Published:Updated:

இயல்பைவிட அதிக மழை; வானிலை ஆய்வு மையத்தின் அடுத்த 24 மணி நேர கனமழை அலர்ட்!

சென்னையில் வழக்கத்துக்கு மாறாக 77 சதவிகிதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நவம்பர் 6-ம் தேதி முதல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்ய ஆரம்பித்தது. மேலும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகவே, அதி கனமழை பெய்துவருகிறது. ஐந்து நாள் கனமழையில் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துவருகின்றன. இன்னும் சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போலத் தேங்கி நிற்கிறது. குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் நுழைந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பாலசந்திரன்
இயக்குநர் பாலசந்திரன்

வானிலை குறித்த விவகாரங்களுடன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலசந்திரன், ``சென்னைக்கு 100 கி.மீ கிழக்கே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டிருக்கிறது. இது தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசைகளில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம் பகுதியில் சென்னைக்கு அருகே கடந்து செல்லும். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்" என்றார்.

மேலும், ``கடந்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாகத் தாம்பரத்தில் 23 செ.மீ, சோழவரத்தில் 22 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. அடுத்துவரும் 24 மணி நேரத்துக்குச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்" என்றார்.

சென்னை கன மழை
சென்னை கன மழை

தொடர்ந்து பேசிய அவர், ``வடகடலோர மாவட்டத்திலும், தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இன்றும் (11.11.2021), நாளையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 54 சதவிகிதம் அதிகம் பெய்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை, வழக்கத்தைவிட 77 சதவிகிதம் அதிகம் மழை பெய்துள்ளது.

தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்... அவதிக்குள்ளான நோயாளிகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு