அலசல்
சமூகம்
Published:Updated:

நிர்வாண செல்ஃபி, ஆபாச மெசேஜ்... சிறுமியிடம் எல்லைமீறிய பாதிரியார்!

ஷெரால்டு மனோகர், ஹெலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷெரால்டு மனோகர், ஹெலன்

‘பாதிரியார் நல்லவர், அவர் தன்னிடம் தவறாக நடக்கவில்லை’ என்று சிறுமியைக் கட்டாயப்படுத்தி பேசவைத்து அதை வீடியோவாகவும் பதிவுசெய்திருக்கிறார்கள்

சென்னையில் மத போதகர் வேடத்தில், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியாரையும் இந்தக் கொடுமைகளுக்குத் துணைபோன அவருடைய மனைவியையும் கைதுசெய்திருக்கிறது மடிப்பாக்கம் காவல்துறை!

சென்னை ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரில் சர்ச் ஒன்றை நடத்திவருகிறார் பாதிரியார் ஷெரால்டு மனோகர். சர்ச்சுக்கு வரும் சிறுமிகள், பெண்களிடம் அவர், பாலியல் தொந்தரவு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. பாட்டியுடன் வசித்துவந்த சிறுமி ஒருவருக்கு, தன்னுடைய நிர்வாண செஃல்பி, ஆபாச மெசேஜ்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பாதிரியார் ஷெரால்டு கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பாதிரியாரின் மனைவி ஹெலனும் இதற்கு உடந்தையாக இருந்ததால், அவரையும் போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

நிர்வாண செல்ஃபி, ஆபாச மெசேஜ்... சிறுமியிடம் எல்லைமீறிய பாதிரியார்!

இது குறித்துப் பேசுகிற மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், ``பாதிரியார் ஷெரால்டு இலங்கையைச் சேர்ந்தவர். உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு இங்கேயே தங்கிவிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ‘பாதிரியார் ஷெரால்டு மனோகர், என்னுடைய பேத்திக்கு ஆபாச போட்டோ, மெசேஜ்களை அனுப்பியதோடு பாலியல் தொல்லையும் கொடுத்து வருகிறார். அதனால் மனதளவிலும் உடலளவிலும் என்னுடைய பேத்தி பாதிக்கப்பட்டிருக்கிறார்’ என்று புகார் கொடுத்தார் ஒரு மூதாட்டி. இதையடுத்து ஷெரால்டு, சிறுமிக்கு அனுப்பிய மெசேஜ்களை அவரிடமே காண்பித்து விசாரித்தபோது, ‘நான் இந்த மெசேஜ்களை அனுப்பவில்லை’ என்று மறுத்தார்.

உடனே அவரின் செல்போனைப் பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதில் மெசேஜ்கள், போட்டோக்கள் அழிக்கப்பட்டிருந்தன. அதனால் ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலம் அவற்றை மீட்டெடுத்தோம். அதில், அவர், நிர்வாணமாக செஃல்பி எடுத்து சிறுமிக்கு அனுப்பியிருப்பது தெரியவந்தது. அதோடு ‘கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தவறில்லை’ என்ற மெசேஜையும் அனுப்பியிருந்தார். அதைக் காட்டி விசாரித்தபோதுதான் உண்மையை ஒப்புக்கொண்டார்.

சில நாள்களுக்கு முன்பு, பாதிரியாரின் மனைவி ஹெலன் உள்ளிட்ட சிலர், ‘பாதிரியார் நல்லவர், அவர் தன்னிடம் தவறாக நடக்கவில்லை’ என்று சிறுமியைக் கட்டாயப்படுத்தி பேசவைத்து அதை வீடியோவாகவும் பதிவுசெய்திருக்கிறார்கள். எனவே பாதிரியாரின் மனைவி ஹெலனையும் கைதுசெய்திருக்கிறோம். இந்த வழக்கில் பாதிரியாரின் டிரைவர் உட்பட மூன்று பேரைத் தேடிவருகிறோம். பாதிக்கப்பட்ட சிறுமியைத் தவிர இன்னும் சிலருக்கும் பாதிரியார், பாலியல் தொல்லை கொடுத்த தகவல் தெரியவந்திருக்கிறது. ஆனால் அவர்கள் தைரியமாகப் புகார் கொடுக்க முன்வரவில்லை” என்றனர்.

இது போன்ற சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலாகப் புகார் கொடுக்க முன்வருவதே குற்றங் களின் எண்ணிக்கையைக் குறைக்கும்!