`சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும்’ என்பது தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை. அதன் ஒரு பகுதியாக, சென்னை டு கடலூர் (வழி: பாண்டிச்சேரி) திட்டத்தை 2003-04-ம் ஆண்டில் முன்னெடுத்தார் அப்போதைய ரயில்வே இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி. இதற்காக ஹெலிகாப்டரில் சென்று ஆய்வும் நடத்தினார். இதன் ஆய்வுப் பணிக்காக 2003-04-ம் ஆண்டு 14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அவ்வளவுதான்... அத்தோடு சரி, இந்தத் திட்டத்துக்காக நடப்பட்ட கற்களைக்கூட யாரும் அசைக்கவில்லை!

சென்னையிலிருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாகக் கடலூர் வரை 179.28 கி.மீ தூர இருப்புப் பாதைத் திட்டத்துக்கு 2008-09-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.2,350 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ‘சென்னை டு கடலூர் ரயில் திட்டத்தை, கன்னியாகுமரி வரையில் நீட்டிப்பேன்’ என்று உறுதியளித்தார் கடந்த முறை மத்திய இணையமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன். ம்ஹூம்... எதுவும் நடக்கவில்லை!

‘‘இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், கடலோர மாவட்டங்கள் வளர்ச்சியடைந் திருக்கும். மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளும் கிழக்கு கடற்கரையோர மாவட்டங்களும் வளர்ச்சிப் பாதையில் சென்றிருக்கும். கடலூரிலிருந்து சென்னைக்கு விழுப்புரம் வழியாக 100 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியதில்லை. ஆனால், கடந்த பட்ஜெட்டில் வெறும் 1,000 ரூபாயை மட்டுமே ஒதுக்கி, திட்டத்தை இழுத்து மூடி விட்டது மத்திய அரசு’’ என்று கொந்தளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

‘‘ஏறக்குறைய 16 ஆண்டுகளாக இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என நம்பி ஏமாந்ததுதான் மிச்சம். இது, தமிழ்நாட்டையும் புதுச்சேரியையும் நேரடியாக ரயில் மூலம் இணைக்கும் மிக முக்கியமான திட்டம். புதுச்சேரியில் வசிப்பவர்கள் வியாபாரம், அலுவலகப் பணி உள்ளிட்ட காரணங்களுக்காக விழுப்புரம் சென்றே, சென்னைக்கு ரயிலில் பயணிக்க முடிகிறது. இதனால், கூடுதலாக, 38 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருக்கிறது. முதலில் 320 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் 600 கோடியாக உயர்ந்தது. அதன் பிறகு 1,200 கோடியாக உயர்த்தினர். இதன் செலவுத் தொகையும் நான்கு மடங்காக அதிகரித்தது’’ என்று விவரித்தார் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யூ) உதவித் தலைவர் இளங்கோவன்.

தொடர்ந்து நம்மிடம் பேசியவர், ‘‘சென்னை டு கடலூர் இருப்புப்பாதை, முதலில் நேராகச் செல்வதுபோலத்தான் வடிவமைக்கப்பட்டது. பின்னர், செங்கல்பட்டு அருகில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ரயில்வே நிர்வாகமும் அதை ஏற்றுக்கொண்டது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், மீனவ மக்களும், விவசாயிகளும், கல்விக்காகச் சென்னைக்கு வரக்கூடிய மாணவர் களும் பெரிதும் பயனடைந்திருப் பார்கள். ஆனால், அதற்கான எந்த முயற்சிகளையும் ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை.

இத்துடன் சேர்த்து மதுரை டு தூத்துக்குடி (வழி: அருப்புக்கோட்டை), திண்டிவனம் டு திருவண்ணாமலை, திண்டிவனம் டு நகரி, அத்திப்பட்டு டு புத்தூர், ஈரோடு டு பழநி, ஸ்ரீபெரும்புதூர் டு கூடுவாஞ்சேரி, மொரப்பூர் டு தருமபுரி, ராமேஸ்வரம் டு தனுஷ்கோடி, பெங்களூரு டு சத்தியமங்கலம் ஆகிய இருப்புப்பாதைத் திட்டங்களுக்கும் மூடுவிழா நடத்திவிட்டார்கள். மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி யெழுப்பினார். மத்திய அரசிடமிருந்து பதிலில்லை” என்றார் கோபமாக.

‘‘அரசுத் துறைகளுக்குள் ஏற்பட்ட மோதலும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வராமல் போனதற்கு முக்கியக் காரணம்’’ என்கிறார் பழைய மாமல்லபுரம் சாலையில் (ஓ.எம்.ஆர்) வசிக்கும் சமூக ஆர்வலர் சமரன். இது குறித்து நம்மிடம் பேசியவர், ‘‘இந்தத் திட்டம் கால்வாய்க் கரையோரமாகச் செயல்படுத்தப்பட விருந்ததால், இதற்கான நிலத்தைக் கையகப்படுத்துவதில் பொதுப்பணித் துறையின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. அவர்கள் வருவாய்த்துறை மூலமாக ஆய்வு நடத்தி மதிப்பீட்டை அளித்திருக்க வேண்டும். இரு துறைகளுக்குள் ஏற்பட்ட ஈகோ பிரச்னைகளாலும் மோதலாலும் வேலைகள் எதுவும் நடக்கவில்லை. இந்தத் திட்டம் நிறைவேற்றப் பட்டால், சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்துக்குக் கடலூரி லிருந்து ரயிலில் செல்லலாம். கிழக்கு கடற்கரை சாலையில் வாகனப் போக்குவரத்து குறையும், வாகன நெரிசல் தவிர்க்கப்படும். ஆனால், மத்திய அரசு இந்தத் திட்டத்தையே மறந்துவிட்டது’’ என்றார் ஆதங்கத்துடன்.

பா.ம.க-வைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தியிடம் பேசினோம். ‘‘ஈ.சி.ஆரிலும் ஓ.எம்.ஆரிலும் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வந்துவிட்டன. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், ஈ.சி.ஆர் வழியாக கன்னியாகுமரி வரை சென்றுவிடலாம். நிலக்கரி இறக்குமதி, சென்னை, கடலூர் துறைமுகங்கள் இணைப்பு எனப் பல வகைகளில் இந்தத் திட்டம் உதவியாக இருந்திருக்கும். கால்வாய்க்கரை ஓரங்களில் ஏராளமான நிலங்கள் இருப்பதால், கையகப்படுத்தும் வேலைகளிலும் சிரமம் இல்லை. தமிழக எம்.பி-க்கள் அத்தனை பேரும் சேர்ந்து போய் பிரதமரைச் சென்று பார்த்தால் இந்தத் திட்டம் நிறைவேறும். இதுவே கேரளாவாக இருந்தால், உடனே சென்று கேட்டிருப்பார்கள். இந்தத் திட்டத்தை மக்களுக்காகச் செயல்படுத்த நினைத்தேன். இதுவரை முடியவில்லை” என்றார் வேதனையுடன்!

தி.மு.க கூட்டணியிலுள்ள எம்.பி-க்கள் நினைத்தால், திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம்... மனம் வைப்பார்களா எதிர்க்கட்சித் தலைவர்கள்?