் வைத்திருந்ததால், துர்நாற்றம் வீசாமலிருக்க சாம்பிராணி புகையை அடிக்கடி போட்டிருக்கின்றனர்.

தாய், மகள், பேத்தி... தி.மு.க பிரமுகரின் தலையைத் தேடும் போலீஸ்!

சடலத்தை கூறுபோட்டு வீட்டுக்குள் வைத்திருந்ததால், துர்நாற்றம் வீசாமலிருக்க சாம்பிராணி புகையை அடிக்கடி போட்டிருக்கின்றனர்.

Published:Updated:
தேடுதல்
பிரீமியம் ஸ்டோரி
தேடுதல்

15 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகரின் தலையையும், வயிற்று பகுதியையும் தேடிக்கொண்டிருக்கிறது தலைநகர போலீஸ். இந்தக் கொலைக்குப் பின்னே ஒரு பெண்ணின் ஆத்திரம் மறைந்திருக்கிறது.

சக்ரபாணி.
சக்ரபாணி.

சென்னை மணலி செல்வ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சக்ரபாணி. 65 வயதாகும் இவர், திருவொற்றியூர் 7-வது வார்டு தி.மு.க பிரதிநிதியாக இருந்தார். மணலி சுற்றுவட்டாரப் பகுதியில் ஃபைனான்ஸ், ஃபேன்ஸி ஸ்டோர் நடத்திவந்த சக்ரபாணி, மே 10-ம் தேதி திடீரென மாயமானார். அவரது செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அது ராயபுரம் கிரேஸ் கார்டன் 3-வது தெருவைக் காட்டியது. அங்கு வசிக்கும் தமீம் பானு என்பவரின் வீட்டுக் குளியலறையில் 15 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் சக்ரபாணியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக தமீம் பானு, அவரின் சகோதரர் வாசிம் பாஷா, ஆட்டோ டிரைவர் டில்லி பாபு ஆகியோரை ராயபுரம் போலீஸார் கைதுசெய்தனர்.

தமீம் பானுவுக்கு சக்ரபாணி பாலியல் டார்ச்சர் கொடுத்ததால் அவரைக் கொன்றதாகவும், தலையை அடையாறு திரு.வி.க பாலத்தின் கீழ் வீசியதாகவும் வயிற்றுப் பகுதியை காசிமேடு பகுதி கடலில் வீசியதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

தாய், மகள், பேத்தி... தி.மு.க பிரமுகரின் தலையைத் தேடும் போலீஸ்!

இது குறித்து உதவி கமிஷனர் லட்சுமணனிடம் பேசினோம். ``சடலத்தை கூறுபோட்டு வீட்டுக்குள் வைத்திருந்ததால், துர்நாற்றம் வீசாமலிருக்க சாம்பிராணி புகையை அடிக்கடி போட்டிருக்கின்றனர். சக்ரபாணியின் தலை, வயிற்று பகுதியைத் தேடிவருகிறோம். அடையாறு திரு.வி.க பாலம் பகுதி ஆழமாக இருப்பதால் தலையைக் கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலை கிடைக்கவில்லை என்றாலும், டி.என்.ஏ பரிசோதனை மூலம் இறந்தது சக்ரபாணிதான் என்பதை உறுதிப்படுத்த முடியும்” என்றார்.

ராயபுரம் போலீஸார் கூறுகையில், ``சக்ரபாணி இந்த அளவுக்குக் கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் பாலியல் குற்றச்சாட்டு இருக்கிறது. தமீம் பானுவின் அம்மாவிடம் சக்ரபாணிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது. அதற்காக அடிக்கடி தமீம் பானுவின் வீட்டுக்குச் சென்றவர் தமீம் பானு மீது கைவைத்ததுடன், அவரின் மகளோடும் பேசத் தொடங்கியிருக்கிறார். கண்டித்தும் அடங்காததால் கொலையில் முடிந்திருக்கிறது. துண்டு துண்டாக வெட்டி, உடல் பாகங்களை ஆங்காங்கே வீசிவிட்டால் விஷயம் வெளிவராது என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், ஆதாரத்தோடு சிக்கிவிட்டனர்” என்றனர்.

தமீம் பானு, வாசிம் பாஷா, டில்லி பாபு
தமீம் பானு, வாசிம் பாஷா, டில்லி பாபு

“சக்ரபாணி ரொம்ப நல்லவர். பாலியல் புகாரெல்லாம் பொய். கொலைக்கான உண்மைக் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்பது அவருடைய குடும்பத்தினரின் கோரிக்கை!