Published:Updated:

‘சென்னைக்கு Bye..!’ எஸ்கேப் ஆன தோழி... 4 பேர் (தற்)கொலை வழக்கில் திருப்பம்!

பிரகாஷ், காயத்ரி
பிரீமியம் ஸ்டோரி
பிரகாஷ், காயத்ரி

‘ப்ளீஸ் ஹெல்ப் மீ’ என்று குறிப்பிட்டிருந்தார். ‘காயத்ரி மற்றும் குடும்பத்தினரின் உயிரிழப்புக்குக் கட்சிதான் காரணம்’ என்று சிலர் சொல்கிறார்கள்.

‘சென்னைக்கு Bye..!’ எஸ்கேப் ஆன தோழி... 4 பேர் (தற்)கொலை வழக்கில் திருப்பம்!

‘ப்ளீஸ் ஹெல்ப் மீ’ என்று குறிப்பிட்டிருந்தார். ‘காயத்ரி மற்றும் குடும்பத்தினரின் உயிரிழப்புக்குக் கட்சிதான் காரணம்’ என்று சிலர் சொல்கிறார்கள்.

Published:Updated:
பிரகாஷ், காயத்ரி
பிரீமியம் ஸ்டோரி
பிரகாஷ், காயத்ரி

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்தவர் ஐடி நிறுவன ஊழியர் பிரகாஷ். இவரும், இவரின் மனைவி காயத்ரி, மகள் நித்யஸ்ரீ, மகன் ஹரி கிருஷ்ணன் ஆகியோரும் கடந்த மே 28-ம் தேதி மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டுக்குள் பிணமாகக் கிடந்தனர். பிரகாஷ், காயத்ரி இருவரின் கையெழுத்துடன் சுவரில் ஒட்டப்பட்டிருந்த கடிதத்தில், ‘எங்களின் இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சங்கர் நகர் போலீஸார், மரம் அறுக்கும் மின்சார ரம்பம், பிரகாஷ், காயத்ரி ஆகியோரின் செல்போன்கள், லேப்டாப்கள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், ஆடம்பரமாக வாழ்வதற்காக அளவுக்குமீறி வாங்கிய கடன்தான் அவர்களின் இந்த விபரீத முடிவுக்குக் காரணம் எனத் தெரியவந்தது. ஆனாலும் இந்த வழக்கில் சில சந்தேகங்கள் வட்டமடிக்கின்றன.

‘சென்னைக்கு Bye..!’ எஸ்கேப் ஆன தோழி... 4 பேர் (தற்)கொலை வழக்கில் திருப்பம்!

இது குறித்து சங்கர் நகர் போலீஸாரிடம் பேசினோம். ``பிரகாஷ், ஐடி நிறுவனம் ஒன்றில் மாதம் 60,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தவர். காயத்ரி, எம்.பி.ஏ படித்துவிட்டு வீட்டருகே நாட்டு மருந்துக் கடை ஒன்றை நடத்திவந்தார். அந்தக் கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியருக்கு மாதம் 12,000 ரூபாய் சம்பளமாகக் கொடுத்திருக்கிறார். பொழிச்சலூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வங்கிக்கடனில் வீடு வாங்கி, அதற்கு இ.எம்.ஐ செலுத்திவந்திருக்கிறார் பிரகாஷ். சில மாதங்களுக்கு முன்பு காயத்ரிக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மாடி ஏற முடியாமல் போயிருக்கிறது. அதனால் அந்த வீட்டை மாதம் 9,000 ரூபாய்க்கு வாடகைக்குக் கொடுத்துவிட்டு, பக்கத்துத் தெருவில் 12,000 ரூபாய் வாடகையில் ஒரு வீட்டில் குடியிருந்தார். குடும்பச் சூழலே இப்படியிருக்க காயத்ரி பா.ஜ.க-வில் சேர்ந்து, சில அரசியல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

‘சென்னைக்கு Bye..!’ எஸ்கேப் ஆன தோழி... 4 பேர் (தற்)கொலை வழக்கில் திருப்பம்!

கடந்த 27-ம் தேதி பிரகாஷ், காயத்ரி தம்பதியருக்கு திருமணநாள். கோயிலுக்குச் சென்ற அவர்கள், திருமணநாளன்று இரவே இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார்கள். 28-ம் தேதி அதிகாலை வரை பிரகாஷின் ‘வாட்ஸ்அப்’ ஆன் லைனில் இருந்திருக்கிறது. அதிகாலை 2:12 மணியளவில் அவருடைய நண்பர் ஒருவருக்கு, ‘நாளை வீட்டுக்கு நேரில் வா...’ என்று பிரகாஷ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அந்த நண்பர், ‘என்ன விசேஷம்?’ என்று கேட்க, ‘வீட்டுக்கு வா!’ என்று மட்டும் பிரகாஷ் பதிலனுப்பியிருக்கிறார். வீட்டின் ஹாலில்தான் இந்த கழுத்தறுப்புச் சம்பவங்களெல்லாம் நடந்திருக்கின்றன. மின்சார ரம்பத்தால் அறுத்ததால் அவரின் கழுத்து துண்டாகியிருக்கிறது. மற்ற மூன்று பேரின் கழுத்துகளும் தொங்கிக்கொண்டிருந்தன. நாங்கள் (போலீஸ்) வீட்டுக்குச் செல்லும் வரை ரம்பம் ஓடிக்கொண்டே இருந்தது. வீட்டின் சுவர் முழுக்க ரத்தம் தெறித்திருந்தது. இந்த ரம்பத்தை 19-ம் தேதியே ஆன்லைனில் வாங்கியிருக்கிறார் பிரகாஷ். கழுத்தை அறுப்பதற்கு முன்பு மருந்து எதுவும் கொடுக்கப்பட்டதா என்றறிய, வீட்டிலிருந்து மூன்று டம்ளர்களைக் கைப்பற்றியிருக்கிறோம். பிரகாஷ் ஓட்கா குடித்தற்கான ஆதாரமும் கிடைத்திருக்கிறது.

தற்கொலை செய்வதற்கு முன்பு பிரகாஷ், தன்னுடைய லேப்டாப்பின் பாஸ்வேர்டை உறவினருக்கு வாட்ஸ்அப்-பில் அனுப்பியிருக்கிறார். இரவில் தன் வளர்ப்பு நாயை வீட்டுக்கு வெளியில் கட்டிப்போட்டு விட்டு, வீட்டின் மெயின் கேட்டைப் பூட்டாமல் இந்தக் கொடூரத்தை நடத்தியிருக்கிறார். இதுதான் எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் குடும்பத்துக்கு கடன் கொடுத்தவர்களின் பட்டியலை எடுத்ததில் 13 ஃபைனான்ஸியர்களின் விவரம் தெரியவந்துள்ளது. அவர்களிடம் விசாரித்துவருகிறோம். இதற்கிடையில் காயத்ரியின் கட்சித் தோழி ஒருவர் தன்னுடைய செல்போனில், ‘சென்னைக்கு bye’ என்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார். அவரும் ஃபைனான்ஸ் கொடுப்பவர் என்பதால் அவர்மீதும் எங்களின் சந்தேகப் பார்வை விழுந்திருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே இந்த வழக்கு அடுத்தகட்டத்துக்கு நகரும்” என்றனர்.

‘சென்னைக்கு Bye..!’ எஸ்கேப் ஆன தோழி... 4 பேர் (தற்)கொலை வழக்கில் திருப்பம்!

காயத்ரியை பா.ஜ.க-வில் சேர்த்த பொழிச்சலூர் மண்டலத் தலைவர் சுரேஷிடம் பேசியபோது, “மிஸ்டு கால் மூலம் பொழிச்சலூரில் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்தோம். இரண்டாண்டுகளுக்கு முன்பு காயத்ரியும், அந்தத் தெருவில் இன்னும் சிலரும் பா.ஜ.க-வில் சேர்ந்தனர். காயத்ரிக்கு மண்டல மகளிரணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் கட்சிப் பணிகளில் அவர் ஆர்வம் காட்டாமல் இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் என்னை போனில் அழைத்தவர், ‘ஜி... எனக்கு அவசரமாக 50,000 ரூபாய் வேண்டும்’ எனக் கேட்டார். ‘என்ன அவசரம்?’ என்று கேட்டதற்கு, ‘கடன் தொல்லை’ என்றார். ‘கடன் கொடுத்தவரின் விவரத்தைச் சொல்லுங்கள், நான் பேசுகிறேன்’ என்றேன். ஆனால், அவர் எந்தத் தகவலையும் சொல்லவில்லை. அதன் பிறகு மே மாதத்தில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில், ‘ப்ளீஸ் ஹெல்ப் மீ’ என்று குறிப்பிட்டிருந்தார். ‘காயத்ரி மற்றும் குடும்பத்தினரின் உயிரிழப்புக்குக் கட்சிதான் காரணம்’ என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. அவரின் மரணத்துக்கான உண்மைக் காரணத்தை போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும்” என்றார்.

கடன் தொல்லைதான் கழுத்தை அறுத்ததா... வேறு காரணமா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியது காவல்துறையின் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism